QUIZ நவரத்தின பத்து QUIZ (Post No.12,327)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,327

Date uploaded in London – –  26 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Series No.51

1.நவ ரத்தினங்களில் இரண்டு மட்டும் கடலில் கிடைக்கினறன அவை யாவை ?

xxxxx

2.முத்து உண்டாகும் விதம் பற்றி நமது இலக்கியங்கள் என்ன சொல்கின்றன ?

XXXXX

3.ரத்தினங்கள் பற்றி வராக மிஹிரர் எந்த நூலில் நமக்கு விஷ்யங்களைத் தருகிறார் ?

XXXX

4.ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு ஆசனம் ஷாஜஹானிடம் இருந்தது. அதன் பெயர் என்ன?

XXXX

5.எந்த வைரம் பல கொலைகள் சண்டைகளுக்குக் காரணமானதாக பாகவத புராணம் கூறுகிறது ?

XXXX

6.நவரத்தினங்கள் என்பவை யாவை ?

XXXXX

7.கிழ்கண்ட நிறங்களை எந்த நவ ரத்தினத்துடன் தொடர்பு படுத்துவீர்கள் ?

பச்சை , சிவப்பு, நீலம் , பல வண்ண ஜொலிப்பு மஞ்சள் , வெள்ளி நிறம்

XXXX

8.ஒன்பது மணிகளையும் வைத்து தமிழ்ப் புலவர்கள் பாடுவார்கள் ? அந்த வகைப் பாடல்களின் பெயர் என்ன ?

XXXX

9.பாம்பு தலையில் இருக்கும் ரத்தினத்தின் பெயர் என்ன?

XXXXX

10.பிரிட்டிஷ் ராஜா  ராணி கிரீடங்களில் உள்ள இந்திய ரத்தினங்களில் மிகவும் புகழ்பெற்றது எது?

XXXXX

ANSWERS

1.முத்தும் பவளமும்

XXXX

2.சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை, சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

xxx

3.வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் அரிய பெரிய விஷயங்களை  எழுதியுள்ளார். அதில் முத்து முதலிய நவரத்தினங்கள் பற்றியும் எழுதினார்.

XXXX

4.உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்( Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. ஆனால் அது டெஹ்ரான் (ஈரான்) மியூஸியத்தில் இருக்கலாம்.

XXXXX

5.ஷியமந்தகம் என்னும் வைரம்;  அது திரிபு அடைந்து தயமண்டக DIAMOND   என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது .

XXXXX

6.நவரத்தினங்கள்: வைரம், வைடூர்யம், மாணிக்கம், மரகதம், நீலம், முத்து, பவளம், புஷ்பராகம், கோமேதகம்.

XXXXX

7.பச்சை (மரகதம்) , சிவப்பு (மாணிக்கம் அல்லது பவளம்), நீலம் (நீலக்கல் )  பல வண்ண ஜொலிப்பு (வைரம்) மஞ்சள் (புஷ்பராகம் ) , வெள்ளி நிறம் (முத்து)

XXXXX

8.பாரதி பாடிய பாரத மாதா  நவரத்தினமாலை பாடல் , அகத்தியர் பாடிய லலிதா நவரத்தின மாலை

XXXXX

9.நாக ரத்தினம்

XXXX

10.கோஹினூர் வைரம்

——- SUBHAM ——-

TAGS- நவரத்தினம், கோஹினூர், நாக ரத்தினம், நவரத்தினமாலை,

Leave a comment

Leave a comment