
Post No. 12,348
Date uploaded in London – – 31 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz Series No.54
QUIZ ரிஷி முனிவர்கள் QUIZ
1.வேதங்களைக் கற்பதற்கு மூன்று ஆயுட்காலம் போதவில்லை; இன்னும் 100 ஆண்டுகள் வேண்டும் என்று சொன்ன ரிஷி யார் ?
xxx
2.அந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு அடையாள (Totem Symbol) சின்னத்தை வைத்துக்கொண்டனர். அதன் பெயரால் அந்த ரிஷிகளை அழைத்தனர் ?கீழ்கண்ட சின்னங்களுக்கு உரிய முனிவர்கள் ரிஷிகள் யார் ?
கருடன் –
வலியன்-
காட்டுக்காடை –
செம்போத்து –
விச்சுளி –
காக்கை –
நரையான் –
மயில்-
கிளி –
ஆந்தை –
ஆமை-
மான் –
Xxxxx
3.வேடனாக வாழ்ந்து, நாரதரைச் சந்தித்த பின்னர் , முனிவர் யார் ?
XXXXX
4.எந்த ரிஷியை ஏமாற்றி அழகிகள் , தசரதனிடம் அழைத்து வந்தனர் ?
Xxxx
5.ஒரு ரிஷியின் கழுத்தில் விளையாட்டாக பாம்பினைப் போட்டு , சாபத்தால் அழிந்தவர் பரீட்சித்.. சாபம் இட்ட ரிஷி யார்?
xxxxx
6.கடலினைக் கடந்து தென் கிழக்காசியாவுக்குப் போனார்; காவிரி நதியை அரபிக்கடலில் விழுந்து வீணாகாமல் தமிழ் நாட்டுக்குத் திரு ப்பி விட்டார். விந்திய மலை வழியாக சாலை போட்டார்; யார் அந்த ரிஷி ?
XXXX
7.வான நூலில் ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் கொடியில் இருக்கும் SOUTHERN CROSS சதர்ன் க்ராஸ் என்ற திரிசங்கு நட்சத்திர மண்டலத்தை உருவாக்கிய முனிவர்/ ரிஷி யார் ?
XXXXX
8.கிருஷ்ணரின் குரு யார் ?
XXXX
9.அனுசுயா என்ற ரிஷி பத்தினியின் கணவரின் பெயர் என்ன ?
XXXX
10.சகுந்தலை என்ற பெண் குழந்தை பறவைகள் இடையே கிடந்தாள். அவளை எடுத்து வளர்த்த முனிவர் யார் ?
XXXXXXXX

ANSWERS
1.பரத்வாஜ மகரிஷி
XXXX
2.கருடன் – வசிஷ்டர்
வலியன்- பரத்துவாஜர் (காகம் என்றும் சொல்லுவர்)
காட்டுக்காடை – கெளதமர்
செம்போத்து – துர்வாசர்
விச்சுளி – கசியபர்
காக்கை – புலஸ்தியர்
நரையான் – நாரதர்
மயில்- அகஸ்தியர்
கிளி – விசுவாமித்திரர்
ஆந்தை – கெளசிகர் / விசுவாமித்திரர்
ஆமை- காஸ்யபர்
மான் – ரிஷ்ய ஸ்ருங்கர்
Xxxx
3.ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர்
XXXX
4.மான்போல தலையில் கொம்பு போன்ற புடைப்பு, இருந்த கலைக்கோட்டு முனிவரை ;
கலை என்றால் மான் ; கோடு என்றால் புடைப்பு, சிகரம், உச்சி..
சம்ஸ்க்ருதத்தில் ரிஷ்ய ஸ்ருங்கர் என்பதைக் கம்பராமாயணத்தில் கம்பன், கலைக்கோட்டு முனிவர என்று மொழிபெயர்த் தான்.
XXXXX
5.சமீகர் என்ற ரிஷி
XXXX
6.அகஸ்திய மகரிஷி
XXXXX
7.விசுவாமித்திர முனிவர்
XXXX
8.சாந்தீபனி முனிவர்
XXXXX
9.அனுசுயா, இந்து சமய புராணங்களில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண். இவள் அத்ரி முனிவரின் மனைவி ஆவாள்.
XXXX
10.கண்வர்.
—-SUBHAM—
Tags- ரிஷி, முனிவர்கள் க்விஸ், கேள்வி பதில், கண்வர் , திரிசங்கு, நட்சத்திரம்