_(14571148061).jpg)
Picture of Arisikare Temple
Post No. 12,401
Date uploaded in London – – 11 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sourcesincluding WIKIPEDIA for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 20
பகுதி -20
90.மேலக்கல் / மலைக்கல்லு திருப்பதி கோவில் MALEKAL TIRUPATI
அரிசிக்கரே ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவு.
1200 படி ஏறிச் சென்றால் திருப்பதி பெருமாளை சந்திக்கலாம். ஒரிஜினல் திருப்பதி போலவே இங்கும் மலை அடிவாரத்திலும் இன்னும் ஒரு கோவில் இருக்கிறது ; வசிஷ்டர், அகஸ்தியர் ஆகியோருடன் தொடர்பு படுத்திப் பல கதைகள் சொல்லப்படுகின்றன. சித்ரதுர்கா பாளையக்காரர் கனவில் பெருமாள் வந்தவுடன் அவர் எழுப்பிய கோவில் இது..இந்தக் கோவிலுக்கு அமரகிரி பெருமாள் கோவில் என்ற பெயரும் உண்டு
91.அரிசிக்கரே ஈஸ்வரன் கோவில் ,Ishwara or Isvara temple, Arsikere
இது ஹொய்சாளர் கட்டிய சிவன் கோவில். ஹாசன் நகரிலிருந்து 40 கி.மீ.
13-ஆம் நூற்றாண்டுக் கோவில். கல்வெட்டுகளும், நடுகற்களும் (inscribed stones, as well as hero stones) இருக்கும் இடம். இவற்றிலிருந்து 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது. 16 கோண நட்சத்திர மேடையில் கட்டப்பட்டிருப்பது இதன் சிறப்பு அம்சம். ஒவ்வொரு கோணாத்திலும் ஒரு சுவாமி சந்நிதி. சைவ, வைணவ, சாக்த சிற்பங்களுக்கு குறைவில்லாத ஒப்பற்ற கோவில்
ஊரின் உண்மையான பெயர் அரசிக் கரை ; படை எடுப்பாளர்களால் சேதமாக்கப்பட்ட கோவில் .
கோவிலில் ஐந்து அடுக்கு விமானம் உளது (a domed mandapa with 16-point star shape, a pancatala vimana)
அருகிலேயே இரட்டைக் கோவில், சமணர் கோவில்கள் இருக்கினறன.
92.ஹண ஹல்லியில் இரண்டு கோவில்கள் Lakshminarasimha temple & Someshvara temple, Haranhalli
ஹாசன் நகரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் ஹண ஹல்லி இருக்கிறது .இங்கு லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலும் சோமேஸ்வர சிவன் கோவிலும் இருக்கின்றன இரண்டும் ஹொய்சளர் கால கோவில்கள்; 800 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு இருக்கிறது வேசர பாணி கோவில்; இதில் சோமேஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்து காணப்படுகிறது எல்லா ஹொய்சாளர் கோவில் போல இங்கும் சில புராணக் காட்சிகள் கல்லிலே சித்தரிக்கப்பட்டுள்ளன
லெட்சுமி நரசிம்மர் கோவிலை மூன்று பணக்கார சகோதரர்கள் கட்டினார்கள். கோவிலில் கல்வெட்டுகள் உண்டு. இது திரிகூட அமைப்புடையது. அதாவது 3 சந்நிதிகள் இருக்கும்; அவற்றை ஒரே மண்டபத்தால் இணைப்பார்கள் வேணு கோபால , கேசவ , நரசிம்ம மூர்த்திகளைத் தரிசிக்கலாம்.
93.சென்னகேசவ கோவில் Chennakeshava temple, Hullekere
ஹல்லிகரே சென்னை கேசவர் கோவில் ஒரு விஷ்ணு கோவில். இது அரிசிக்கரே யிலிருந்து 22 கிமீ.
1163 ஆம் ஆண்டில் மன்னர் நரசிம்மனின் மந்திரியால் கட்டப்பட்டது. ஏக கூட கோவில்; சிறிய அளவு சிற்பங்களைச் சுற்றுப்புற சுவர்களில் கண்டு களிக்கலாம்
ஷிமோகாவில் (சிவ மொக்க ) பல கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை
Shimoga – Bhavani Shankara Temple.
shimOga – bhImEshvar, guddekal siddheshwara.
Shimoga hale Gramathana – Kote Parameshwara Temple. கோவில் ஆகியன ஆகும்
94.பத்ராவதி லெட்சுமி நரசிம்ம கோவில் Lakshmi Narasimha Temple,Bhadravati
லெட்சுமி நரசிம்ம கோவில் , ஒரு பெருமாள் கோவிலானாலும், கணபதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, பைரவர், சூர்யன், ஹரிஹரன் ஆகியோரையும் தரிசிக்கலாம்.இதை ஹோய்சால மன்னர் வீர சோமேஸ்வரர் 13-ஆம் நூற்றாண்டில் கட்டினார் . வேசர பாணி கோவில்; இந்த திரிகூட அமைப்புடைய கோவிலில் 3 சந்நிதிகளில் வேணு கோபாலர், நரசிம்மர்,
புருருஷோத்தமர் மூர்த்தங்கள் உள்ளன.
ஷிமோகாவிலிருந்து 20 கி.மீ.
95.கேதாரேஸ்வர கோவில் Kedareshvara temple, Balligavi

இது சிவன்கோவில்; ஆயினும் விஷ்ணு மூர்த்தியும் இருக்கிறது. நான்கு முக பிரம்மா இப்பொழுது தனியாக கோவில் மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளது 1131 ஆம் ஆண்டு கல்வெட்டு முதல் பல கல்வெட்டுகள் நிறைந்த இடம். ஹொய்சாளர்- சாளுக்கிய பாணிகளை காணலாம்.
96.திரிபுராந்தக கோவில் Tripurantaka Temple (also called Tripurantakesvara or Tripurantakeshwara)
இது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சாளுக்கியர் கோவில்.
இதன் சிறப்பு அம்சம்- காமலீலைகள் உள்ள கஜுராஹோ பாணி சிற்பங்கள் வெளிச்ச சுவரில் இருப்பதாகும் கண்ட பேரண்ட பக்ஷி சிலை யும் இருக்கிறது. கோவில் பாழடைந்த நிலையில் கிடக்கிறது அலங்கார கல் ஜன்னல்கள். பின்னிப் பிணைந்துள்ள நாகர் சிற்பங்கள் குறிப்பிட்டது தக்கவை ; பைரவர் ரூபத்தில் சிவ பெருமான் , காட்சி தருகிறார். பிரம்மா விஷ்ணு சிலைகளும் காணப்படுகின்றன.
ஷிமோகாவிலிருந்து 72 கிமீ; ஷிகரிபுராவிலிருந்து 21 கிமீ தொலைவில் பல்லிகாவி இருக்கிறது.
இந்த ஊர் வீர சைவ மகான்களான அல்லம பிரபு, மஹாராணி சாந்தலா, அக்க மஹாதேவி, ஏகதந்த ராமய்யா, ஆனிமிசையா ஆகியோருடன் தொடர்புடையது .
97.தால குண்டா கோவிலும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் Tālagunda pillar inscription of Kakusthavarman

ஷிமோகாவிலிருந்து 80 கி.மீ.தூரத்தில் தால குண்டா இருக்கிறது. 1600 ஆண்டுகளுக்கு முந்திய மிகப்பழைய கல்வெட்டு இந்த ஊரின் பிராணேஸ்வர சிவன் கோவிலில் இருக்கிறது காகுஸ்தவர்மன் என்ற புகழ்பெற்ற கடம்ப வம்ச மன்னரின் கல்வெட்டு இது ; கன்னட லிபியில் ஸம்ஸ்க்ருத கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.24 ஸ்லோகக்ங்கள் அற்புதமான சம்ஸ்க்ருத கவிதை வடிவில் உள்ளது. இது மயூர சர்மன் என்ற பிராமணர் பற்றி விவரிக்கிறது. ஐந்தாம் நூற்றாண் டிலேயே தூய சம்ஸ்க்ருத மொழிக்கவிதை இருப்பதும், ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து இருப்பதும் தென்னகத்தில் ஸம்ஸ்க்ருதமும் சைவமும் தழைத்தோங்கிய முக்கிய விஷயங்களை இந்தக் கல்வெட்டு காட்டுகிறது
அது மட்டுமல்லாமல் இதே காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேஷியாவில் அடர்ந்த போர்னியோ காட்டுக்குள் மூலவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் கிடைத்துள்ளது. பர்மாவிலும் ஏறத்தாழ இதே காலத்தில் “வர்மன்” பெயருடைய கல்வெட்டு கிடைத்திருக்கிறது.
இதற்கெல்லாம் பின்னர்தான் தமிழ் நாட்டில் நமசிவாய ஈன்ற மந்திரத்தை தேவாரத்திலும் , திருமுறைகளில் காண்கிறோம். இதற்குப் பின்னர்தான் கம்போடிய வர்மன் மன்னர்களைக் காண்கிறோம். இதற்குப் பின்னர்தான் காஞ்சீபுரத்தில் மஹேந்திர வர்மன் பெயரைக் காண்கிறோம் .
இந்த வர்மன் என்ற ஷத்ரியப் பெயர் பல்லாயிரம் சதுர மைல் பரப்பில் ஒரே காலத்தில் காணப்படுவது அகண்ட பாரதம் போர்னியோ தீவு வரை பரவியதைக் காட்டுகிறது
பிராண லிங்க கோவில் பாழடைந்து இருந்தாலும் இந்தக் கல்வெட்டால் பிராண லிங்கேஸ்வர கோவில், அழியாத வரலாற்றில் இடம்பெறுகிறது .
The language is excellent classical Sanskrit (follows the rules of ancient linguist Panini). The script is Kannada and the font is floral box-type.
The inscription consists of 24 poetic verses that respect the chanda rules of Sanskrit. However, it uses a mix of meters such as Pushpitagra, Indravajra, Vasantatilaka, Prachita and others. Each verse has four padas. The inscription’s first 24 verses are the earliest known use of matrasamaka meter. These features suggest that the author(s) of this inscription had an intimate expertise in classical Sanskrit and Vedic literature on prosody.
To be continued………………………
tags- தால குண்டா , ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு, கர்நாடக மாநில, 108, புகழ்பெற்ற, கோவில்கள் , Part 20