Post No. 12,406
Date uploaded in London – – 12 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
QUIZ SERIES No.65
தமிழ் இலக்கண பத்து
1.தமிழில் உள்ள முக்கிய இலக்கண நூல்கள் எவை ?
XXX
2.தமிழர்களுக்கு ஏன் சுவாமிநாத தேசிகரைப் பிடிப்பதில்லை ?
XXX
3.இப்போதுள்ள இலக்கண நூல்களில் பழைய நூல் தொல்காப்பியம்; அதற்கு முன்னர் என்ன நூல்கள் இருந்தன?
XXX
4.வீர சோழியம் என்னும் இலக்கண நூலாய் எழுதியவர் யார் ?
XXX
5.தொல்காப்பியயத்துக்கு அடுத்த பெரிய மைல் கல் MILE STONE நன்னூல் அதை எழுதியவர் யார்? அதற்கு கரணம் என்ன ?
XXX
6.பவணந்தி முனிவர் யார் ?
XXX
7.தமிழ் சொல்லுக்கெல்லாம் தாய் ஸம்ஸ்க்ருதம்தான் என்று சொன்னவர் யார் ?
XXX
8.பிரயோக விவேகம் என்னும் தமிழ் இலக்கண நூல் விளம்புவது என்ன ?
XXX
9.ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்று சொன்னவர் யார் ?
XXX
10.சிவஞான முனிவர் யார்? இலக்கணம் பற்றிய அவர் கருத்து என்ன?
XXX


விடைகள்
1.முக்கிய தமிழ் இலக்கண நூல்கள்
தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம்
நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம்
இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம்
முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகிய நூல்கள்
XXXX
2.இவர் இலக்கணக் கொத்து என்னும் நூலின் ஆசிரியர்; தனித்த தமிழில் நூலே இல்லை. பின்னர் எப்படி தமிழை ஒரு மொழி என்று சொல்ல முடியு? வெட்கக்கேடு என்று எழுதிவிட்டார் . தமிழ், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் இலக்கணம் ஒன்றுதான் என்பது அவர்தம் வாதம்
“தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடையோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக.
XXXX
3.அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்தது; அது கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள்களில் இருந்து பல செய்யுள் விதிகள் கிடைத்தன.
XXX
4.புத்தமித்திரர் என்பவர் 11 ஆம் நூற்றாண்டில் வீர சோழன் ஆட்சிக் காலத்தில் எழுதியது இந்த நூல். தொல்காப்பியம் சொல்லும் விதிகளுடன் சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.
XXX
5.நன்னூல் பொ.து ஆண்டு . 13-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டது மொழிகள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை எல்லா உலக மொழிகளும் காட்டுகின்றன ; தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் தோன்றியது. அதற்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் நன்னூல் தோன்றியது. இடைக்கால மொழி மாற்றங்களை கருத்திற்கொண்டு புதிய இலக்கண விதிகளை இயற்றினார் பவணந்தி முனிவர். மயிலைநாதர் என்பவர் உரை எழுதினார்
XXX
6.பவணந்தி முனிவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசன் என்பது பாயிரத்திலிருந்து தெரிகிறது பொன்மதிற் சனகை என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.சாமிநாதய்யர், பவணந்தியாரை மைசூருக்கு அருகிலுள்ள நரசிங்கபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். தொண்டை நாட்டிலும், சனகாபுரம் என்று ஊர் இருக்கிறது. தொண்டை மண்டல சதகத்திலும் நன்னூல் எழுதிய பவணந்தியார் வாழ்ந்த சனகாபுரத்தைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது; ஆகையால் தொண்டை மண்டலம் என்பதே சரி
XXX
7.வீரசோழியம் என்ற நூலின் ஆசிரியர் புத்தமித்திரர். அவருடைய மாணாக்கர் ; பெருந்தேவனார். இருவரும் பௌத்தர்கள்.
தமிழ் சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் – வீரசோழிய உரை ஆசிரியர் பெருந்தேவனார். இவரது காலம் 12-ஆம் நூற்றாண்டு.
XXX
8.பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரைச் சேர்ந்தவருமான சுப்பிரமணிய தீட்சிதர் என்பார் இந்நூலை இயற்றினார். இந்நூலுக்கான உரையையும் இவரே எழுதியுள்ளார்.
தமிழும் வடமொழியும் வேறல்ல என்றும் வடமொழியிலிருந்தே தமிழ் மொழி உருவானது என்றும் வடமொழி கற்றோரிடையே அக்காலத்தில் நிலவிய கருத்தையே இந்நூலும் வலியுறுத்துகின்றது.
XXXX
9.சேனாவரையர். அவர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
ஒரு சொல்லாய வழித் தமிழ் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் – சேனாவரையர்
XXX
10.சிவஞான முனிவர் (1753 – 1785) தமிழ் மொழியிலும், சம்ஸ்க்ருத மொழியிலும் புலமை பெற்றவர்.சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்; இளமையிலேயே துறவியானவர். வடமொழியும் தமிழ்மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர் ;சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.
தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்கள் உரை உரையாகா எனவும் வடநூல் உணர்ந்தாற்கன்றித் தமிழியல்பு விளங்கா எனவும் உரைத்தார் சிவஞான முனிவர்.
XXX
—SUBHAM—
TAGS- இலக்கண நூல்கள், பவணந்தி , நன்னூல், மயிலைநாதர், சம்ஸ்கிருதம் தாய் மொழி, அகத்தியம்
