Post No. 12,421
Date uploaded in London – – 15 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 2
முதல் பகுதி நேற்று பிரசுரமாகியது
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு என்னும் நாட்டின் ஆயுர்வேத நிபுணர் ரூபன் டெவோடோ பேரால்டா (RUBEN DEVOTO PERA.TA பல்வேறு கிகிச்சை முறைகளை விளக்குகிறார் .
ஆன்மீக சிகிச்சை SPIRITUAL HEALING
இது மந்திரத்தாலும் ஹோமம் முதலியவற்றாலும் கிடைக்கிறது ; கடவுளுடன் தொடர்புகொள்ளும் போது நமது உடலும் மனமும் சம நிலையை அடைகிறது. இதை பிரார்த்தனை மூலமும் அடையலாம்.
மன நல சிகிச்சை MENTAL AND EMOTIONAL HEALING
நம்முடைய உண்மை நிலையை உணரும்போது கிடைக்கிறது. வாழ்க்கை என்பது என்ன, எது நடக்கவிருக்கிறது அதுதான் நடக்கிறது என்ற உணர்வு அதன் பின்னுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்கையில் முதலில் சஞ்சலங்கள் நிறைந்த மனது சம நிலையை / அமைதியை அடைகிறது; அதன் பயனாக உடலும் அமைதி அடைகிறது .
உடல் சக்தி BODY ENERGY HEALING
வாத , பித்த, கப தோஷங்கள் சமநிலை தவறி நம் உடல் நலத்தைக் கெடுப்பதற்கு முன்னதாகவே, வாசனைப் பொருட்கள், இசை, மந்திர முழக்கம், தியானம், ஹிப்னாஸிஸ் HYPNOSIS என்னும் மனோதத்துவம் மூலம் குணப்படுத்துவது உடல் சக்தி குணப்படுத்தும் சிகிச்சை BODY ENERGY HEALING எனப்படும்.
BODY MATERIAL HEALING
மூலிகைகள், காந்த சக்தி, பத்தியம், ரத்தினக் கற்கள், நீர் சிகிச்சை , HYDROTHERAPY, மருந்துகள் முதலியவற்றை உபயோகித்து குணப்படுத்தல் பாடி மெடீரியல் ஹீலிங் BODY MATERIAL HEALING எனப்படும்.
DIVINE THERAPY
தெய்வீக சிகிச்சை என்பதில் மந்திரம், பிரார்த்தனை, ஹோமம் ஆகியவற்றைச் செய்து நோயைக் குணப்படுத்தலாம்.
வானுலக சிகிச்சை CELESTIAL THERAPY
வானுலக சிகிச்சை என்பது மகான்களும் அவதார புருஷர்களும் கொடுக்கும் சிகிச்சை . இதற்கு, சிகிச்சையைப் பெறுவோருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.
சிகிச்சை தரும் டாக்டர் தன்னைச் சுற்றி மங்களமான பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு புத்தமத்தினர் வைத்துக்கொள்ளும் பொருட்களை சொல்லலாம். எண்வகை மங்கள பொருட்கள் அஷ்ட மங்கலம் எனப்படும்; அவை சங்கு விசிறி, தண்ணீருள்ள கும்பம், தீ, நெய் , யானை உருவம், சுவஸ்திகா , தெய்வ அல்லது தேவர் உருவங்கள் . இது சில கலாசாரங்களில் கொஞ்சம் வேறுபடும்.
மகான்கள் , சாது சந்யாசிகள் பல அற்புதங்களைச் செய்து நோயை விரட்டுவது இவ்வகை.
(அனந்தராம தீட்சிதர் முதலியோர் பிரார்த்தனை மூலம் நோய்களைக் குணப்படுத்தியதை அறிவுவோம்.

அப்யங்க சிகிச்சை ABHYANGA THERAPY
எண்ணெய் ஸ்னானம் செய்வதும் பசு நெய்யை உட்கொள்வதும் இந்த அப்யங்க சிகிச்சையில் வருகிறது.
எந்த வகை எண்ணையும் தோலின் வறட்சியை அகற்றும்.உடலில் வெப்பத்தைக் கொடுக்கும்.இன்று உலகம் முழுதும் ஸ்பா SPA என்னும் நீராவிக் குளியல் அறைகளுக்கும், மசாஜ் செய்யும் இடங்களுக்கும் பல லட்சம் பேர் செல்வதைக் காண்கிறோம் . நம்முடைய சம்பிரதாய எண்ணெய் ஸ்நானம் புதிய வடிவம் எடுத்துவிட்டது
நெய் என்பதை உடலிலும் பூசிக் கொள்ளலாம். இது, புத்தி கூர்மை, ஞாபக சக்தி, , விவேகத்தை அளிக்கும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன..
–SUBHAM—
TAGS- அப்யங்க , ஆன்மீக, சிகிச்சை, கிருஷ்ணர் கை, ,கிறிஸ்து கை, பெரு , ஆயுர்வேத நிபுணர், ரூபன் டெவோடோ பேரால்டா
