
Post No. 12,291
Date uploaded in London – – 18 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?
XXXX
2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள் இருக்கின்றன ?
XXXX
3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?
XXXXXX
4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?
XXXXX
5.வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?
XXXXX
6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?
XXXX
7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?
XXXXXX
8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?
XXXX
9.பெருமாள் எப்படி உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?
XXXX
10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும் திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?
XXXXXXXXXXXX

விடைகள்
1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்
.XXXX
2.திருமலை-திருமலை கோவிலிலும் அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர் காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .
XXXX
3. குலசேகர ஆழ்வார்
XXXXX
4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா
XXXX
5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.
இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .
कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।
उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana
kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।
uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥
Valmiki Ramayna Translation, 1.23.2
O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.
The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.
XXXX
6.வடவேங்கடம் முதல் தென்குமரி
தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
X
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு
(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)
X
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )
XXXX
7.ஆகாய கங்கா.
திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
XXXX
8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:
Vrushabhadri – விருஷபாத்ரி
Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)
Neeladri – நீலாத்ரி
Garudadri or Garudachalam – கருடாத்ரி
Seshadri or Seshachalam – சேஷாத்ரி
Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி
Venkatadri – வேங்கடாத்ரி
XXXX
9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்..
XXXX
10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.
XXXX SUBHAM XXXXX
TAGS– திருமலை, வெங்கடாசலபதி, வியப்பான , விஷயங்கள், அதிசயங்கள், முருகனா குலசேகர ஆழ்வார், அருணகிரிநாதர், குபேரன், ஏழுமலைகள் , வேங்கடம், திருப்பதி,