
Post No. 12,420
Date uploaded in London – – 15 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22
103.கோகர்ணம் மஹாபலேஷ்வர் கோவில் ; ஓம் பீச் Om Beach, Gokarna Mahabaleshvar Temple
மஹாபலேஷ்வர் என்ற பெயரில் பல இடங்களில் சிவன் கோவில்கள் இருந்தாலும் உத்தர கன்னட மாவட்டத்தில் கோகர்ணம் இருக்கும் மஹாபலேஷ்வர் கோவில் தான் மிகவும் பிரசித்தமானது. இங்குள்ள மற்றும் ஒரு சிறப்பு கடற்கரையே பிரணவ மந்திரமான ஓம் என்னும் எழுத்து வடிவில் அமைந்து இருப்பதாகும். ஒரு காலத்தில் தூய கடற்கரையாக இருந்த இடம் இப்போது பக்தர்களைவிடப் பொழுதுபோக்கவரும் கும்பல்களால் அசுத்தமடைந்து வருகிறது ; கோ கர்ணம் என்றால் பசுவின் காது என்று தமிழில் பொருள். பூமியையே பசு என்று கொண்டு அதன் ஆழத்திலிருந்து ஆத்மலிங்கம் வந்ததால் கோகர்ணம் என்று இந்த ஊர் பெயர் பெற்றது இங்கு கங்காவதி , அகநாசினி என்ற இரண்டு நதிகள் சங்கமம் ஆகின்றன . இது இராவணன் பெற்ற ஆத்மலிங்கம் என்றும் கதைகள் உள்ளன. பாகவத புராணத்தில் கோகர்ண க்ஷேத்ரம் குறிப்பிடப்படுகிறது
மங்களூரிலிருந்து 238 km கிமீ. ;கார்வாரிலிருந்து 59 km கி.மீ .
xxxx
104 உலாவி சென்ன பசவேஸ்வர கோவில் Ulavi Channabasavanna, Temple , Samadhi
கார்வாரிலிருந்து 75 கி.மீ (from Karwar) தொலைவில் காடுகளும் குகைகளும் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உலாவி கிராமம் உள்ளது . இது லிங்காயத் பிரிவு சைவர்களின் புனிதத் தலம் . 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சன்ன பசவன்னா என்ற மகானின் சமாதி இங்கு இருப்பது சிறப்பு. சாளுக்கிய வம்ச அரசர்களின் கோவிலுக்கு புது வண்ணம் தீட்டப்பட்டுள்ளது அருகில் நாகலாம்பிகே குகை இருக்கிறது. அவர் சன்ன பசவன்னாவின் தாய்; பசவண்ணாவின் சகோதரி . அல்லம பிரபு, பசவ , அக்கமாதேவி மற்றும் சென்ன பசவேஸ்வரர் இந்த மாநிலத்தில் லிங்காயத் வழிபாட்டு சம்பிரதாயத்தைப் பரப்பினர்

105.இடகுஞ்சி கணபதி கோவில் Shri Idagunji Maha Ganapati Temple
ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வருகிறார்கள் என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தாலே இவரது பெருமை விளங்கும். புகழ்பெற்ற முருதீஸ் வர் சிவன் கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் இவர் காட்சி தருகிறார் .
இந்த வட்டார கடற்கரையில் ஆறு கணபதி கோவில்கள் இருப்பதால் கடற்கரையின் பெயரே கணபதி கடற்கரை என்று ஆகிவிட்டது .
மேலைக் கடற்கரையில் காசர்கோடு, மங்களூர், ஆனகுட்டே , குந்தபுர , இடகுஞ்சி, கோகர்ண கணபதி ஆகிய ஆறு பேரும் கடற்கரை அருகில் கோவில் கொண்டிருப்பது தனி விசேஷம் இந்தக் கோவில் 1500 ஆண்டு பழமையானது கோகர்ண கணபதி கோவில் போலவே த்வி புஜ கணபதி உருவம் இது; வலது கையில் தாமரை மொட்டு; இடது கையில் மோதகம் எனும் கொழுக்கட்டை . கணபதியின் பூணூல் மாலை வடிவத்தில் இருக்கிறது
வெட்டிவேர் என்னும் வாசனை மிக்க வேரால் செய்யப்பட கவசங்கள் இங்கே விற்கப்படுகின்றன

106. இந்திராகாந்தி விஜயம் செய்த காரி கண்ணம்மா கோவில் Shri Karikaana Parameshwari Tempe
ஹொன்னவர் Honnavar என்னும் இடத்திலிருந்து 12 கி.மீ தூரம்;
மலை மீது தற்காலத்தில் கட்டப்பட்ட தேவி கோவில் இருக்கிறது ; பிரதம மந்திரியாக இருந்தபோது இந்திராகாந்தி விஜயம் செய்ததால் மலை உச்சிவரை நல்ல சாலை அமைக்கப்பட்டது. கோவில் மேலும் பிரசித்தம் அடைந்தது
பரமேஸ்வரி , பார்வதி, துர்கா, சரஸ்வதி என்ற பல பெயர்களில் இந்த சக்தி வணங்கப்படுகிறாள் . மலை மெது ஏறி நின்றால் அரபிக்கடலில் அற்புதக் காட்சியும், ஏழுமலைச் சிகரங்களின் அற்புதக் காட்சியும் நம்மை சொர்கலோகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்
மராட்டியர்களும் கன்னடியர்களும் போற்றும் ஸ்ரீதர சுவாமி இக்கோவிலை உருவாக்கினார். கர்ப்பக்கிரகம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது காடுகள் சூழ்ந்த இடம் ஆதலால் இருட்டுவதற்குள் மலையிலிருந்து இறங்கிவிட வேண்டும்
—subham—-
To be continued………………………………………………………
Tags- ஓம் வடிவ கடற்கரை, கர்நாடக மாநிலம், 108 புகழ்பெற்ற, கோவில்கள், ,– Part 22, கோகர்ணம்