ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்! கர்நாடக மாநில புகழ்பெற்ற கோவில்கள் – 17 (Post.12,374)

Picture of Veeranarayana Temple, Belavadi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,374

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Temple Pictures are Taken from Wikipedia

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 17

79.வீரநாராயண கோவில், பெலவாடி The Veera Narayana temple, / Viranarayana temple of Belavadi

சிக்மகளூர் நகரிலிருந்து 25 கி.மீ.

ஹொய்சாளர் தலைநகரான ஹளபீடுவிலிருந்து 10 கி.மீ.

இங்குள்ள வீரநாராயணர்  கோவில், ஹொய்சாளர் கட்டிடக் கலையை அப்படியே பாதுகாத்துவைத்துருக்கிறது. மூன்று கர்ப்பக்கிரகங்களை மிகப்பெரிய ரங்க மண்டபம் இணைக்கிறது . வேறு எங்கும் இவ்வளவு பெரிய மண்டபம் கிடையாது .வீரநாராயண பெருமாள் எனப்படும் விஷ்ணு, யோக நரசிம்மர், கோபாலன் ஆகிய மூவர் சந்நிதிகள் முக்கியமானவை  800 ஆண்டு வரலாறு உடைய இந்தக் கோவிலில் கூரை மீது செதுக்கப்பட்டுள்ள கிருஷ்ண லீலைகளும் வேறு எங்கும் காண இயலாத ஒப்பற்ற வடிவங்களாக உள்ளன, பகாசுரனை பீமன் வதைத்த இடம் இதுதான் என்பது மக்களின் நம்பிக்கை .

Xxxxx

80. அங்காடி கோவில்  Durga or Vasantha Parameshwari Temple /Vasanthika Temple, Angadi

முடிகரே என்னும் இடத்திலிருந்து 18 கிமீ. ஹொய்சாளர்களின் மூன்று பாழடைந்த கேசவ, வீரபத்ர, மல்லிகார்ஜுன கோவில்கள் இருக்கின்றன. அங்காடி என்னும் ஊர்ப்பெயர் சந்தை, மார்க்கெட் என்று பொருள்படும். சங்க இலக்கியத்தில் மாத்திரை நகர நாள் அங்காடி, அல்லங்காடி பற்றிப் படிக்கலாம் . சாலை என்பவன் புலியைக் கொன்ற இடமும் இதுதான் (ஓய் +சால ). சசகபுரம் என்றும் பெயர்.. இங்குள்ள வஸந்திக ஹொய்சாள கோவிலில் இன்றும் துர்க்கையை தரிசிக்கலாம்.இங்குள்ள கருங்கல் தூண்கள் மிகவும் அழகானவை.

Xxxxx

ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்!

81.ஹாஸனாம்பா  கோவில் Hasanamba temple , Hassan,

ஹாசனாம்பா என்ற பெயரில் சக்தி தேவி வணங்கப்படுகிறாள் . தீபாவளி காலத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் கோவிலுக்குள் புற்று வடிவத்தில் இறைவன் உளார் .800 ஆம்தட்டுகளுக்கும் மேல் பழமை உடையது .ஒரே வாரம் மட்டும் கோவில் திறந்து இருப்பதால் அப்போ து பல்லாயிரக் கணக்கனமாக்கல் விஜயம் செய்கிறார்கள். கோவில் பூட்டப்பட்டிருக்கும் நாட்களில் நந்தா தீபம் மாட்டும் எரிந்து கொண்டிருக்கும் .

இங்கு ஒரு வினோதம் என்னவென்றால், ஒன்பது தலையுள்ள ராவணன் வீணை வசிப்பதாகும் ; மற்ற இடங்களில் நாம் பத்து தலை ராவணனைக் காண்கிறோம் . சித்தேஸ்வர சுவாமியும் சிவன் ரூபத்தில் காட்சி தருகிறார்.

மும்பை , கோல்கத்தா  முதலிய ஊர்களுக்கு அந்தந்த ஊர் சக்தி தேவியே பெயர் கொடுத்தது போல இந்த ஹாஸன் நகருக்கும் தேவி ஹானாம்பாவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது ..

Xxxxx

82.ஹளபீடு 35,000 சிற்பங்கள் 

ஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்!

ஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.ஆகா உலகியேயே பணக்கார நறு இந்தியாதான் என்பதற்கு நம் சிலைகளில் உள்ள நகைகளைப் பார்த்தால் போதும்.

1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து.

2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.

3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே!

4..துருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.

5.ஹளபீடு என்றால் பழைய வீடு /தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது

150 அற்புதக் கோவில்கள்

. 6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்

7.      இந்த ஊர்பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

8.       .முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)

 9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.

என்ன என்ன சிற்பங்களைக் காணலாம்?

எல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;

எல்லா வகை தெய்வங்கள்

பால கிருஷ்ணனின் லீலைகள்

கர்ண– அர்ஜுனன் யுத்தம்

கோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்

கஜேந்திர மோட்சம்

சிவ தாண்டவம்

சிவனின் ரிஷப வாஹன கோலம்

ராவணன் தூக்கும் கயிலை மலை

ராமாயணக் காட்சிகள்

சிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 35,000 சிற்பங்கள்

மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம்! அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.

 ‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லவே இல்லை!!! 

11.  காளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது

 To be continued……………………………………

Tags- ஒரே வாரம், ஹளபீடு, அங்காடி, பெலவாடி, ஹொய்சாளர், ஹாசனாம்பா,

Leave a comment

Leave a comment