
Post No. 12,395
Date uploaded in London – 10 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சம்ஸ்கிருத செல்வம்
ச.நாகராஜன்
நீதிகளைச் சொல்வதில் சாணக்யர் வல்லவர். அவரது சாணக்ய நீதி அரசர்களாலும் மந்திரிகளாலும் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்ட நீதி சாஸ்திரம்.
அவற்றில் சில இதோ:
செய்யக்கூடாதவற்றைச் செய்யாதே!
அகர்தவ்யம் ந கர்தவ்யம் ப்ராணை: கண்டகதைரபி|
கர்தவ்யமேவ கர்தவ்யம் ப்ராணை: கண்டகதைரபி ||
இறப்பே வந்தாலும் செய்யக்கூடாதவற்றைச் செய்யக் கூடாது. செய்ய வேண்டியதைச் செய்வதில் இறக்கவே நேரிடினும் அதைச் செய்தல் வேண்டும்.
உலகம் சுழல்வது எதனால்?
அகாரணம் வ்யாகரணம் தந்த்ரஷப்தோபகாரணம் |
அகாரணம் த்ரயோ வேதாஸ் தண்டுலாஸ்தர காரணம் ||
உலகம் இலக்கணத்தைச் சுற்றிச் சுழல்வதில்லை.
உலகம் ஒரு இழையிலிருந்து வரும் ஒலியைச் சுற்றிச் சுழல்வதில்லை.
உலகம் மூன்று வேதங்களைச் சுற்றிச் சுழல்வதில்லை.
அது அன்றாட ஒரு பிடி உணவைச் சுற்றியே சுழல்கிறது!
பெண்ணையும் ஆணையும் இணைப்பது யார்?
அக்னிகும்ப சமா நாரி த்ருதகும்ப சமோ நர: |
உபயோரபி சம்யோக: கஸ்ய விஸ்வாசகாரக: ||
ஒரு பெண் அக்னி கும்பம் போல இருக்கிறாள்.
ஒரு ஆண் நெய் குடம் போல இருக்கிறான்.
இந்த இரு பொருள்களையும் சேர்ப்பது யார்?

அறுவரிடம் ஜாக்கிரதையாக இரு!
அக்னிநராப: ஸ்தீரியோ மூர்கா: சர்பா ராஜகுலானி ச |
நித்யம் யத்னேன சேவ்யானி சத: ப்ராணஹாரிணி ஷட் ||
அக்னி, நீர் (நதிகள்), பெண்கள், முட்டாள்கள், பாம்புகள், ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய ஆறு பேரிடமும் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், சமயம் வாய்த்ததெனில் அவர்கள் உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பர்.
செல்வம் பெறுவதன் பலன் எதில் ஏற்படுகிறது?
அக்னிஹோத்ர பலா வேதா
: சீலவ்ருத்தபலம் ச்ருதம் |
ரதிபுத்ரபலா தாரா தத்தபுக்தபலம் தனம் ||
வேதம் கற்றதன் பயன் அக்னிஹோத்ரம் செய்வது.
கல்வி கற்பதன் பலன் ஒழுக்கமாக வாழ்வது
மனைவியைக் கொள்வதன் பலன் காமத்தால் இன்பம் அடைந்து புத்திரனைப் பெறுவது;
செல்வத்தைப் பெறுவதன் பலன் மற்றவர்க்கு கொடுத்து இன்பம் அடைவது!
நல்லவையும் தீயவையும் உரிய காலத்தில் பலன் தரும்!
அசோத்யமானானி யதா புஷ்பானி ச பலானி ச |
ஸ்வகாலம் நாதிவர்தந்தே ததா கர்ம புராக்ருதம் ||
பூக்களும் பழங்களும் எவராலும் தூண்டப்படாதபடி தானாகவே தங்களுக்கான உரிய காலத்தில் பூக்கிறது பழுக்கிறது. அது போலவே முன்னால் செய்த செயல்கள் உரிய காலத்தில் வந்து தோன்றுகிறது.
(அதாவது முந்தைய ஜென்மத்தில் செய்த நல்ல மற்றும் தீய காரியங்கள் உரிய காலத்தில் இந்த ஜென்மத்தில் தோன்றி பலனைத் தருகின்றன)
சாணக்யர் சந்திரகுப்த மௌர்யரின் அரசவையில் மந்திரியாகப் பதவி வகித்தவர். அவர் கூறும் நீதிகளாக ஏராளமான நீதி மொழிகள் உள்ளன. அனைத்துமே அருமையானவையாகும்.
***