QUIZ  பிள்ளையார் பத்து QUIZ (Post No.12,283)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,283

Date uploaded in London – –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.தமிழ்நாட்டில் பிள்ளையார் பிரம்மச்சாரி; ஆனால் வடக்கே செல்லச் செல்ல அவரை இரண்டு துணைவியாருடன் காட்டுவர் ; அவர்கள் யார்?

XXXXX

2.வாதாபி கணபதி என்று சொல்லுகிறோம். அந்த வாதாபி எங்கு உள்ளது ?

XXX

3. நான் நாலு பொருள் தருகிறேன்; நீ எனக்கு மூன்று மட்டும் கொடுத்தால் போதும் என்று அவ்வையார் சொன்னாரே அந்த 4 என்ன 3 என்ன?

Xxxxx

4.வேத மந்திரங்களைச்  சொல்லுவோர் எல்லா யாக யக்ஞங்கள் பூஜை புனஸ்காரங்களை ஒரு வேத மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவர் . அது என்ன  மந்திரம் ?

xxxxx

5.ஆதிசங்கரர் இந்து மதத்தை ஆறு கடவுளரை வணங்கும் அறுசமயமாகப் பிரித்தார். கணபதியை  வணங்கும்  பிரிவுக்கு என்ன பெயர்?

Xxx

6. வங்கத்தில் துர்கா பூஜை போல எந்த மாநிலத்தில் பெரிய, பல நாட்கள் விழாவாக கணேஷ் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது? யார் அதை தேசீயத் திருவிழாவாக மாற்றினார்?

Xxxx

7.சிறுத்தொண்டர் கொண்டுவந்த வாதாபி கணபதி எங்குள்ளது?

Xxxx

8.தமிழ் நாட்டைப்போல பிள்ளையார் வழிபாடு அதிகமான மாநிலம் மகாராஷ்டிரம் . அங்கு எத்தனை கோவில்களை ஒரே சுற்றில் கும்பிடுவது  மரபாக இருக்கிறது ?

Xxxx

9.விநாயகர் மீதான அகவலை எழுதியவர் யார் ? முதாகராத்த மோதகம் என்ற சம்ஸ்க்ருத சுலோகத்தை எழுதியவர் யார் ?

xxxx

10.புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற பிள்ளையார் கோவில் பெயர் என்ன?

xxxxxxxxxxxx

விடைகள்

1. நாம் கணேசரை கும்பிட்டால் காரிய சித்தியும் , அவைகளை அடைய புத்தியும் கிட்டும் என்பதால் சித்திபுத்தி என்று சொல்லுவார்கள் .

xxxxx

2.கர்நாடகத்தில் பாதாமி என்ற பெயரில் இப்போது இருக்கிறது. .மொழியியல் ரீதியில் ப = வ , மி=பி ஆக மாறுவதை பல சொற்களில் காணலாம்.

xxxxx

3.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா

( நல்வழி : கடவுள் வணக்கம் )

Xxxx

4.ஸ்ரீ கணபதி த்யானம்!!

ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம்

ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:

ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம் (Rig Veda)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

Meaning

ஓம் கணநாயகனே கணபதி உனை அழைக்கின்றோம்

அறிஞருள் மிக்க அறிவுடையோனே! நிகரில்லாப் புகழுடையோய்!

தலைசிறந்த தலைவன் நீ! மறைகளின் முதல்வன் நீ!

எம் அழைப்பிலே மனமகிழ்ந்து அழகோடு அமர்ந்தருள்வாய்!

அருள்மிகு மஹா கணபதியே போற்றி!

गणानां त्वा गणपतिं हवामहे

कविं कवीनामुपमश्रवस्तमम् ।

ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत

आ नः शृण्वन्नूतिभिः सीद सादनम् ॥

Gannaanaam Tvaa Ganna-Patim Havaamahe

Kavim Kaviinaam-Upama-Shravastamam |

Jyessttha-Raajam Brahmannaam Brahmannaspata

Aa Nah Shrnnvan-Uutibhih Siida Saadanam ||

xxxxxx

5.காணாபத்யம்

xxxxxx

6.மஹாராஷ்டிரத்தில்; பால கங்காதரத் திலகர் அதை பெரிய மாநில அளவு விழாவாக மாற்றினார்.

Xxxxx

7.வாதாபி கணபதி: நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்கட்டாங்குடி என்னும் ஊரில் உள்ளது . சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் இது.  முதலாம் நரசிம்மவர்ம பல்லவரின் படைத்தலைவராக இருந்தபோது சாளுக்கியத் தலைநகர் வாதாபி (இன்றைய பதாமி) யை அழித்து அங்கிருந்து கொண்டு வந்தது .  திருச்செங்கட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் அதை நிறுவினார்.

xxxxx

8.அஷ்ட விநாயகர் என்னும் எட்டு கோவில்களை ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு. மீண்டும் அதே இடத்தில் வந்தது வணங் குவது சம்பிரதாயம்

xxxx

9.சீதைக்கு களபச் செந்தாமரைப்பூம் …என்று துவங்கும் விநாயகர் அகவலை எழுதியவர் அவ்வையார்.

முதாகராத்த மோதகம் …. சங்கரர்

xxxxx

10.மணக்குள விநாயகர் கோவில் ; பாரதியாரும், அரவிந்தரும் வணங்கிய பெருமை உடைத்து .

Xxxx  subham xxxxx

Tags – பிள்ளையார், விநாயகர் , க்விஸ்,Quiz

Leave a comment

Leave a comment