
Post No. 12,278
Date uploaded in London – – 15 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேள்வி -பதில் பகுதியில் இது 40- ஆவது க்விஸ்
1.கண்ணப்பநாயனாரின் நாடு எது ? ஊர் எது?
XXXX
2.அவருடைய தாய் தந்தை யார் ?
XXXX
3.சிலர் வாழ்நாள் முழுதும் சிவனைத் துதித்து அவனைக் கண்டதில்லை. கண்ணப்பர் எத்தனை நாட்களில் சிவ பெருமானைக் கண்டார்?
XXX
4.காளத்தி என்னும் தலத்தின் மலையில் இது நடந்தது; அங்கு ஓடும் ஆற்றின் பெயர் என்ன ?
XXXX
5.கண்ணனப்ப நாயனார் கன்னிவேட்டைக்குச் சென்றபோது உடன் என்ற இரு வேடர்கள் யார் ?
XXXX
6.காட்டில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்த அந்தணர் பெயர் என்ன? மலையிலுள்ள இறைவனின் பெயர் என்ன?
XXX X
7.கண்ணனப்பருக்கு தாயும் தந்தையும் இட்ட பெயர் என்ன?
XXX
8.கண்ணப்பர் பற்றி மாணிக்கவாசகர், பட்டினத்தார் கூறியது என்ன?
Xxxxx
9.கண்ணப்பர் பற்றி சிவபெருமான் என்ன சொன்னார் (சேக்கிழார் கூற்றுப்படி):?.
xxxxx
10.அறுபத்து மூவர் சிலைகள், பெரிய சிவன் கோவில்களில் இருக்கும். அதில் கண்ணப்பனாரின் சிறப்பு என்ன?
Xxxxxxxxxxxxxxx

Answers
1.பொத்தப்பி நாடு; உடுப்பூர்
xxx
2.தந்தை பெயர் — நாகன்; தாய் பெயர்- தத்தை
xxx
3.ஆறே நாட்களில் கண்டார்
Xxxx
4.பொன் முகலி ஆறு
xxxx
5.நாணன், காடன்
xxxx
6.அந்தணர் பெயர் –சிவகோசரியார் ; இறைவனின் பெயர் –குடுமித்தேவர்
Xxxxx
7.திண்ணன் .
xxxxx
8.கண்ணப்பர் பற்றி மாணிக்கவாசகர்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணை
சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ
கண்ணப்பர் பற்றி பட்டினத்தார்
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
ஆளாவதெப்படியோ திருக் காளத்தி அப்பருக்கே
Xxxx
9.சிவகோசரியார் கனவில் சிவன் சொன்னது:
அவனுடைய வடிவெல்லாம்
நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம்
நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம்
நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வா
றறிநீயென் றருள்செய்வார்.
வலக்கண்ணைத் தோண்டி அப்பிவிட்டு இடக்கண்ணையும் எடுக்க முயன்ற கண்ணப்பரிடம் சிவன் கண்ணப்ப நிற்க என்று மூன்று முறை சொன்னார்.
தங்கண்முன் னிடக்குங் கையைத்
தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக்
கண்ணப்ப நிற்க வென்றே
Xxxxx
10.கண்ணப்பரின் சிலைதான் முதலில் இருக்கும்
—–subham—–
Tags- கண்ணப்ப நாயனார், quiz,