
Post No. 12,336
Date uploaded in London – – 28 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz Series No.53
1.ஈ (FLY, GIVE) என்ற ஓரெழுத்துக்கு எல்லோருக்கும் பொருள் தெரியும். ‘ஆ’ என்ற சொல்லுக்கு எத்தனை அர்த்தங்கள்; அவை என்ன ?
xxxxx
2.ஊன் (MEAT) என்ற சொல்லுக்கு ஒரே எழுத்து என்ன?
xxxxxx
3.‘கா’ என்ற ஓரெழுத்துக்கு என்ன என்ன பொருள்கள் உங்கள் நினைவுக்கு வருகின்றன ?
xxxxxx
4.அரசனையும் ,கடவுளையும் குறிக்க ஒரு உயிரெழுத்து உண்டு அது என்ன ?
xxxxx
5.’கை’ என்றால் ,நம் உடலின் ஒரு உறுப்பை மட்டுமே நாம் நினைப்போம்; இந்த எழுத்துக்கு அகராதியில் வேறு என்ன பொருள்கள் இருக்கின்றன?
xxxx
6.லெட்சுமி, சரஸ்வதி பார்வதி ஆகிய மூவரையும் குறிக்கும் உயிர் எழுத்து எது ?
xxxxx
7.கோ என்றால் அரசன் என்று சொல்லி விடுவீர்கள் ; மீதி 14 அர்த்தங்கள் என்ன ?
xxxxx
8. ஓரெழுத்து பற்றிச் சொல்லும் இரண்டு இலக்கண நூல்கள் யாவை ?
xxxx
9.தமிழில் 54 (42+12) ஓரெழுத்துக்கள் இருப்பதாக ஒரு செய்யுள் சொல்கிறது . அந்த செய்யுள் தெரியுமா?
xxxxx
10.தொல்காப்பியம் ஓரெழுத்து பற்றிச் சொல்லும் சூத்திரம் என்ன ?
Xxxxx

விடைகள்
1.ஆ= ஆச்சா மரம், இச்சை, இரக்கம், சொல்லிசை, பசு, பெண் எருமை,
பெண் மரை , வியப்பு, விலங்கின பெண் பொது , வினா எழுப்ப சேர்க்கும் எழுத்து
XXXXX
2.ஊ
Xxxxx
3.பூங்கா/சோலை, காவடி, காதல், துலை
Xxxxx
4.ஐ = அரசன், கடவுள், ஆசான், அழகு, இருமல், கோழை , நுண்மை, சாரியை, இரண்டாம் வேற்றுமை உருபு
Xxxxx
5.ஒப்பனை, ஒழுக்கம்,சிறுமை படைவகுப்பு, , யானையின் துதிக்கை,
Xxxxxxx
6.சீ = இகழ்ச்சிக்குறிப்பு, லெட்சுமி, சரஸ்வதி பார்வதி
Xxxxx
7.அரசன் அம்பு, ஆகாயம் , ஆண்மகன், எருது, கண் , திசை நீர், பசு, கோ -வேனல், தெய்வ லோகம் , பூமி, மலை, வச்சிராயுதம் .
Xxxxx
8.தொல்காப்பியம், நன்னூல்
xxxx
9.உயிர்மலிலாறுந் தபநவி லைந்தும்
கவச வினாலும் யவ்விலொன்றும்
ஆகு நெடில் நொது வாங் குறிலிரண்டோடு
ஓரெழுத்தியல்பத மாறேழ் சிறப்பின
–நன்னூல் , எழுத்ததிகாரம், 129
சிறப்பான 42 எழுத்துக்களை பவணந்தி முனிவர் சொன்னபோதிலும் , சிறப்பில்லாத 12 எழுத்துக்கள் என்ன என்பதையும் உரைகாரர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
xxxxx
10.நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி
–தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 43
—-subham—
tags-ஓரெழுத்து, க்விஸ் , கேள்வி பதில் , Quiz