QUIZ காஞ்சீபுரம் பத்து QUIZ (Post No.12,275)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,275

Date uploaded in London – –  14 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேள்வி -பதில் பகுதியில்  இது 39 ஆவது க்விஸ்

1. பட்டுச் சேலைக்குப் பெயர்போன காஞ்சீபுரம் யாருடைய தலைநகராக இருந்து சீரும் சிறப்பும் பெற்றது?

xxxxx

2.காஞ்சீபுரம் உள்ள பகுதியை எந்த நாடு என்று சொல்லுவார்கள் ?

xxxx

3.சோழ நாடு சோறுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்து … அப்படியானால் காஞ்சீபுரம் உள்ள நாடு எது உடையது ?

xxxxx

4.காஞ்சீபுரத்தில் மாமரத்துக்குள்ள  சிறப்பு என்ன?

XXXXX

5.காமாட்சி கோவிலுக்குள் உள்ள வைணவ திவ்ய க்ஷேத்திரம் எது ?

XXXX

6.பஞ்சபூத ஸ்தலங்களிலும், ஏழு மோக்ஷ புரிக்கள் பட்டியலிலும் காஞ் சிக்கு உள்ள சிறப்பு என்ன ?

XXXX

7. காஞ்சீபுரத்தில் அத்திவரதரின் புகழ் பரவுவது ஏன் ?

Xxxxx

8.காஞ்சீபுரத்தில் எத்தனை பகுதிகள் உள்ளன? குறைந்தது எத்தனை கோவில்கள் இருக்கின்றன?

Xxxx

9.காஞ்சீபுரத்தில் உள்ள மியூசியத்தின் , பல்கலைக்கழகத்தின்  பெயர்கள்  என்ன ?

Xxxxx

10. கந்தபுராணம் எங்கு அரங்கேறியது ?

விடைகள்

1.பல்லவர் தலைநகர்

xxxxxx

2.தொண்டை நாடு

xxxxx

3.வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து—என்றார் ஒளவையார்

xxxxx

4.ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தல மரம் –மாமரம்

xxxx

5.காமாட்சியின் பெருமையை அனைவரும் அறிவர். ஆயினும் அந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் – கருவறையில் — ஒரு திவ்ய தேசம் இருப்பது பலருக்கும் தெரியாது  காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள், அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலப்பக்கத்தில் திருக்கள்வனூர் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.

xxxxxx

6.பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி என்னும் மண் / பூமியைக் குறிப்பது காஞ்சீபுரம் ; ஏகாம் பரேச்வர கோவிலில் மணலில் லிங்கம் இருக்கிறது ; சப்த புரிக்கள் என்ற ஸ்லோகத்தில் காஞ்சி உள்ளது .

xxxxxx

7.காஞ்சிபுரத்தில் . கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் அனந்தசரஸ் எனப்படும் நீராழி மண்டபத்தில் நீரில் மூழ்கியபடி கருங்கற்கலால் ஆன பாறைக்குள் அத்திமரத்தால் ஆன அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் இருக்கிறார்  இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

xxxxxx

8.காஞ்சீபுரத்தில் சின்ன காஞ்சி , பெரிய காஞ்சி , ஜைன காஞ்சி  என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன குறைந்தது 108 கோவில்கள் உள்ளன (இதே பிளாக்கில் 108 கோவில்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

xxxxxx

9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியம் ; Shakuntala Jagannathan Museum of Folk Art

காஞ்சீபுரத்தில் பல்கலைக்கழகத்தின்  பெயர்–ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வா மகாவித்யாலயா காஞ்சீபுரம் -631 561Sri Chandrasekarendra Saraswathi Viswa Maha Vidyalaya [ SCSVMV ] is deemed university at Kancheepuram.

xxxxx

10.காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். அவர் எழுதிய கந்தபுராணம் காஞ்சீபுரத்தில் குமரகோட்டத்தில் அரங்கேறியது

அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக’ என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் ..

Xxxxxxx subham xxxxxxx

Tags

காஞ்சி , காஞ்சிபுரம்  , பல்கலைக்கழகம் , மியூசியம், மா மரம், அத்தி  வரதர் , கந்த புராணம்  , Quiz

Leave a comment

Leave a comment