பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -2 (Post No.12,393)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,393

Date uploaded in London – –  9 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

13.மூன்று + இரண்டு சம்ஸ்க்ருத விக்ரம /வர்மன் மன்னர்கள்

தமிழ் நாட்டில் பல்லவ மன்னர்களின் பெயர்கள் வர்மன் என்று முடிவதை நாம் அறிவோம். ஆனால் மஹேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் ஆகிய பெயர்களுக்கும் முன்னதாக போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மன் யாகம் செயது நட்ட ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டைக் கண்டுபிடித்தவுடன் உலகம் முழுதும் வியப்பு ஏற்பட்டது. இப்பொழுது இந்தோனேஷியா என்னும் உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ காடுகள் கன்னி வனம் — அதாவது மனிதர்கள் கால் சுவடே படாத VIRGIN FOEST வர்ஜின் பாரஸ்ட் என்று கருதினர். ஆனால் அந்தக் காட்டுக்குள்ளே யாகம் செய்து நட்ட யூப நெடுந்தூண்களின் மூலவர்மனின் ஸம்ஸ்ருதக் கல்வெட்டுகள் இருந்தன .இவை நாலாம் , ஐந்தாம் நூற்றாண்டுக் (CE) கல்வெட்டுகள் .

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் யூபம்  என்ற வேதகால ஸம்ஸ்க்ருதச் சொல் புறநானூறு முதலிய 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் நூல்களில் காணக்கிடைப்பதால் அந்த வர்மன் மன்னர்கள் தமிழர்களாக இருக்கக்கூடும் . தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படும் லிபி/ எழுத்து பல்லவ கிரந்த எழுத்துக்கள் மூலம் பரவியது அறிஞர்கள் அறிந்ததே!

இதே போல பர்மாவிலும் ஒரு அதிசயம்!

ப்ரோம் நகரில் பியூ எழுத்தில் உள்ள மூன்று அஸ்தி கலசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலுள்ள ஆண்டுகள் எந்த சகாப்தம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் எழுத்து அமைதி முதலியவற்றை ஆராய்ந்து நிபுணர்கள் கால நிர்ணயம் செய்தனர் ; அந்தக் கணக்குப்படி  பெயர்களும், மன்னர்களின் வயதும் பின்வருமாறு :

678 சூர்ய விக்ரம  மரணம் , வயது 64

695 ஹரி விக்ரம மரணம் , வயது 41

718 சிஹா விக்ரம மறைவு , வயது 44

இவை தூய ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்; மேலும் இவர்கள் ஆண்ட விக்ரம வம்சம் பற்றியும் தகவலே இல்லை .

இவை தவிர வேறு சில இடங்களில் பிரபு வர்மன்ஜெய சந்திர வர்மன்  ஆகிய பெயர்களும் கிடைத்தன. ஆகவே விக்ரம வம்சம் பல்லவ வம்சம் ஆகியனவும் அங்கு இருந்திருக்க வேண்டும். அருகிலுள்ள கம்போடியாவில் இதுபோன்ற பெயர்கள் பின்னால்தான் வந்தன.

புத்தர் சிலை ஒன்றின் பீடத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் ஹரி விக்ரமனின்  மூத்த  சகோதரன் ஜெய்ச சந்திர வர்மன் என்றும் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுடைய ஆன்மீக ‘குரு’க்கள் இரு வேறு நகரங்களை ஒரே மாதிரியில் கட்டி அவர்களை தனியாக வாழச் செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

14.அரிமர்தனபுரம்

ஹமாவசா  என்பது ஸ்ரீ க்ஷேத்ரத்தின் வேறு பெயர். இதை பர்மிய உச்சரிப்பில் சிசித் என்றும் சுருக்கிவிடுவர். நாமும் ஐராவத நல்லூர் என்பதை அயிலானூர் என்றுதானே சொல்கிறோம் ; ஆரல்வாய் மொழி என்பதை ஆராம்பொலி  என்றுதானே சொல்கிறோம்

நகரங்களின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் காணப்படுகின்றன பகான்  என்று அழைக்கப்பட்ட நகரின் பெயர் கல்வெட்டில் அரி மர்தன புரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. எதிரிகளை துவம்சம் செய்யும் ஊர் என்பது இதன் பொருள்.

இன்னும் ஒரு நகரின் பெயர் பிஷ்ணுமாயா; ஸம்ஸ்க்ருதப் பெயர் விஷ்ணு மயம் என்பதை இப்படித்  திரித்து விடுகின்றனர் இந்த நகரத்தின் மஹாயான புத்த மதப் பிரிவு எழுதிய வரலாற்றில் இதை சண்டி தேவி, பரமேஸ்வரன், கருடன் உதவியுடன்  விஷ்ணு , உருவாக்கியதாக எழுதப்பட்டுள்ளது

15.ஐராவதி

இந்தியாவில் இப்போதும் ஷராவதி, வேகவதி, அமராவதி,ஹேமாவதி நதிகளைக்  காண்கிறோம். இதே போல பர்மாவின் மிகப் பெரிய, முக்கியமான நதிக்கு ஐராவதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சூட்டியுள்ளனர். இமய மலையிலும் ஒரு ஐராவதி நதி உண்டு; ஐராவதி என்பது காஸ்யபருக்கும், க்ரோதவசா என்ற பெண்ணுக்கும் பிறந்த 10 புதல்விகளில் ஒரு பெண்ணின் பெயர் ஆகும்  மஹாபாரதம் முதலிய பல நூல்களில் இந்தச் சொல் பல பெண்களின் பெயர்களாக வருகிறது .

உலகிலேயே நகரங்களுக்கும் நதிகளுக்கும் பெண்களின் ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சூட்டியது இந்துக்கள் மட்டுமே.

பிரபல புத்த மத கோவிலின் பெயர் ஆனந்தா கோவில். நம் ஊரில் இன்றும் யோகானந்தா , பரமானந்தா , பிரும்மானந்தா போன்ற பெயர்களில் சன்யாசிகளைக் காண்கிறோம். ஆனந்த என்பது பேரின்பத்தைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்

16.மூன்று புதிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள்

வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தில் படியெடுத்த கவெட்டுகளில் சுமார் 330 கல்வெட்டுகளில் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கினறன. அதற்குப்பின்னர் 3 புதிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் கிடைத்தன. இவை இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை ஒட்டிய அரக்கான் பிரதேசத்தில் ஆட்சி செலுத்தியோர் பற்றியவை.

17. தர்ம சாஸ்திரம்

தர்ம என்பதை பாலி மொழி கொச்சைப்படுத்தி தம்மம் என்றும், தர்ம சாஸ்திரம் என்பதை தம்மதத் என்றும் சொல்லும். முன்னரே த = ச  மாற்றம்  ஆங்கிலம் தமிழ் மொழியில் இருப்பதைக் காட்டியுள்ளேன்

மனு தர்ம சாஸ்திரத்தை ஒட்டியே பர்மிய சட்டப்புஸ்தகங்களும் இயற்றப்பட்டன. மனு ந்யாய / நீதி என்பதை மனு க்யாய என்பர்

1600ம் ஆண்டு வாக்கில் வேத பண்டிதர்கள், குறிப்பாக பர்மிய அரசவையில் அதர்வண வேத பண்டிதர்க்கள் இருந்தமைக்கு சான்றுகள் உள

18.த்வாரா வதி லவ புரி

இப்போது இந்த ஊர்கள் பர்மாவின் பூகோள எல்லைக்குள் இல்லாவிடினும் மோன் அரசாட்சியின் கீழ் இருந்த இடங்களும் த்வாராவதி , லவ புரி போன்ற தூய ஸம்ஸகுதத்தில் இருக்கின்றன ; பழங்கால பர்மா என்னும்போது இவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .

பம்பாய் டில்லியில் கேட் வே GATE WAY இருப்பது போல த்வாரா (வாசல்) என்ற பெயரில் நகரம் இருந்தது . ஆங்கிலச் சொல்லான DOOR= DWAAR டோர் / கதவு என்பதே சம்ஸ்க்ருத த்வார  என்னும் சொல்லிலிருந்து வந்ததே .

லவ என்ற ராமனின் மகன் பெயரிலிருந்து லவ புரி , லாவோஸ் நாடு ஆகியன உண்டாயிற்று  ஹமாவா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஐந்தாம் நூற்றாடுக்கு முன்னரே இந்து மதம் பின்பற்றப்பட்டதைக் கூறுகிறது. கல்வெட்டுச் சான்றுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் புத்த மதம் இதற்குப்  பின்னர்தான் பர்மாவுக்கு வந்தது 1422ம் ஆண்டு தேதியிடப்பட்ட பகான் கல்வெட்டில் 255 புஸ்தகங்கள் புத்த மத சங்கத்துக்கு நன்கொடை கொடுத்த செய்தி கிடைக்கிறது ; அதில் பல சம்ஸ்க்ருத நூல்கள் பெயர்களும் உள்ளன.

 –SUBHAM—-

Tags- பர்மா, சம்ஸ்க்ருதம், பகுதி 2, ஐராவதி, அரிமர்தனபுரம்

Leave a comment

Leave a comment