கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1 (Post No.12,416)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,416

Date uploaded in London – –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1 (Post No.12,416)

ஆயுர்வேதசிகிச்சை முறைகள் பற்றி தென் அமெரிக்க நிபுணர் !

தென் அமெரிக்காவில் மிக நீண்ட கடற்கரை உடைய நாடு PERU பெரு . சுமார் 2000 மைல் நீளத்துக்கு பசிபிக் மஹாசமுத்திரத்தைக் காணலாம். அ ந்த நாட்டின் மாற்று மருத்துவ முறைகளின் நிபுணர் ரூபன் தேவோட்டோ பேரால்டா RUBEN DEVOTO PERALTA இரண்டு முறை இந்தியாவில் நடந்த மாற்றுச் சிகிச்சை முறைகள் மகாநாட்டில் INTERNATIONAL CONGRESS OF ALTERNATIVE MEDICINE  கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்துள்ளார்  அவர் நிறைய சுவையான விஷ்யங்களைச் சொல்கிறார் ; ஒன்றிரண்டு அதிசய சம்பவங்களை முதலில் காண்போம்.

((ஒரு முறை ஆர் எஸ் எஸ் R S S பிராந்திய பிரசாரக் இராம கோபாலனுடன் (GOPALJI) பேசிக்கொண்டிருந்தோம். மாநிலத் தலைமை பிரசாரக்காக நீண்ட காலம் தமிழ் நாட்டில் பணியாற்றிய இவர் பிற்காலத்தில் இந்து முன்னணி யைத் துவக்கியவர் அவரிடம் ஸ்ரீபுரம் நாராயணி அம்மா என்பவரைப் பற்றிக் கேள்வி கேட்டோம். அவர் உண்மையான சாமியார்  ஒரு கான்ஸர் நோயாளி போனார்; அவர் புற்று நோயுள்ள இடத்தில் கையை  வைத்து கான்ஸர் கேன்சல்ட் CANCER CANCELLED என்று சொன்னார்; பின்னர் எக்ஸ்ரே எடுத்ததில் அந்த நோய் அறவே இல்லை என்று தெரிந்தது என்று சொன்னார். இது போல பலர் சத்ய சாய் பாபா முதலியோர் செய்த மருத்துவ அதிசயங்களையும் படித்துள்ளேன் . இது கை மருத்துவம் . இது போல கிருஷ்ணரும் கிறிஸ்துவும் செய்த இரண்டு நிகழ்ச்சிகளை பெரு நாட்டின் நிபுணர் சுட்டிக்காட்டுகிறார். (HEALING HANDS)

((அவரவர் கரும வினையில் சிலவற்றை அழிக்க முடியும். சில வகை பிராரப்த கர்மாக்களை அனுபவித்துதான் அழிக்க முடியும்; இது ரமணர்ராம கிருஷ்ண பரம ஹம்சர் போன்ற மஹான்களுக்குத் தெரியும். அவ்விரு மகான்களும், சன்யாசி போன்ற தூய வாழ்க்கை நடத்திய மாதவ சதாசிவ கோல்வால்கரும் (குருஜி) புற்று நோயால் மரணம் அடைந்ததை நாம் அறிவோம். அவர்கள் அதுபற்றி அணு அளவுக்கும் கவலைப்பட்டதில்லை அழுக்குச் சட்டையை நாம் எப்படிக் கவலைப் படாமல் தூக்கி எறிந்தோமோ அப்படி அவர்கள் உடலையும் விட்டனர்.

நாம் ஒரு சக்தியுள்ள மஹானை அணுகும்போது நம்மைச் சுற்றியுள்ள ஒளி வட்டமே AURA நம்முடைய பாவ புண்ணியங்களைக் காட்டிவிடும். நமக்கு புண்ணியம் அதிகம் இருந்தால் அவர்களே நம் நோயை, அவர்களுடைய சக்தியைப் பயன்படுத்தி அழித்துவிடுவார்கள் .

உண்மையில் நாமும் இதுபோல செய்கிறோம். ஒருவர் நம்மிடம் கடன் கேட்டு வந்தால், ஒரு நிமிடம் யோசிக்கிறோம். நம்மிடம் அப்போது அதிக பணம் இருந்தால் (தவ வலிமைக்கு சமம்), போனால் போகட்டும் என்று அவருக்குப் பணம் கொடுக்கிறோம். அந்த ஏழை திருப்பித் தர மாட்டான் என்று தெரிந்தே “அருள் மழை” பொழிகிறோம். சிலர் விஷயத்தில் வரும் ஆளின் பின்னணி  (பாவ சக்திக்கு சமம்) தெரிவதால் அவனை நிராகரித்து விடுகிறோம் .))

கிருஷ்ணர் செய்த அதிசயம்

கிருஷ்ணரின் கதை சொல்லும் பாகவத புராணத்தில் கிருஷ்ண பரமாத்மா செய்த ஏராளமான அற்புதங்களைப் படிக்கிறோம் அதில் ஒன்று அவர் குள்ளமான , கூன் முதுகுப் பெண்ணை நின்ற சீர் நெடுமாறியாக மாற் றினார் என்று அறிகிறோம்.. கிருஷ்ணருக்கு வாசனைப் பொருட்கள், சென்ட், பெர்ப்Fயும் PERFUME முதலியவற்றைக் கொண்டுவரும் குள்ளி (குள்ளனின் பெண்பால்) அவள். கிருஷ்ணரின் அருட்பார்வை அவள் மீது விழுகிறது  அவள் காலை ஒரு  அமுக்கு அமுக்கிக் கைகளால் மேலே இழுக்கிறார். அவளு டைய கூன்முதுகு மறைந்து பேரழகி ஆகிவிடுகிறாள் .இது அவர் கைகள் மூலம் அந்தப் பெண்ணின் உடலில் பாய்ந்த சக்தி ஆகும்.

( நின்ற சீர் நெடுமாறன் கதையில் திருஞான சம்பந்தரும் இப்படிச் செய்ததை பெரிய புராணத்தில் படிக்கிறோம். கூன் பாண்டியன் மீது விபூதியைத் தடவி தேவாரம் பாடுகிறார். அவன் நின்ற சீர் நெடுமாறன் ஆனதோடு, அவன் வயிற்றில் எரிந்த வெப்பு  நோயும் குணமாகிறது; இது அவரது கை மஹிமை ; ராமன் கால் பட்டவுடன்  சித்தப் பிரமை பிடித்த அஹல்யாவும் கல் நிலையிலிருந்து சாதாரண உடல் நிலைக்குத் திரும்பினாள் என்கிறது ராமாயணம்  )

கிறிஸ்து செய்த அதிசயம்

நோயாலும் வறுமையினாலும் அல்லலுற்ற ஒரு பெண்மணி, கிறிஸ்துவின் ஆடைகளைத் தொட்டவுடன் அவள் குணமடைந்த கதை பைபிளில் வருகிறது. அவள் கிறிஸ்துவைத் துதி பாடிய போது உன் நம்பிக்கைதான் உன்னைக் குணப்படுத்தியது YOUR FAITH HAS HEALED YOU என்கிறார்

இதில் ஒரு முக்கிய உண்மையை நாம் அறிகிறோம். டாக்டர்கள் எவ்வளவு மருந்து கொடுத்தாலும் அதில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்

(நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு என்று பாரதியார் சொல்வதில் நம்பிக்கையின் சக்தியையும் சதுர் வேத மந்திரங்களின் சக்தியையும் நாம் அறிகிறோம்).

தென் அமெரிக்க அதிசயம் HUACO

பெரு நாட்டில் சடலங்களைப் புதைத்த இடங்களில் வினோத உருவம் கொண்ட குவாகோ HUACO என்ற பீங்கான் அல்லது மண் பொம்மைகள் கிடைக்கின்றன. இவைகளில் சில மூக்குடைய கெட்டில் அல்லது பானைகள் . இவைகளில் தண்ணீர் நிரப்பி அசைத்தால் விசில் WHISTLE  அடிக்கும். இவைகளை ஆராய்ந்தவர்கள்  இது ஊதல் பானைகள் WHITLING POTS . அல்ல. இவற்றை  அவர்கள் நன்மை தரும் மந்திர சக்தியுள்ள பொருட்களாகக் கருதியே புதை குழிகளில் வைத்தனர் இவை நோய்களைக் குணப்படுத்தும் என்று கண்டுபிடித்துள்ளனர் இவைகள் 800 ஆண்டுகளாக செய்யப்பட்டு 1200 வரை நீடித்தது . ஸ்பானிய கொள்ளைக்காரர்கள் தென் அமெரிக்காவில் நுழைந்து எல்லாவற்றையும் அழிக்கும் வரை இந்தக் கலை இருந்தது   இவைகளைப் பற்றியும் இதன் சக்தியைப் பற்றியும் தென் அமெரிக்க நிபுணர் குறிப்பிடுகிறார் .

இவற்றின் உண்மையான உச்சரிப்பு வாரி , வாகோ WARI, WACO ; ஸ்பானியர்கள் இதை குவாகோ ,ஹுவாகோ GUACO, HUACO என்று திரித்துவிட்டனர்.

Huaco or Guaco is the generic name given in Peru mostly to earthen vessels and other finely made pottery artworks by the Indigenous peoples of the Americas found in pre-Columbian sites such as burial locations, sanctuaries, temples and other ancient ruins. Huacos are not mere earthenware but notable pottery specimens linked to ceremonial, religious, artistic or aesthetic uses in central Andean, pre-Columbian civilizations. The Incas, who absorbed all the cultures in the time of its expansion, also produced huacos.

Regardless of what a person hears from the whistling pots , the resulting experiences are always transformative, moving people deeply into or toward something that they seek. And, by entering into the process with a clear intention, people usually find themselves progressing quickly in the areas of healing, transformation and manifestation.

தொடரும்

TO BE CONTINUED…………………………

Tags- பெரு, ஹுவாகோ பானைகள், கை மஹிமை, கிறிஸ்து, கிருஷ்ணா, குள்ள பெண், கூன் முதுகு, நின்ற சீர் நெடுமாறன், கால் மஹிமை, அகல்யை , கோபால்ஜி, Huaco, Guaco, Wari

Leave a comment

Leave a comment