ஆகஸ்ட் 2023 நற்சிந்தனை காலண்டர் (Post.12,351)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,351

Date uploaded in London – –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆகஸ்ட்  3- ஆடிப் பெருக்கு 9- ஆடி கார்த்திகை15 சுதந்திர தினம் 16 ஆடி அமாவாசை 25 வரலெட்சுமி நோன்பு;  29- ஓணம் 30 ஆவணி அவிட்டம்யஜுர் உபாகர்மா ; ‘ரக்ஷாபந்தன்’.31 காயத்ரி ஜபம்

அமாவாசை-16;  பெளர்ணமி-130 ஏகாதசி உண்ணா விரத நாட்கள் -1127;

சுபமுகூர்த்த நாட்கள்—2021

xxxx

விவேகானந்தர் உரைகளிலிருந்து தொகுத்த பொன்மொழிகள்

Xxxx

ஆகஸ்ட் 1 செவ்வாய்க் கிழமை

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமாஎந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்த்தி இருக்கிறீர்களாஎங்காவது பல்வீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிலங்களில் நீங்கள் குடி ஏறி இருக்கிறீர்கள். உங்களுடைய அமெரிக்காஆஸ்திரேலியாநியுஜிலாந்துபசிபிக் தீவுகள்தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்னதாம் வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும்” –  சுவாமி விவேகானந்தர் ,பக்கம் 136, எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)

Xxxx

ஆகஸ்ட் 2 புதன் கிழமை

பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும்கூடநீங்கள் இன்று எங்கள் மீது சேறு வீசுகிற அளவில் தினையளவுகூடப் பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது.” — பக்கம் 156, சுவாமி விவேகானந்தர் ,

எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)

xxx

ஆகஸ்ட் 3 வியாழக்  கிழமை

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்…!

xxx

ஆகஸ்ட் 4 வெள்ளிக் கிழமை

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான்

வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான

முதல் அறிகுறி.

xxx

ஆகஸ்ட் 5 சனிக் கிழமை

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும்

உனக்குள்ளேயே உள்ளன.

– xxxxx

ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக் கிழமை

பலமே வாழ்வு. பலவீனமே மரணம்..!

xxxx

ஆகஸ்ட் 7 திங்கட் கிழமை

இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான்

உண்மை ஞானம் உதிக்கும்.

அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

xxxx

ஆகஸ்ட் 8 செவ்வாய்க் கிழமை

கபடம் இல்லாத நாத்திகன்

வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.

xxx

ஆகஸ்ட் 9 புதன் கிழமை

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்

ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

xxx

ஆகஸ்ட் 10 வியாழக்  கிழமை

உண்மைக்காக எதையும் துறக்கலாம்.

ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

xxx

ஆகஸ்ட் 11 வெள்ளிக் கிழமை

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

xxxx

ஆகஸ்ட் 12 சனிக் கிழமை

தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

xxxxx

ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக் கிழமை

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

xxxx

ஆகஸ்ட் 14 திங்கட் கிழமை

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது. 

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

xxxx

ஆகஸ்ட் 15 செவ்வாய்க் கிழமை

 செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

xxxxx

ஆகஸ்ட் 16 புதன் கிழமை

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

xxxx

ஆகஸ்ட் 17 வியாழக்  கிழமை

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

xxxxx

ஆகஸ்ட் 18 வெள்ளிக் கிழமை

வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்

பூவை போல் மென்மையானது

தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்

இரும்பை விட வலிமையானது.

xxxx

ஆகஸ்ட் 19 சனிக் கிழமை

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

xxxx

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக் கிழமை

இதயம் சொல்வதை செய்; வெற்றியோ, தோல்வியோ, அதை

தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு

xxxx

ஆகஸ்ட் 21 திங்கட் கிழமை

உங்கள் திறமைகளின் மட்டத்துக்கு உங்கள் இலக்குகளைக் குறைக்காதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் திறமைகளை உங்கள் இலக்குகளின் உயரத்திற்கு உயர்த்துங்கள்.

xxxxx

ஆகஸ்ட் 22 செவ்வாய்க் கிழமை

எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நிற்காதே

xxxx

ஆகஸ்ட் 23 புதன் கிழமை

மற் றவர்களுக்காக வாழ் பவனே உயிர் வாழ் பவன் ; ஏனையோர் செத்தாருள்  வைக்கப்படும்

xxxx

ஆகஸ்ட் 24 வியாழக்  கிழமை

ஒருவர் அரசியல் மற்றும் சமூக சுதந்திரத்தைப் பெறலாம், ஆனால் அவர் தனது உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமையாக இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் தூய மகிழ்ச்சியை அவரால் உணர முடியாது.

Xxxxx

ஆகஸ்ட் 25 வெள்ளிக் கிழமை

 மனதில் தைரியமும், இதயத்தில் அன்பும் உள்ளவர்கள் என்னுடன் வரட்டும். வேறு யாரும் எனக்குத் தேவையில்லை.

Xxxxx

ஆகஸ்ட் 26 சனிக் கிழமை

நீங்கள் தூய்மையானவராக இருந்தால், நீங்கள் வலிமையானவராக இருந்தால், தனி ஒருவரான நீங்கள் இந்த முழு உலகத்துக்குச் சமனானவர்.

xxxx

 ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக் கிழமை

இதயம் எனும் புத்தகம் திறக்கப்பட்டவருக்கு வேறு புத்தகங்கள் தேவையில்லை.

xxxxx

ஆகஸ்ட் 28 திங்கட் கிழமை

ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களுடன் நீங்களே பேசுங்கள், இல்லையெனில் இந்த உலகில் உள்ள ஒரு சிறந்த நபருடனான சந்திப்பை நீங்கள் தவறவிடக்கூடும்.

Xxxxx

ஆகஸ்ட் 29 செவ்வாய்க் கிழமை

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர். எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

xxxx

ஆகஸ்ட் 31 வியாழக்  கிழமை

 எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

Xxxx

Bonus Quotes

“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல்.

நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.

xxxx

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று

எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

Xxxx

—-SUBHAM—–

ஆகஸ்ட் காலண்டர், விவேகானந்தர், பொன்மொழிகள், மேற்கோள்கள்

Leave a comment

Leave a comment