கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 10 (Post No.12,308)

Somanathapura Temple, Karnataka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,308

Date uploaded in London – –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

51.ஆண்டாள் கண் ஒளிரும் எடத்தலை கோவில் Hedathale Lakshmikantha Swami temple

நஞ்சன்  கூடு  தாலுகாவில் உள்ள லெட்சுமிகாந்த கோவிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன . இடது தலை என்பது ஊரின்  சரியான பெயர்.. இங்கு  லெட்சுமிகாந்த சுவாமி கோவில் உளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹொய்சாளர் கால கோவில். இது  த்ரிகூட கூட கோவில்; அதாவது 3 சந்நிதிகள் இருக்கும்;  அவைகளை இணைக்கும் பொது மண்டபமும் இருக்கும் . இந்தக் கோவிலில் லெட்சுமிகாந்த சுவாமிக்கு அருகில் லெட்சுமிநரசிம்ம  சுவாமி, வேணுகோபால சுவாமிகளும் இரண்டு கர்ப்பக் கிரகங்களில் இருக்கின்றனர்.

இங்குள்ள அதிசயம் என்னவென்றால் ஹதினாறு முக சாவடி ஆகும். ஹதினாறு என்றால் தமிழில் 16  என்று பொருள். இந்த மண்டபம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுளது . இரண்டாம் வீர வல்லாளன் 1187ல் கட்டிய கோவில். அவர் காலத்தில் பீம தண்ட நாயக ஒரு பாளையக்காரர் .

அவருக்கு  (பாளையக்காரருக்கு) 16 பெண்களாம்.. மாமியார்கள் , மாப்பிள்ளைகளை நேரடியாகப்  பார்க்கக்கூடாது என்பதால் 16 முக மண்டபத்தைக் கட்டினார் . 16 ஜோடிகள் அமரும்போது   பாளையக்காரரின் மனைவி– அதாவது மாமியார் , 16 பெண்-மாப்பிள்ளைகளைக் காண முடியாது. இதற்காக அற்புதமாக டிசைன் செய்யப்பட்டது இந்த ஹதினாரூ/ பதினாறு முக சாவடி/ மண்டபம் !!

இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயமும் உண்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கும் இங்கே கர்ப்பக்கிரகம் உள்ளது. அர்ச்சகர் தீவாராதனை காட்டும்போது ஆண்டாளின் கண்கள் பளபளக்கும் . அப் போது பக்தரை  ஆண்டாள் பார்ப்பது போலத்  தோன்றும் !

எடத்தலை , மைசூரு நகரிலிருந்து 40 கி.மீ .

XXXX

52. சோம்நாத்பூர் கோவில் Chennakeshava Temple, Somanathapura

மைசூரு நகரிலிருந்து 33 கி.மீ .தொலைவில் கட்டிடக் கலை சிறப்புமிக்க சோம்நாத்பூர் கோவில் அமைந்துள்ளது.

மூன்றாம் நரசிம்மனின் தண்ட நாயக்க சோமநாதனால் 1258 ஆம் ஆண்டு கட்டப்பட்டது  இக்கோவில் .

சுவர்கள் முழுக்க ராமாயண , மஹாபாரத , பாகவதக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன . கேசவர், ஜனார்த்தனர் , வேணு கோபாலர் சந்நிதிகள் சபா மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன ; நிறைய கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது . கோவிலின் கூ ரைகளில் கூட பல வித மலர் வடிவங்களைக் காணலாம்

இங்கு சிவனும் இருப்பதால் சோமநாத என்ற பெயர் ஏற்பட்டது

ஹொய்சாளர்கள் கட்டிடக்கலை மன்னர்கள்; 1500 சமணர் கோவில் , இந்துக் கோவில்களைக் கட்டினார்கள் . அலாவுதீன் கில்ஜியின் படைத்ததலைவன் மாலிக்காபூர். தென் இந்தியா  முழுதுமுள்ள கோவில்களைத் தாக்கி தங்கத்தை டன் கணக்கில் கொள்ளையடித்துச் சென்றான் இந்தக் கோவிலையும் தாக்கிச்  சேதப்படுத்தினான். அவன் அசுரர்களின் மறு  அவதாரம். ;பின்னர் துலுக்க ஆட்சிக்கு சாவு மணி அடித்த விஜய நகரப் பேரரசர்கள் பல திருப்பணிகளைச் செய்து இந்து மதத்தைக் காப்பாற்றினர் .கோவிலில் உள்ள புராணக் காட்சிகளின் பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு காட்சியையும் வருணிக்க ஒரு புராணக் கதையைச் சொல்லவேண்டிவரும் .

XXXX

53.தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் Talakkad Temples

மைசூரு நகரிலிருந்து 28 மைல் தொலைவில் இருக்கும் தலக்காடில் முப்பது கோவில்கள் இருக்கின்றன . அவைகளில் பஞ்ச லிங்கேஸ்வரர் கோவில்கள் முக்கியமானவை; .ஸ்ரீ வைத்யனாதேஸ்வரர் , மருளேஸ்வர் பாதாளேஸ்வர் , அர்கேஸ்வர், மல்லிகார்ஜுன கோவில்கள்  ஆகியன இவற்றில் அடக்கம்

வைத்யநாதேஸ்வரர் கோவிலில் நிறைய சிற்பங்களை க் காணலாம்

தலக் காடு சாபங்கள்

ஸ்ரீங்கப்பட்டிணத்தில் இருந்த விஜயநகர பிரதிநிதியின் பெயர்  திருமலை ராஜா;   அவர் ஒரு நோய் காரணமாக இங்கே வைத்யநாதரை வழிபடவந்தபோது, இறுதிக்கா லத்தில் அவர் மனைவி அலமேலு அம்மாள் இங்கு வந்தார். . அவர் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க மைசூரு மஹாராஜா அவரை விரட்டிச் சென்றதாகவும் ஆனால்  அந்தப்  பெண்மணி தனது நகைகளை காவிரி நதியில் வீசி எறிந்துவிட்டு எதிரில் இருந்த மாலங்கியில் விழுந்து இறந்ததாகவும் சொல்லப்படுகிறது அப்போது அவர் 3 சாபங்களை இட்டார்.

தலக்காடு, பாலைவனம் ஆகட்டும் ;

மாலங்கி சுழல் நிறைந்ததாகட்டும் ;

மைசூரு மஹாராஜா வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும்.

Talkādu Maralaāgi,

Mālingi maduvaāgi,

Mysuru dhorege makkalagade hōgali!

(ತಲಕಾಡು ಮರಳಾಗಿ; ಮಾಲಿಂಗಿ ಮಡುವಾಗಿ, ಮೈಸೂರು ದೊರೆಗೆ ಮಕ್ಕಳಾಗದೆ ಹೋಗಲಿ

இது ஓரளவுக்கு உண்மையே; மணலில் புதைந்திருந்த இரண்டு கோவில்களை மணலை அகற்றி வெளியே எடுக்க வேண்டியதாயிற்று. இவை எல்லாம் 1650 ஆம் அண்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகள்.

Xxxxx

54.நஞ்சுண்டேஸ்வரர் கோவில் Nanjundeshwara Temple (also called Srikanteshwara Temple)

Sri Nanjundeswarar Temple

காவிரியில் கலக்கும் கபில நதியின் கரையில் , நஞ்சன்கூடில் அமைந்த இக்கோவிலை தட்சிணப் பிரயாகை என்று அழைப்பர்

120 அடி உயரமுள்ள ஒன்பது நிலைக் கோபுரத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் மனைவி தேவராஜ அம்மணி கட்டினார்.. பாற்கடலை கடை ந்தபோது  தோன்றிய விஷத்தை சிவன் அருந்தியதால் சிவனுக்கு நஞ்சுண்ட சுண்டன் , நீல கண்டன், ஸ்ரீகண்டன் என்ற பெயர்கள் உண்டு. அருகில் பரசுராமர் கோவிலும் இருக்கிறது ; பரசுராமர் இங்கு வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம் .

திப்புசுல்தான் நன்கொடை

திப்பு சுல்தானின் யானை குருடனாவுடன் , அவனது அமைச்சர் பூர்ணய்யாவின் ஆலோசனைப்படி யானையை  நஞ்சன்கூடு  கோவிலுக்கு அனுப்பி 48 நாட்களுக்கு சில பூஜைகளைச் செய்தவுடன், யானைக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது. இதற்கு நன்றி செலுத்தும் முகத்தான், கோவிலுக்கு திப்பு சுல்தான் மரகத லிங்கம் ஒன்றை காணிக்கையாக அளித்தான் . சிவ பெருமானை ஹகீம் (வைத்தியர் )நஞ்சுண்டன் என்று அழைத்தான்.

To be continued………………………………………….

tags  – ஆண்டாள் கண், நஞ்சுண்டேஸ்வரர் , நஞ்சன்கூடு  , திப்பு சுல்தான், தலகாடு சாபங்கள், சோமநாதபுரம் , 16 முக மண்டபம், ஹதினாறு 

Leave a comment

Leave a comment