Post No. 12,317
Date uploaded in London – – 24 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
PART ELEVEN
55..Male Mahadeshwara Betta (Kannada: ಮಲೆ ಮಹದೇಶ್ವರ (also ಮಾದೇಶ್ವರ)) (Tamil: மாதேசுவரன் மலை )
புலி மீது வந்த சித்தர் கோவில்
சுமார் 3200 அடி உயரம் உடைய மாதேஸ்வரன் மலைக்கு லட்சக்கணக்கான பகதர்கள் வருகின்றனர் மைசூரு நகரிலிருந்து 150 கி.மீ . தொலைவில் உள்ளது . மாதேஸ்வரர் என்ற சித்தர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் சித்த மருத்துவத்தைப் பிரபலப்படுத்தினார் ; அவருக்கும் இங்குள்ள கோவிலுக்கும் தமிழ் நாடு உள்பட 3 மாநிலங்களில் பக்கதர்களும் சொத்துக்களும் இருக்கின்றன .மாதேஸ்வரன் , சிவபெருமானின் அவதாரம் என்று பக்தர்கள் கருதுகின்றனர் லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் ஆக அவர் இன்னும் தவம் செய்வதாகவும் நம்புகின்றனர். அவர் புலியின் மீது சவாரி செய்து மக்கள் துயர் தீர்த்த அற்புதங்கள் பற்றி நிறைய சம்பவங்கள் உள்ளன. அடர்ந்த காடுகள் சுற்றிலும் உள்ளன. இயற்கை அன்பர்களும் , மலை ஏறும் குழுக்களும் இங்கே படை எடுப்பது வாடிக்கை.
XXXX
கடவுளின் காலணிகள் உள்ள கோவில்
56.Biligiri Ranganath swamy Temple பிலி கிரி ரங்கநாத சுவாமி கோவில்
சுமார் 5000 அடி உயர குன்றின் மீது அமைந்த பாலாஜி கோவில் இது . சரஸ்வதி, கிருஷ்ணர், ஆஞ்சனேயர் சிலைகளும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. மிகப் பழைய சம்பக மரங்களும் இருக்கின்றன ரங்க நாதர் , ரங்க நாயகி மூர்த்திகள் வழிபடப்படுகின்றன. பெரிய காலணிகள்/ பாத குறடுகள் உள்ளன. அவைகளை அணிந்து ரங்க நாதர் காடுக ளில் உலா வருவார் என்பதால் அவற்றை புதிதாக செய்து தரும் சம்பிரதாயமும் இங்கே இருக்கிறது . இது ஒரு புதுமை ஆகும் ராம, லட்சுமணர் வழிபட்ட இடம் என்பது ஐதீகம்.
இங்கு கங்காதரேச்வரருக்கு தனி சந்நிதி இருக்கிறது
மைசூரிலிருந்து 100 கி.மீ தொலைவு
xxxxx
மைசூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் கோமடகிரி இருக்கிறது ; குன்றின் மீது சமண மத பக்தர்கள் கோமடேஸ்வர சிலையை நிறுவி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா மஸ்தகாபிஷேகம் நட த்துகின்றனர் . இது சிரவண பெலகோலா மாதிரியில் இருக்கும்.
xxxxxx
57.மடிக்கரே ஓம்காரேஸ்வர் கோவில், அவனி ராம லிங்கேஸ்வர் கோவில் Avani Ramalingeshwara temple

சிவபெருமானுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த தற்காலக் கோவில் மடிக்கரே ஓம்காரேஸ்வர் கோவில். குடகு பகுதியில் காவிரி நதியை ஒட்டி பல கோவில்கள் இருக்கின்றன . அவைகளில் மடிக்கரே யிலிருந்து 15 கி.மீ . தொலைவில் இருக்கும் அவனி ராம லிங்கேஸ்வர் கோவில் சிவன் கோவில் ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது கோலார் தங்கச் சுரங்கத்திலிருந்து 32 கிமீ.
ராமர் வழிபட்ட இடம் என்பது நம்பிக்கை. இங்குள்ள கோவில்களில் ராம, லட்சுமண, பரத , சத்ருக்குனருக்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன . அத்தோடு சீதை, வாலி, சிவன் ஆகிய மூர்த்திகளும் உண்டு .
லட்சமண லிங்கேஸ்வரர் கோவிலில் பெரிய லிங்கம் உள்ளது
நுளம்ப , சோழ வம்ச மன்னர்களின் கைவண்ணத்தைக் காணலாம். நிறைய பார்க்கவேண்டிய சிற்பங்கள் இருக்கின்றன . அருகிலேயே லவ குச மலைகளும் இருக்கின்றன . சீதாதேவியைக் காண 600 படிகள் ஏறி குன்றின் உச்சிக்குப் போகவேண்டும் . ராமாயணமே இங்குதான் நடந்தது என்ற அளவுக்கு கதைகள் பின்னப்பட்டுள்ளன!!!
Xxxx
திப்பு சுல்தான் எரித்த சிவன் கோவில்
58.பாக மண்டலம் சிவன் கோவில் Bhagamandala, Coorg/Kodagu (Kudaku in Tamil)

திப்பு சுல்தான் எரித்து முஸ்லீம் பெயர் சூட்டிய இந்துக்களின் புனிதத்தலம்
திரிவேணி சங்கம் என்றால் மூன்று நதிகள் கலக்கும் புனித கூடல் ஆகும். உத்தர பிரதேசத்தில் பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமம் உலகப் பிரசித்தி பெற்ற இடம். கும்பமேளா என்னும் உலகின் மி கப்பெரிய ண்டிகையைப் பேசாத என்சைக்ளோபீடியா கிடையா து. அது போல கனிகா , ஸுஜோதி என்னும் இரண்டு நதிகளும் காவிரியில் வந்து சேரும் இடம் பாக மண்டலம். காவிரியின் தோற்றுவாய்க்கு அருகில் உள்ளது , மைசூரு அல்லது மங்களூரிலிருந்து பல மணி நேரம் காரில் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யவேண்டும்.. மடிக்கரே யிலிருந்து 33 கிமீ..
பிரயாகையில் எப்படி சரஸ்வதி நதியைக் காணமுடியதோ, அதேபோல இங்கும் மூன்றாவது நதியான சுஜோதியைக் கண்ணால் காண முடியாது; பூமிக்கு அடியில் ஓடிவந்து கலப்பதாக ஐதிகம்
சிவபெருமான், சுப்ரமண்யர், கணபதி மூர்த்திகள் உள்ள கோவில் இருக்கிறது. முக்கூடலில் குளித்து முன்னோர்களுக்கு கிரியைகள் செய்து அதற்கும் மேலேயுள்ள தலைக் காவிரிக்குச் செல்லுவது சம்பிரதாயம். .
துலா மாத ஸ்னானம் செய்வது மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது..

1785-1790 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தை திப்பு சுல்தான் ஆக்ரமித்தான். கோவிலை எரித்து அழித்தான் .
அப் ஸாலா பாத் Afzalabad என்று பெயரையும் மாற்றினான் . தொ ட்ட வீர ராஜேந்திர என்ற இந்து வீரன் இந்த இடத்தை மீட்டு பாக மண்டலம் ஆக்கினான் ; குடகு ராஜ்யத்துடன் இணைத்தான்.
பாடி , ஐயங்கேரி என்னும் அருகாமை இடங்களில் கிராம மக்கள் வழிபடும் தெய்வங்களும் இருக்கின்றன.
Xxxxx
To be continued…………………………………………………
Tags- புலி, சித்தர் , பாகமண்டலம், திப்புசுல்தான், ராமலிங்கேஸ்வரர் கோவில், காலணிகள்,
