ஆயுர்வேத  சிகிச்சையும்  அல்லோபதி சிகிச்சையும் -1 (Post No.12,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,405

Date uploaded in London – –  12 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

ஆயுர்வேத  சிகிச்சையும்  அல்லோபதி சிகிச்சையும் 

அல்லோபதி ALLOPATHY என்பது நாம் இன்று டாக்டர்களிடம் பெரும் ஆங்கில சிகிச்சை முறை.

ஆயுர்வேத சிகிச்சை AYURVEDIC TREATMENT என்பதன் தோற்றம் / ஆரம்பம் ரிக்வேதம், அதர்வண வேதத்திலேயே இருக்கிறது. இதனால் உலகின் பழைய மருத்துவ முறைகள் என்று சொல்ல முடியும்.

சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும் எழுதிய சம்ஸ்க்ருத மருத்துவ நூல்கள்  உலகிலேயே பழைய மருத்துவ நூல்கள் ஆகும். இப்போதைய மருத்துவ மாணவர்கள் எடுக்கும் ஹிப்போக்ரடீஸ் உறுதி மொழிக்கும் Hippocratic Oath  முன்னதாகவே மருத்துவர்கள் எடுக்கவேண்டிய உறுதி மொழிகள் நமது நூல்களில் உள்ளன. இந்துக்களைப் பொறுத்தமட்டில் தன்வந்திரிதான் மருத்துவத்தின் தந்தை ; கடவுளை டாக்டர் என்று அழைக்கும் ஓர் மதம் இந்துமதம்தான். பேஷஜம் . பிஷக் என்று மருந்ததையும் மருத்துவத்தையும் குறிக்கும் சொற்கள் சிவ பெருமானின் பெயர்களாக யஜுர் வேதத்தில் வருகின்றன .

சமய நூல்களில் குறிப்பிடும் பிணி, நோய் என்பது பவ ரோகம், அதாவது பிறவிப்பிணி (பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் நோய்) என்று எண்ணிவிடக்கூடாது அந்த நோயையும் உடலில் வரும் நோயையும் நமது துதிகள் குறிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரி சந்நிதி இருப்பதைக் காணலாம். அவர்தான் மருத்துவத்தின் தந்தை; மேலும் அந்தக் கோவிலில் மருந்தாக மண் உருண்டை, உப்பு, மிளகு கொடுப்பதெல்லாம் பிறவிப்பிணி சம்பந்தப்பட்டதல்ல. உடல் பிணி தொடர்புடையன ! 

Bheshajam – That which removes the fear is known as bheshajam. The one which is known by the bhishak(physician), which is helpful in his treatment is known as bheshajam.

நம் நாட்டு மருத்துவ முறைக்கும் வெளிநாட்டு ஆங்கில மருத்துவ முறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மூன்று  ; அவை

1. ஆங்கில மருத்துவம் , நோய் வந்த பின்னர் சிகிச்சை தருவது. ஆயுர்வேதம் என்பது நோய் வராமலேயே செய்து ஆயுளை வளர்ப்பது ; இதையே இன்னும் ஒரு முறையிலும் சொல்லலாம்; வந்த பின்னர் வருந்துவதை விட வருமுன் காப்பதே மேல்

2.ஆங்கில மருத்துவ முறை நோயை மட்டும் தாக்கும் , நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்துகளைத் தருவார்கள் ; ஆனால் ஆயுர்வேத, சித்த மருத்துவம் முழுமையான அணுகுமுறை உடையவை; இதை ஆங்கிலத்தில் ஹோலிஸ்டிக் HOLISTIC என்பர்

3.பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள்ANTI BIOTICS  நம் உடலில் உள்ள ‘நன்மை செய்யும் பாக்டீரியா’க்களையும் கொன்றுவிடும். இந்திய டாக்டர்களாவது அதைச் சொல்லி வைடமின் மாத்திரைகளும் சாப்பிடுங்கள் என்று சொல்லுவார்கள்; லண்டன் போன்ற இடங்களில் அதையும் சொல்லுவதில்லை. இங்கு டாக்டர் சீட்டு இருந்தால்தான் அந்த வகை மாத்திரைகள் கிடைக்கும். பாக்டீரியாக்கள் அந்தவகை மாத்திரைகளையும் உண்டு, கொழுத்து, ஏப்பம் விட்டு விடுவதால் மேலை நாடுகளில், இந்தியா போல மருந்துக்கு கடைகளில் ANTI BIOTIC CAPSULES ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகளை வாங்க முடியாது.

2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மத நூல்களும் பிரபல மருத்துவர்கள் பற்றிப் பேசுகின்றன . .வேத காலத்தில் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டை மருத்துவர்கள் ஒரு பெண் கவிஞருக்கு செயற்கைக் கால் பொருத்திய அறுவைச் சிகிசிச்சையை ரிக் வேதம் பாடுகிறது ; சங்க காலத் தமிழர்கள் பொற்கைப் பாண்டியனுக்கு தங்கத்தினால் ஆன செயற்கைக் கை பொருத்திய விஷயத்தைப் பேசுகிறது

xxxx

ஹோலிஸ்டிக் HOLISTIC என்றால் என்ன?

நோயாளியை ஒரு முழு மனிதன் என்று கொண்டு, அவனது  உணவு, உடல் வாகு, உறைவிடம், மன நிலை, வாழும் சூழ்நிலை ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டு சிகிச்சை தருவது இந்திய நாட்டு வைத்தியமாகும்

characterized by the treatment of the whole person, taking into account mental and social factors, rather than just the symptoms of an illness.

இதை இன்னும் ஒரு விஷயத்தால் அறியலாம். லண்டன் முதலிய இடங்களில் நான் டாக்டரிடம் போனால் அவர் , மருந்துச்  சீட்டை எழுதிக்கொடுப்பார். ஆனால் உணவு பத்திய முறைகள் பற்றி எதுவுமே சொல்ல மாட்டார். சர்க்கரை வியாதி உடையவர்ளுக்கு மட்டும் இனிப்பு சாப்பிடாதீர்கள் என்பார்; கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்புச் சத்து மிக அதிகமானால் எண்ணெய்வெண்ணெய் பதார்ர்த்தங்களை  சாப்பிடாதீர்கள் என்பார். நம்முடைய முறையில் எல்லா நோய் சிகிச்சைகளிலும் பத்தியம் உண்டு

சரகர் சொல்லும் அற்புத உவமை

சரகர் தனது சம்ஹிதையில் ஒரு அற்புத உவமையைச் சொல்கிறார்; அவருக்கு நோய்கள் பற்றி எவ்வளவு ஆழமான அறிவு இருந்தது என்பதை இது காட்டும்.

விதைகளை வெளியே வைத்திருந்தால் அவை முளைப்பதில்லை. அவைகளை மண்ணில் புதைத்து வைத்தால் அவை வளரும். இதே போலத்தான் நோய்க் கிருமிகளும் . அவை விதைக்குள் உள்ள கருப் போல  செயலற்றுக் கிடக்கும் உடலில் வைத்தால் அவை நோயாகக் கிளம்பும் . நல்ல மண், நல்ல உரம் இருந்தால் விதைகள் வளருகின்றன. அதே போல நோய்க்கிருமிகளுக்கு நாம் உரம்போட்டால் அவைகளும் வளரும். அப்படி வளராமல் தடுக்க  மூலிகை, கஷாயம், பத்தியம்  போன்றவை மூலம் ஆயுர்வேதம் உதவுகிறது ..

ஆங்கில மருத்துவ முறையில் இல்லாத நமது நாட்டுப் புற வைத்தியத்திலுள்ள பத்தியம் பற்றி நல்ல சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று இருக்கிறது

ரோகோபி பேஷஜைர் வினா பத்யாத் ஏவ நிவர்த்ததே

ந து பத்யாபிஹீ நஸ்ய பேஷஜனன்சதைர்  அபி — சார கெளமுதி 2-1

பொருள்

நோய்களை, மருந்துகளே இல்லாமல், உணவுப் பத்தியத்தின் மூலமே  குணப்படுத்தவும் இயலும்; ஆனால் சரியான பத்தியம் / உணவுக் கட்டுப்பாடு இல்லாவிடில் நூறு மருந்துகளைக் கொடுத்தாலும் நோய்களைக் குணப்படுத்த முடியாது

இது போன்ற பத்திய விஷயங்கள் மேலை நாட்டு வைத்ததியத்தில் கொஞ்சமும் இல்லை. சர்க்கரை வியாதி இருந்தால் மட்டும் உணவு பற்றி வெட்டி முழக்குவர்.

To be continued…………………………………

tags- tags- சரகர் , உவமை, பத்தியம், ஆயுர்வேத  சிகிச்சை,  அல்லோபதி சிகிச்சை

Leave a comment

Leave a comment