காந்திஜிக்கு தினசரி பூஜை:கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற …….. 12 (Post No.12,326)

DAILY PUJA TO MAHATMA GANDHI IN GARODI,KARNATAKA 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,326

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 12

59.தலைக் காவிரி புனித நீராடல்TALA KAVERI

கர்நாடக மாநிலம் குடகு (KODAGU/ COORG) மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி நதி உற்பத்தி ஆகிறது. இது இந்துக்களின் புனிதத் தலமாகும்.

பாகமண்டலாவிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், பனதூரிலிருந்து (கேரளா) 36 கி.மீ தொலைவிலும், மடிக்கேரியிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் தலைக்காவிரி உள்ளது. இது கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது

முதலில் பாக மண்டலத்தில் நதியில் குளித்து மொட்டை அடித்துக்கொண்டு இங்கு வந்து புனித நீராடுவது சம்பிரதாயம்

இங்கு கவரம்மா தேவி கோவில் ,அகஸ்தீஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன. துலா சங்கிரமண காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நீராட வருவார்கள்..

XXXX

புத்த மதத்தில் ஆர்வம் உடையோர் திபேத்தியர் கட்டியுள்ள நாம்ட்ரோலிங் புத்தர் கோவிலுக்கும் NAMDROLLING MONASTERY போகலாம். இது மடிக்கரேயிலிருந்து 40 கி.மீ தொலைவு . பைலகுப்பே BYLAKUPPE என்னும் இடத்தில் பெரிய திபேத்தியர் காலனி உள்ளது .

XXXX

60. மங்களாதேவி கோவில் , மங்களூரு Mangaladevi Temple Rd, Bolar, Mangaluru, Karnataka 575001, India

மங்களூரு நகருக்கு பெயர் கொடுத்த கோவில் மங்களாதேவி கோவில் ஆகும். இந்த நகரம் , கர்நாடகத்தின் வாசல் / நுழை வாயில் GATEWAY OF KARNATAKA  என்று அழைக்கப்படுகிறது . நகரின் மைய பகுதியிலிருந்து 3 கி.மீ தொலைவில் போலரா (BOLARA) என்னும் இடம் உள்ளது அங்கு அமைந்துள்ள மங்களாதேவி சக்தி உள்ளவள்.

ஆளுவ வாசத்தைச் சேர்ந்த குந்த வர்மன் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது. நாத் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மச்சேந்திரநாத், கோரக்நாத் என்ற இரண்டு சன்யாசிகளின் செல்வாக்கில் எழுப்பப்பட்ட கோவில் . சக்தி தேவியின் அருகில் சிவலிங்கமும் இருக்கிறது . கேரள பாணியில் கட்டப்பட்ட கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். 7, 8, 9, 10 ம் நாட்களில் நடைபெறும் அலங்கரங்களைக் காண ஏராளமானோர் வருவர். பத்தாவது தசரா நாளன்று தேரோட்டம்.

கோவிலில் கன்னிப் பெண்களால்  மங்களாதாரவிரதம் (சுயம்வரா பார்வதி விரதம்) அனுஷ்டிக்கப்படுகிறது.

கோவிலின் வெளிப்புறத்தில் அரசமரத்தடியில் நாகராஜா சன்னதி உள்ளது. அங்கு சிறிய பாம்பு சிலை அமைந்திருக்கிறது.கண்நோய், தோல் வியாதி விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இக்கோவிலை நாடி பக்தர்கள் வருகின்றார்கள். அவர்கள் அம்பாளை வழிபட்டு பூஜை செய்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபடுகிறார்கள்.

இந்த ஊரில் ரத வீதியில்  அமைந்த SRI VENKATARAMANA TEMPLE  வேங்கட ரமண கோவில் 1735ம் ஆண்டு கட்டப்பட்டது. பூதேவி ஸ்ரீ தேவி உடன் பெருமாள் காட்சி தருகிறார்.

நகரில் ஹம்பன்கட்டா பேட்டையில் உள்ள மஹா கணபதி கோவிலும் SHARAVU MAHA GANAPATI TEMPLE நிறைய பக்தர்களைக்  கவர்ந்து இழுக்கிறது .

நகரில் குதிரோலி பேட்டையில் உள்ள KUDROLI GOKARNANATHA TEMPLE கோகர்ண நாத சிவன் கோவில் ஸ்ரீ நாராயண குருவின் பக்தர்களால் அமைக்கப்பட்டது இது பில்லவா BILLAVAS சமூகத்தினரின் முக்கியக் கோவில்

XXX

61.கதிரி மஞ்சசுநாத கோவில் KADRI MANJUNATHA TEMPLE

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவில் இது . பத்தாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. கேரள பாணியில் அமைந்த கோவில்

சிவபெருமான் மஞ்சுநாதர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.  பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகமாக இருக்கும் மூலவர் இங்கே இருக்கிறது இது ஒரு புதுமை . இந்த விக்கிரகத்தை பொது ஆண்டு 968 ல் இப்பகுதியை ஆண்ட ஆளுவ வம்ச அரசன்  குந்தவர்மன் என்கிற மன்னன் பிரதிஷ்டை செய்தான் அங்குள்ள கல்வெட்டு இந்தச் செய்தியை தெரிவிப்பதோடு சிவனின் பெயரை லோகேஸ்வர் என்றும் குறிப்பிடுகிறது இடத்தின் பெயரை கத்தரிக்க விஹார என்றும் சொல்கிறது ; புத்த மத செல்வாக்கை இது காட்டுகிறது .

அந்தக்காலத்தில் இந்துக்கோவில்களை சமணர்களும் பெளத்தர்களும் ஆக்ரமித்து சிலைகளை மாற்றினர் ; பின்னர் இந்துக்கள் அவைகளை மீட்டு மீண்டும் சிவன் அல்லது பெருமாளை பிரதிஷ்டை செய்தனர். அந்த வகை    கோவில்களில் இதுவும் ஒன்று ; மூன்று முகங்கள், ஆறு கைகள் உடைய விக்கிரகத்தின் மகுடத்தில் தியானி புத்தர் இருக்கிறார்

சிவலிங்கமும் கோவிலில் இருக்கிறது

கோவிலின் தெற்கு பகுதியில் நாத் சம்பிரதாயத்தைச் சேர்ந்த மத்ஸ்யேந்திரநாதர் மடித்த கால்களின் மீது இரு கைகளையும் சேர்த்து வைத்து காட்சி தருகிறார். இதே போல் கோயிலின் வடக்கு பகுதியில் நான்கு திருக்கரங்களோடு, ஏராளமான நகைகளுடன் சௌரங்கிநாதர் காட்சி தருகிறார்.

ஏழு தீர்த்தங்களும் இயற்கை நீரூற்றும் இங்கு உண்டு  குன்றின் மீது அமைந்த கோவில் இது.

XXXX

காந்திஜிக்கு தினசரி பூஜை Shree Brahma Baidarkala Garadi Kshetra

மங்களூரு நகரிலிருந்து 4 கி.மீ . தொலைவில் கங்க நாடி இருக்கிறது . இங்கு கோடி , சென்னையா  (Circa 1556 CE to 1591 CE .என்ற இரண்டு துளுவ வீரர்களை வணங்குகிறார்கள் . அவர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வீரர்கள் .

மஹாத்மா காந்திஜியின் தீவிர பக்தர்களான நரசப்பா சாலியனும் சோமப்பா பண்டிட்டும் 1948ம் ஆண்டில் காந்திஜியின் களிமண் பொம்மையை வைத்தனர். பல்லாண்டுகளுக்கு முன்னர் இது பளிங்குக்கல் சிலையாக மாற்றப்பட்டது.

காந்திஜிக்கும் , நாராயண குருவுக்கும் காலை, மதியம் மாலை ஆகிய மூன்று நேரங்களில் பூஜை செய்யப்படுகிறது

காந்திஜிக்கு தனி சந்நிதி இருக்கிறது சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு , சுதந்திர வீரர் காந்திஜி , துளுவ  வீரர்கள் என்ற மனிதர்களை வழிபடும் கோவில் என்பதால் இது நாட்டிலேயே ஒப்பற்ற, புதுமையான கோவில் என்பதில் ஐயமில்லை .

கடுங்காப்பி பிரசாதம்

விழா நாட்களில் கருப்பு காப்பியை BLACK COFFEE காந்திக்கு நைவேத்தியம் செய்து தீர்த்தமாக வழங்குகிறார்கள் .

கரோடி GARODY என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில் மஹா கணபதி , மாயாண்டாள் தேவி, பால பரமேச்வரி தேவி, ஆனந்த பைரவர், சுப்ரமண்யர், பிரம்மா,  கோத மந்தையா தெய்வம், விஷ்ணு , குஜும்பா கஞ்சவா மூர்த்திகளும் வழிபட்டப்படுகின்றனர்

Besides Mahatma Gandhi and Sri Narayana Guru’s idols, the Garodi has idols (gudis) of Sri Mahaganapathy, Sri Mayandal Devi, Sri Balaparameshwari Devi, Sri Ananda Bairava, Sri Subramanya, Sri Brahma (all gods), Sri Kodamanthaya Daiva, Vishnumurthi Daiva, Kujumba Kanjava, Koti and Chennaiah.During the bali utsava, the deities Ganapathy and Naga Brahama are brought in front of the statues of Gandhi and Narayana Guru and a special arathi is offered. During the special pooja, black coffee is offered to the statue of Gandhi along with .mixed fruits and sweets. Later, the same coffee is offered to the devotees as “thirtha,” said Kishore Kumar.(Read more at: https://www.deccanherald.com/state/gandhi-worshipped-demi-god-695722.html..

—- சுபம்—–

TO BE CONTINUED ……………………………………….

TAGS- கதிரி மஞ்சுநாத் , காந்திஜி கோவில், காப்பி பிரசாதம், மங்களா தேவி, மங்களூரு, துளுவ வீரர்கள், ஆளுவ வம்ச குந்த வர்மன், தலைக்காவிரி

Leave a comment

Leave a comment