
Post No. 12,364
Date uploaded in London – – 3 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

QUIZ SERIES No.58
1.ராமலிங்க சுவாமிகள் (1823-1874) என்றும் வள்ளலார் என்றும் போற்றப்படும் மகானுக்கு பிடித்த சொல் எது?
XXXXX
2.இவர் பிறந்ததோ மருதூரில் , பின்னர் ஏன் வடலூர் வள்ளலார் என்று இவரை அழைக்கின்றனர்?
XXXX
3.வள்ளலாரின் தாய் தந்தை , உடன்பிறந்தார் யாவர் ?
XXXXXX
4.வள்ளலார் பரப்பிய கொள்கை என்ன?
XXXXX
5.வள்ளலார் எழுதிய பாடல்களை எங்கே காணலாம் ?
XXXXXX
6. வள்ளலாருக்கும் யாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது? ஏன்?
XXXX
7.வள்ளலார் மறைந்தது எப்படி ?
XXXX
8.வடலூரில் இன்றும் கண்ணுக்கு முன் காணப்படும் அதிசயம் என்ன ?
XXXX
9.எல்லோரும் மேற்கோள் காட்டும் , சுவாமிகளின் வரி என்ன ?
XXXX
10.ராமலிங்க சுவாமிகள் யார் மீது பாடினார்? சென்னையை தரும மிகு என்று போற்றிப் பாராட்ட காரணம் என்ன ?
XXXX

விடைகள்
1.அருட் பெரும் ஜோதி
XXXZ
2.சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் இவர் சத்திய ஞானசபையை அமைத்தார்.அதுதான் அவரது பணிகளின் தலைமையிடம். அங்குதான் அவர் அமைத்த கோவிலும் இருக்கிறது
XXXXX
3.இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தார் . தந்தை இராமையாபிள்ளை, தாய் சின்னம்மையார்.; உடன்பிறந்தார் -சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.
XXXX
4. “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டார்.
XXXX
5.இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
XXXX
6.வள்ளலார் – இலங்கையிலுள்ள ஆறுமுக நாவலர் ஆகிய இருவரிடையே மோதல் ஏற்பட்டது திரு அருட்பா என்ற பெயரில் நூலை வெளியிட்டதும் அதிலுள்ள பாடல்களை திருமுறைகள் என்று பெயரிட்டதையும் , வள்ளலாரின் சீடர்கள் அதை தேவார , திருவாசகத்துக்கு சமமாக வைத்ததையும் சைவர்கள் விரும்பவில்லை . இதனால் நாவலர், வள்ளலார் இருவரின் ஆதரவாளர்கள் இடையே ஏச்சுப்பேச்ச்சுகள் எழுந்து கோர்ட் வரை சென்றனர் ; வழக்கு ஒருவிதமாக முடிந்தது.
XXXXX
7.இதை ஸ்பான்டேனியஸ் கம்பஷன் SPONTANEOUS COMBUSTION என்று சொல்லுவார்கள். இந்து மதத்தில் இப்படி சோதியில் கலந்தோர் பலர். வள்ளலாரும் ஒரு அறைக்குள் சென்று கதவைத் தாளிடச் சொல்லிவிட்டு ஜோதி வடிவில் மறைந்தார் . இது 1874 தைப்பூசத்தன்று (ஜனவரி 30) நடந்தது.
XXXXXX
8.சுமார் 150 ஆண்டுகளாக இங்கு அணையா அடுப்பு உளது; அதாவது எல்லோருக்கும் எப்போதும் உணவு படைக்கப்படும். இதை ராமலிங்க சுவாமிகளே 23-5-1857ல் ஏற்றி வைத்தார். இன்றுவரை அடுப்பில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது .
XXXXX
9.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
XXXXXXX
10.சிவன், முருகன், கணபதி ஆகிய மூவர் மீது பாடினார்
அவரது தெய்வமணி மாலையில் 31 பாடல்கள் உள்ளன. அவர் சென்னையில் வசித்த காலத்தில் கந்த கோட்டத்துக்குச் செல்லுவது வழக்கம் ;அங்குள்ள சுப்ரமண்ய சாமி மீது பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அப்போது கந்த கோட்டம் காரணமாக தருமமிகு சென்னை என்று பாடினார்.

XXXX
—-SUBHAM—
TAGS- வடலூர் , வள்ளலார், ராமலிங்க சுவாமிகள், திரு அருட்பா, சன்மார்க்கம், சத்திய ஞான சபை, அருட்பெரும் சோதி, தைப்பூசம் , அணையா அடுப்பு