
Post No. 12,399
Date uploaded in London – – 10 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

இந்தக் கட்டத்தில் 15 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.யாதும் ஊரே யாவரும் கேளிர் செய்யுளை இயற்றிய சங்கப் புலவர்
4.தாயாரின் தங்கை; சித்தி என்றும் சொல்லுவர்
5.எண் சான் உடம்புக்கு இந்த உறுப்புதான் பிரதானம்
9. வலு, வலிமை என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
10. பின்வாங்கினார் என்பதை பத்திரிகைகள் இந்தச் சொல்லால் குறிப்பிடுவர்
11. பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு, கோட்டை
காலம் விரைந்து செல்லுதல், வட்டம், விரைந்து வளரும் முருக்கு மரம் (erythrina Indica)
12. பருந்து, கழுகு இனப்பறவை; அரசன் பெயர் உள்ள பறவை; கருடன் அல்ல.
xxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1.கந்த புராணத்தை எழுதியவர் .
2.பாவை விளக்கை கையில் ஏந்திய உருவம் ; கிரேக்க நாட்டிலிருந்து வந்ததாக நம்பிக்கை.
3. கஞ்சா , துளசிக்கு உள்ள இன்னும் ஒரு சொல்
5.அருகதை/ நிலை
6. சிதம்பரத்தில் நடராஜப் பெருமானைத் தெரியும்; ஒரு சக்தி தெய்வமும் அங்கே சிறிய கோவில் கொண்டுள்ளாள். அவள் பெயர் என்ன?
7. அறுபடை வீடுகளில் ஒன்று. மதுரைக்குப் பக்கத்தில் அழகர் மலையில் இருக்கிறது
8. யாராவது போலியாகக் கண்ணீர் சிந்தினால் இந்தப் பிராணியின் பெயரைச் சொல்லுவர்
13. மாபெரும் பெரிய கோவிலை தஞ்சையில் கட்டிய மன்னன் ⇡
| 1 | 2 | 3 | |||||||
| 4 | 5 | 6 | |||||||
| 7 | 8 | ர் | |||||||
| 9 | 10 | ||||||||
| 11 | 12 | ⇡ 13 |



Answers
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.கணியன் பூங்குன்றன்;4.சின்னம்மா ;5.தலை; 9. பலம் ; 10.ஜகா; 11.வல்லை ; 12.ராஜாளி
xxxxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1.கச்சியப்பர் ;2.யவன தீபம் ;3.குவலை ;5.தகுதி; 6.தில்லை காளி ;
7.பழமுதிர்சோலை ;8.முதலை; 13.ராஜ ராஜ சோழன்
| க1 | ணி | ய2 | ன் | பூ | ங் | கு3 | ன் | ற | ன் |
| ச் | வ | வ | ழ | ||||||
| சி4 | ன் | ன | ம் | மா | த5 | லை | தி6 | சோ | |
| ய | தீ | கு | ல் | ஜ | |||||
| ப் | ப7 | ழ | மு8 | தி | ர் | சோ | லை | ரா | |
| ப9 | ல | ம் | த | கா | ஜ10 | ||||
| ர் | வ11 | ல் | லை | ரா12 | ஜா | ளி | ⇡ 13 |
—subham—