
Picture of Karwar Durga Temple
Post No. 12,410
Date uploaded in London – – 13 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 21
PAART 21
98.கேலடி ராமேஸ்வர, வீர பத்ரேஸ்வர கோவில்கள்
99.இக்கேரி அகோரேஸ்வர் கோவில்
100.கார்வார் துர்கா கோவில்
101.ஸெஜ்வாட் ஸெஜ்ஜேஸ்வர் கோவில்
102.அவர்சா காத்யாயனி கோவில்
XXXX
கேலடி ராமேஸ்வர, வீர பத்ரேஸ்வர கோவில்கள் KELADI RAMESHVARA AND VEERA BHADRESHVARA TEMPLES
500 ஆண்டுகளுக்கு முந்திய நாயக்கர் ஆட்சியின் கலைகளைப் பிரதிஅளிக்கும் கோவில்கள் கேளடி இக்கேரி கோவில்கள் ஆகும்


சாகர் என்னும் நகர் அருகிலுள்ள ராமேஸ்வரர் கோவிலில் 24 அடி உயர தூணில் பிள்ளையாரை பெண்கள் வணங்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது . அது மஹாராணி சென்னம்மாவின் உருவம் என்று கருதப்படுகிறது. இருதலைப் பறவை என்னும் கண்டபேரண்ட பட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நாணயங்களிலும், கொடிகளிலும், சங்க கால அகநானூறு நூலிலும் இருதலைப் பறவை உள்ளது ராமேஸ்வரர் கோவிலிலும் வீரபத்ரேஸ்வர் கோவிலிலும் சிவா பெருமானைத் தரிசிக்கலாம்.
வீரபத்ரேஸ்வர் கோவிலில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம், புலி, யானை, குதிரை, பறவைகள் ஆகியன கான் வேண்டிய சிற்பங்கள்
கேலடி , ஷிமோகா நகரிலிருந்து 80 கி.மீ.
ஷிமோகா என்றவுடன் எல்லோருக்கும் அதி உயரத்திலிருந்து விழும் ஜோக் பால்ஸ் JOG FALLS என்னும் நீர்வீழ்ச்சசிதான் நினைவுக்கு வரும். அங்குள்ள கோவில்கள் பற்றிப் பலருக்கும் தெரியாது .
விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஆட்சி செய்த செளடப்ப நாயக்கர் இந்த இரட்டைக் கோவில்களைக் காட்டினார். கோவிலில் உள்ள லிங்கம், ஒரு நிலத்துக்கு அடியில் கிடைத்தது பற் றிப் பல சுவையான கதைகளை சொல்ல்லுவார்கள் கிராம மக்கள்.
ஏனைய தெய்வங்களின் உருவங்களும் இங்கே சேத்துப்பட்டுள்ளன. இங்குள்ள பார்வதி சந்நிதியில் மார்ச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை; பெரிய மரத்தினாலான தேரும் நிற்கிறது ; கோவிலுக்கு எதிரியுள்ள மியூயமும் காணவேண்டிய இட ம் .
ராமேஸ்வரம் கோவிலைப் பார்க்கச் செல்லுவோர் மறக்காமல் போக வேண்டிய இடங்கள் :
Sagara சாகர
Jog falls ஷராவதி நதியில் உள்ள ஜோக் அருவி
Shivamogga சிவமொக்கா /ஷிமோகா
Sringeri Mutt சிருங்கேரி மடம்
Mattur: The Sanskrit Village சம்ஸ்க்ருதம் பேசும் மக்கள் உள்ள மாத்தூர்
Coffee Museum in Dasarahalli தசரஹல்லி காப்பி மியூஸியம்
Aghoreshwara Temple of Ikkeri இக்கேரி அகோரேஸ்வர கோவில்
Murudeshwar Temple and Bhukailasa Cave Museum in Murdeshwarமருதேஸ்வர் கோவில், குகை மியூஸியம்
Kamalapura Archaeological Museum in Kamalapura on Daroji-Kamlapura Road கமலா புர தொல் பொருட் துறை மியூஸியம்.
99.இக்கேரி அகோரேஸ்வர் கோவில் IKKERI AGHORESVARA TEMPLE
சாகர் என்னும் ஊரிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இன்னும் ஒரு நாயக்கர் கோவில் அகோரேஸ்வரர் என்னும் சிவன் கோவில் ஆகும்
இக்கேரி என்னும் ஊரின் பெயருக்கு இரண்டு தெருக்கள்/ வீதிகள் என்று பொருள் . இந்தக் கோவில், அளவில் மிகப்பெரியது
கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் அமர, பள பள கருங்கல் நந்தி எதிரே நிற்கிறது. கர்ப்பகிரகத்தைச் சுற்றி 32 பெண்கள் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது ; விக்ரமாதித்தன்- வேதாளம் கதையில் வரும் 32 தங்கபதுமைகளை நினை வு படுத்தும் அவை.
தமிழ் நாட்டிலுள்ள நாயக்கர் காலா கோவில்களில் காணப்படும் யானை, யாளி ஆகியவற்றை இங்கும் காணலாம். ஒருகாலத்தில் இந்த ஊர் கேலடி நாயக்க வம்சத்தினரின் தலைநகரமாக இருந்து .
100.கார்வார் துர்கா கோவில் KARWAR DURGA TEMPLE
சதாசிவகாட் அருகி ல் குன்றின் மேல் குடிகொண் டுள்ளாள் அழகிய துர்கா பவானி. கோவில் பக்கத்தில் ஒரு பீரங்கியும் நிற்கிறது. தொலைவில் கடலின் பேரலைகளையும் காணலாம். துர்காதேவியின் அழகில் மயங்குவோர் கண்களை வேறு பக்கம் திருப்ப மாட்டர்களாம் .
மலையின் உச்சி வரை கார்கள் போகின்றன. சிவாஜி மகாராஜனும் வந்து வனகிகிய துர்க்கை இவள் என்ப து பக்தர்களின் கதை.
கார்வார் பஸ் நிலையத்த்திலிருந்து 6 கி.மீ
காளி நதியின் வட கரையில் அமைந்த இந்த குன்றிலுள்ளதுர்கை சிங்கத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறாள்
சாந்த துர்கா என்ற பெயரும் உண்டு Shanthadurga Temple. இது 1665ம் (CE ) ஆண்டில் கட்டப்பட்டது
101.ஸெஜ்வாட் ஸெஜ்ஜேஸ்வர் கோவில் SHEJJESWAR TEMPLE, , SHEJWAD
தேவ்பாக் கடற்கரை அருகில் அமைந்த ஆத்மலிங்க கோவில் இது; இறைவனின் நாமம்- ஷெஜ் ஜேஸ்வர லிங்கம்.கோகர்ண சிவ லிங்கத்தை ராவணன் பிடுங்க முயன்றபோது விழுந்த ஒரு கல் இந்த லிங்கம் என்பது பக்தர்கள் சொல்லும் கதை. 3 ஆத்மலிங்கங்கள் இருப்பதாகவும் அனைத்தையும் ஒரே மூச்சி ல் / ஒரே சுற்றில் தரிசிப்பது விசேஷம் என்றும் தீவிர சிவா பக்தர்கள் நம்பு கிறார்கள் ; அந்த ஐந்து ஆத்ம லிங்கங்கள் பின்வருமாறு :
1. Shejjeswararlingam ஷெஜ் ஜேஸ்வர லிங்கம்.
2. Mahabaleswarar, Gokarna கோகர்ண, மஹா பலேஸ்வர்
3.Daranatheswar,Dhareswar தரநாதேஸ்வர தாரேஷ்வர்
4.Gunavatheswar, Gunawandhe குணவதேஷ்வர்
5.Mmurdeswarar, Murdeswarar.முருதேஸ்வர் என்ற 5 ஆத்ம லிங்கங்கள்.

102.அவர்சா காத்யாயனி கோவில் Shri Katyayani Baneshwar Temple, Aversa
கப்பல் வடிவில் கோவில்
உத்தர கன்னட மாவட்டத்தில் அங்கோலா அருகில் இருக்கிறது இந்த காத்யாயனி பாணேஸ்வரர் கோவில். கோவா நகரிலிருந்து 100 கிமீ .
பல பிராமண குடும்பங்களின் குல தெய்வம் காத்யாயனி. தலை சிறிது தாழ்த்திய நிலையில் காத்யாயனி அருள் மழை பொழிகிறாள் . மதுரை மீனாட்சி போல, இங்கும் காத்யாயனிக்குதான் முதல் பூஜை. பின்னர் சிவ பெருமானாகிய பாணே ச்வரருக்கும் கணபதிக்கும் பூஜை. இந்தக் கோவில் கப்பல் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது
கோவாவிலுள்ள இந்தக் கோவில்களை பொற்சசுக்கீசிய கிறிஸ்தவர்கள் அழித்தது போக எஞ் சிய ஒரே தெய்வம் காத்யாயனிதான் .கோவிலைப் பற்றி நீண்ட கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு கப்பல் வியாபாரிக்கு ஏற்ப்பட்ட கஷ்டங்களிலிருந்து இந்த ஸ்ரீ தேவி மீட்டதால் கப்பல் வடிவில் கோவில் கட்ட அவர் உறுதி மொழி எடுத்தார். அன்னையும் அவருக்கு அருள்புரியவே 400 ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் வடிவில் எழுந்தது இக்கோவில் .
To be continued………………………………..
Tags கப்பல் வடிவ கோவில், காத்யாயனி, ஆத்ம லிங்க, கோவில்கள்,
கேலடி நாயக்கர்கள் , பகுதி 21, கர்நாடக,