QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ (Post No.12,396)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,396

Date uploaded in London – –  10 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ SERIES No.64

QUIZ கன்பூசியஸ் பத்து  QUIZ

1.கன்பூசியஸ் Confucius/ Kong Fuzi  எந்த நாட்டைச் சேர்ந்தவர்எப்போது வாழ்ந்தார்?

xxxxx

2.பாரதியார் கன்பூசியஸ் மதம் பற்றி என்ன சொன்னார் ?

xxxx

3.கன்பூசியஸ் மதத்தை கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் எத்தனை பேர்?

xxxxx

4.அவர் ஆற்றிய முக்கியப் பணி எந்தத் துறையைச் சேர்ந்தது ?

xxxxxx

5.கன்பூசியஸ் என்று சொல்லுவது சரியா ?

xxxx

6.கன்பூசியஸ் ஆறு விஷயங்களை சொன்னார் அவை யாவன ?

xxxxx

7.அவர் பிறந்த இடம் எதுஇறந்த இடம் எது ?

xxxxx

8.அவர் பிறந்த தேதியை  எப்படிக் கொண்டாடுகிறார்கள் ?

xxxxx

9.அவர் புஸ்தகம் எழுதினாரா அதன் பெயர் என்ன ?

xxxxx

10.இந்துமத நூல்களை ஒப்பிட்டால் அவர் சொன்னதில் புதுமைகருத்து வேறுபாடு உண்டா ?

Xxxxx

விடைகள்

1.சீனாவைச் சேர்ந்தவர். அவருடைய காலம் கிட்டத்தட்ட புத்தர் காலம் கி.மு 551-479 BCE அவர் பெரிய தத்துவ ஞானி

xxxxx

2.பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!

புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் “தாவு”மர்க்கம்,

நல்ல “கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே– பாரதியார்

Xxxxx

3.கடைசியாக எடுத்த சர்வேயின் படி 61 லட்சம் பேர்.

xxxx

4.கல்வித் துறை ; பிரபுக்கள் மட்டுமே கல்வி பயின்ற காலம் அது. எங்கே கல்வி அறிவு பரவுகிறதோ அங்கு வகுப்பு வேற்றுமைகள் குறையும் என்று உபதேசித்து  கல்வியைப் பரப்பினார். 3000 மாணவர்களை அழைத்து போதித்தார்.

xxxx

5.இல்லை. இது வந்தேன் மொழி உச்சரிப்பு; சீன மொழியில் அவர் பெயர் குங்-புட்ஜு . Confucius  = Kong Fuzi 

புட்ஜு என்றால் ஆசிரியர் என்று பொருள் ;

xxxxxx

6.சடங்குகள், இசை, வில் வித்தை ,ரதம் ஓட்டுதல் , எழுத்தறிவு, கணிதம் “rites, music, archery, chariot driving, writing and mathematics.

****

இன்னும் ஒரு 6 விஷயங்கள் :-

Ren (மனிதாபிமானம் humanity, benevolence), Yi (தர்மம் righteousness), Li (சொத்துரிமை propriety, rites), Zhi (விவேகம் wisdom, knowledge), and Xin ( நம்பகத்தன்மை trustworthiness). Wen – உயர்ந்தோர் பண்புகள் a refined intellectual of the gentry class

xi, zhi, li, yi, wen, and ren.

xxxx

7.சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில்  கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தார்

தந்தை பெயர் ஷ லியாங் ஹி; .தாயின் பெயர் ஜென் சென் ட்சாய். அவர் இரண்டாவது மனைவியின் குழந்தை

அவர் இறந்த இடம் லூ; அங்கு அவருக்கு பெரிய கோவில் கட்டி இருக்கிறார்கள் .

xxxx

8.அவர் பிறந்த தேதி-செப்டம்பர் 28.

பார்மோசா என்னும் சுதந்திர சீனா நாட்டில் செப்டம்பர் 28ம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் தத்துவ ஞானியும் இந்திய ஜனாதிபதியும், ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தேதியான செப்டம்பர் 5-ம் தேதியை நாம் , ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவதைப் போன்றது இது..

xxxx

9.அவருடைய உரைகளும் அவரது சீடர்களின் உரைகளும் Analects அனலெக்ட்ஸ் என்ற புஸ்தகத்தில் கிடைக்கின்றன . இது சீனாவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

xxxxx

10.இல்லவே இல்லை; அவர் சொன்ன அத்தனை கருத்துக்களும் திருக்குறளில் உள்ளன. விதுர நீதியில் உள்ளன.

—-Subham—

Tags- கன்பூசியஸ் , தத்துவ ஞானி, ஆசிரியர் தினம், சீனா  , பார்மோசா, Confucius, The Analects

Leave a comment

Leave a comment