வியாஸ சுபாஷித சங்க்ரஹா (Post No.12,320)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,320

Date uploaded in London –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

வியாஸ சுபாஷித சங்க்ரஹா

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 4

ச.நாகராஜன்

வியாஸ சுபாஷித சங்க்ரஹா என்ற இந்த சம்ஸ்கிருத சுபாஷிதத் தொகுப்பு நூல் ஒரு அரிய நூல். இது வியாஸ சதகம் என்றும் கூறப்படுகிறது.

இதை இயற்றியவர் சூரிய கலிங்கராஜா என்று சில அறிஞர்கள் கூற, சிலர் அதை மறுக்கின்றனர்.

இப்போதுள்ள ஓலைச் சுவடி வடிவில் இது பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்படுகிறது. 

இந்தச் சுவடி 99 செய்யுள்களைக் கொண்டுள்ளது. ஶ்ரீ வியாஸ சதகம் ஶ்ரீ துர்காயை நமஹ என்று நூல் ஆரம்பிக்கிறது. சதகம் என்றால் நூறு என்று பொருள். கீழ்க்குறிப்புகளில் உள்ள ஸ்லோகங்களையும் சேர்த்துப் பார்த்தால் இதில் 110 செய்யுள்கள் உள்ளன.

வியாஸர் கூறுவதாக அமைந்துள்ள இந்த ஸ்லோகங்கள் மஹாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளவை என்று சம்ஸ்கிருத அறிஞர் V.ராகவன் கூறுகிறார்.

வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இதில் வியாஸர் கூறுகிறார். 

எல்லா ஸ்லோகங்களும் அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்துள்ளவை. 

ஏராளமான சம்ஸ்கிருத இலக்கியங்களில் இந்த ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

 பாரதம் முழுவதும் உள்ள அறிஞர்கள் மட்டுமின்றி இது ஶ்ரீலங்காவில் பிரசித்தி பெற்ற நூலாக இது இருந்துள்ளது. அத்தோடு திபத், மங்கோலியா, பர்மா, சயாம், லாவோஸ், சம்பா, ஜியங்மை, பழைய ஜாவா ஆகிய நாடுகளிலும் இது பிரபலமாக இருந்திருக்கிறது.

இந்த நூலில் உள்ள சில சுபாஷிதங்களை இப்போது பார்ப்போம்:

நூலின் ஆரம்ப ஸ்லோகம் இது:

அஞானதிமிராந்தானாம் விப்ராந்தானாம் குத்யஷ்டபி |

ஞானாஞ்சனஷலாகாபிர்  வ்யாஸேனோந்மிலிதம் ஜகத் ||

ஞானக்கண்ணைத் திறக்கும் குருவிற்கு நமஸ்காரம் என்பது

இதன் திரண்ட பொருள்.

கேதகீகுஸுமம் ப்ருங்க: கர்ஜமபி ச சேவதே |

தோஷா: கிம் நாம குர்வந்தி குணாபஹ்ருதசேதஸ: ||

பொருள் : கேதகி மலரை நோக்கி  வண்டானது அதன் முட்கள் அதைக் குத்தி வருத்தினாலும் கூட உல்லாசமாக  அதனிடம் செல்கிறது.

நல்ல குணங்களை நாடும் ஒரு மனதிற்கு தோஷங்கள் என்ன தான் செய்ய முடியும்?

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயி வ்ருத்திர்மனஸ்வின: |

மூர்தின வா சர்வலோகஸ்ய ஷீர்யதே வன ஏவ வா ||

பொருள் : சுயமரியாதை உள்ள ஒருவனுக்கு வாழ்க்கையில் மலரைப் போல இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று மனிதர்களின் தலையில் இருப்பது அல்லது இரண்டாவது வழி – காட்டில் வாடி வதங்குவது!

இது போன்ற வியாஸர் கூறும் நீதிகளைத் தருவது இந்த நூல்.

இதை (Vyasa Subhasita Samgraha – Kashi Sanskrit Series 193)

1969ஆம் ஆண்டு சௌகாம்பா சான்ஸ்கிரிட் சீரீஸ் ஆபீஸ், வாரணாசி – 1 (CHOWKHAMBA SANSKRIT SERIES OFFICE, VARANASI – 1) பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அப்போதைய விலை ரூ 10/ தான்!

இதை நன்கு ஆய்வு செய்து தந்தவர் லுட்விக் ஸ்டெர்ன்பாக்! (Ludwik Sternbach)

இவரைப் பற்றிய எனது கட்டுரையை முன்னர் வெளியிட்டுள்ளேன்.

இவர் சுபாஷித தொகுப்பிற்காகவும் இதர சம்ஸ்கிருத நூல்களின் வெளியீட்டிற்காகவும் தன் வாழ்க்கையையும் சொத்தையும் அர்ப்பணித்தவர்!

***

Leave a comment

Leave a comment