
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,411
Date uploaded in London – – 13 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
First Part was posted yesterday

மேலை நாட்டு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டால் எதிரிடை அல்லது பக்க விளைவுகள் (Side Effects) அதிகம்; அவை உடலின் இயற்கையான நோய்த்தடுப்பு சக்தியை (damaging (Immune System) ஒழித்துக் கட்டிவிடும் . மன நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் அவர்களுடைய பாலியல் இயல்புகளை ஒடுக்கி செக்ஸ்SEX என்பதையே நினைக்க முடியாமற் செய்து விடும். அதுமட்டுமல்ல, வாழ் நாள் முழுதும் மருந்துக்கடை வாடிக்கையாளர் ஆக்கி விடும் (Life time dependence on medicines) . அவர்கள் நாம் மாதம் தோறும் அரிசி, புளி , பருப்பு வாங்குவது போல வாரம் தோறும் மருந்துகளையும் பில் Bill லையும் அனுப்பி விடுவார்கள் !!
சரகர் எழுதிய மருத்துவ நூலுக்கு பாஷ்யம்/ விரிவுரை எழுதியவர் ஆயுர்வேதத்தினால் ஏற்படும் நன்மைகளை அழகாக விளக்குகிறார் அவருடைய பெயர் சக்ரபாணி பண்டிதர் ,
முதலாவது நோயே வராமல் தடுக்கும்; இரண்டாவதாக, நோய் ஏற்பட்ட பின்னர் சாப்பிட்டாலும் நோயின் வீரியத்தை ஒடுக்கும் என்கிறார் :
வியாதிக சமத்துவம் வ்யாதி பல விரோதித்வம் வ்யாதியுத் பதபிரதிபந்தகத்வம்
—சரக சம்ஹிதை 26-27
தினமும் நல்ல மூலிகை, கீரைகளை சமையலில் சேர்ப்பதால் நோய்த் தடுப்பு ஆற்றல் அதிகரிக்கும் .

என் அம்மா செய்த வைத்தியம் !
நான் 60, 65 ஆண்டுகளுக்கு முன்னர் என் அம்மா செய்த வைத்தியம் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது; வாரம் தோறும் எங்களை அழ , அழ வைத்து எண்ணெய் குளியல்/ ஸ்னானம் செய்ய வைப்பார்கள் . அன்றைய தினம் கண்டத்திப்பிலி ரசம் வைப்பார்கள். ஆறு மாதத்துக்கு முன்னர் இந்தியா போனபோது நான் சென்னையில் கண்டத்திப்பிலியும் சித்திரத்தையும் வாங்கி வந்தேன். இருமல் வந்தால் சித்திரத்தையை சிறிது வாயில் மெல்லுகிறோம் கஷாயம் வைக்கும் பொறுமை இல்லை.
யாரேனும் வயிற்றுக் கோளாறு என்று கம்ப்ளைன்ட் Complaint பண்ணினால் அனறைய தினம் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிளகு ரசம் அல்லது ஜீரா ரசம்தான். ஏனைய நாட்களில் தக்காளியுடன் பருப்பு ரசம்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அன்றிரவு எங்களுக்கு ஜீரகப்பொடி சாதம் ; அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுக்கோளாறுகளை இது சரிக்கட்டி விடும்
இது தவிர வருடத்தில் ஓரிரு முறை கட்டாயப்படுத்தி விளக்கெண்ணெய் குடிக்க வைத்த கதைகளும் உண்டு.
உங்களில் பலருக்கும் இந்த அனுபவங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிள்ளைகளின் உடலை வலுப்படுத்த– கான்க்ரீட் அஸ்திவாரம் போட்டு கட்டிடங்களை வலுப்படுத்துவது போல — எவ்வளவோ முயற்சிகளை தாய்மார்கள் மேற்கொள்வது இயற்கைதான்.
பாட்டியும் சும்மா இருக்க மாட்டார்கள் உமிக்கரி பற்பொடி , கல்நார் பற்பொடி என்று பலவகை பற்பொடிகளைச் செய்து ஏதோ ஏதோ கலப்பார்கள் ; அது என்ன என்று கேட்டதில்லை. உமிக்கரி கருகுவதை மட்டும் வேடிக்கை பார்ப்போம்.
அதனால்தானோ என்னவோ 75 வயது ஆகியும் ஒரே ஒருமுறை மட்டும்தான் பல் டாக்டரிடம் போய் ‘இளித்’தேன்! அதாவது பல்லைக் காட்டினேன் ;ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் 40, 45 வயதுள்ள என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பல் வலி வந்தால் என்ன செய்வதென்று கூட அறியாதவன் நான் என்று சொல்லி 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு முறை பல் டாக்டரிடம் போனேன் என்று சொல்லி சம்பாஷணையைத் தொடர்ந்தேன் ; அவர் இதை மறித்து
What, What வாட், வாட் ?? என்று கேட்டு அவர் என்னை நிறுத்திவிட்டு
நான் இதற்குள் நாலைந்து முறை பல் டாக்டரிடம் போய்விட்டேன் என்றார் ; இவ்வளவுக்கும் அவர் வெற்றிலைப் போடுபவரும் அல்ல ; சாக்லேட் சாப்பிடுவபருமல்ல !

கிழவிகள் மர்மம் !
எனக்கு ரொம்ப நாளாகா ஒரு Doubt டவுட்டு; என்னைவிட வயதான கிழவிகளுக்கு, மன்னிக்கவும் பெண்மணிகளுக்கு, எப்படி அழகான , முத்துப்போல பற்கள் இருக்கின்றன ? என்று வியப்பேன் . ஒரு டாக்டர் பெண்மணி, எங்களுக்கு நல்ல நண்பர் ; எப்போது போனாலும் அந்த வயதான தம்பதிகளுக்கு பிஸ்கட் அல்லது காரசேசேவை போன்றவற்றை வாங்கிச் செல்வேன். ஒருமுறை கொஞ்சமும் கூசாமல் இரு, இரு, பல் செட்டை ‘க்ளீன் clean செய்ய ஊரப்போட்டு வைத்திருக்கிறேன் ; போய் மாட்டிக்கொண்டு வருகிறேன் என்று உள்ளே விரைந்தார் எனக்கு சிரிப்பதா பிரமிப்பதா என்று புரியவில்லை. அப்போதுதான் கிழவிகளின் முத்துப்பல் மர்மம் துலங்கியது அதுவரை அந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்க்காதது என் அறியாமையே!
—Subham—
Tags- அம்மா வைத்தியம், விளக்கெண்ணெய், கண்டத்திப்பிலி, எண்ணைக் குளியல், ஆயுர்வேதம் ,அல்லோபதி , பகுதி 2