QUIZ செய்நன்றி பத்து QUIZ (Post No.12,423)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,423

Date uploaded in London – –  15 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

செய்நன்றி அறிதல் பத்து

QUIZ SERIES No.66


1.ஒவ்வொரு புலவரும் தன்னை ஆதரித்த வள்ளலுக்கு நன்றி கூறிப்  பாடியுள்ளனர் ? கம்பன் யாருக்கு நன்றி தெரிவித்தார்?

XXXX

2.பிரபுட மா தேவராயன் யார்?

Xxxx

3.வில்லிப்புத்தூராரை ஆதரித்த வள்ளல் யார் ?

xxxx

4.புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார் ?

Xxxx

5.மண்டல புருடரை ஆதரித்த வள்ளல் யார் ?

Xxxxx

6.தான் தொகுத்த நிகண்டிலேயே தன்னை ஆதரித்த வள்ளல் பெயரைச் சேர்த்தவர் யார் ?

xxxxx

7.புறநானூற்றில் செய்நன்றி  பற்றி ஆலத்தூர் கிழார் பாடியது என்ன ?

xxxx

8.இதே கருத்தினை ஆலத்த்தூர் கிழார்க்கும் முன்னதாக யார் சொன்னார்?

xxxx

9.இளங்கோ என்ன சொன்னார் ?

XXXX

10.நன்றி காட்டுதல் பற்றி வள்ளுவன் பாடிய 10 குறட்பாக்களின் தலைப்பு என்னஅது திருக்குறளில் எங்கே வைக்கப்பட்டுள்ளது ?

Xxxxx

விடைகள்

1.சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் டையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்து 1000 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம்  கம்பர் தன் கம்பராமாயணத்தில் பாடல் எழுதினார்.

இதோ முத்தாய்ப்பான ஒரு பாடல்

அரியணை அனுமன் தாங்கஅங்கதன் உடைவாள் ஏந்த

பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற

விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கிவசிட்டனே புனைந்தான் மெளலி!

பொருள்

அரியணையை அனுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்; பரதன் வெண்கொற்றக்குடை கவிழ்த்தான்; இலக்குவனும் சத்துருக்கன இளைஞனும் கவரி வீசினர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர் எடுத்துக் கொடுக்க, வாங்கி, வசிட்டரே இராமனுக்கு முடி சூட்டினார்.

Xxxx

2.இவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரை ஆதரித்த வள்ளல். இவரை அருணகிரிநாதர் பல திருப்புகழ் பாடல்களில் பாடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்

அதல சேட னாராட அகில மேரு மீதாட

     அபின காளி தானாட …… அவளோடன்

………………

உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ

     னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.

பிரபுட மா தேவராயன், திருவண்ணாமலைப் பகுதியை ஆண்ட சிற்றரரசன்

xxx

3.வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது.

xxxx

4.*புகழேந்திப் புலவரை ஆதரித்தவர்? – சந்திரன் சுவர்க்கி

அவர் நளவெண்பாவை இயற்றியவர்

Xxxxx

5.மண்டல புருடர் சூடாமணி நிகண்டின் ஆசிரியர்; அவரை கிருஷ்ணதேவராயர் ஆதரித்தார்

xxxx

6.திவாகர நிகண்டு என்னும் நிகண்டு நூல் , திவாகர முனிவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த சேந்தன் என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் சேந்தன் திவாகரம் என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.

xxxx

7.ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என

நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடின்றே — ஆயிழை கணவ!

—புறநானூறு 34, ஆலத்துர்ர் கிழார் பாடியது

பொருள்

பசுவில் பாலைப் பெறாதபடி அதைக் கொன்று தின்பது பாவம்;

பெண்கணிளின் கருவை அழித்தல் பாவம்;

அந்தணர்களுக்குத் தீங்கு செய்வது பாவம்;

இதற்கெல்லாம் கூட பரிகாரம் உண்டு; நீ தப்பிக்கலாம்;

ஆனால் பெரிய பூகம்பமே ஏற்பட்டு உன் சோழ நாடே அழிந்தாலும்

ஒருவன் செய்த உதவியை மறந்து அவனுக்குத் தீங்கு செய்தால் அதற்குப் பரிகாரமே இல்லை; கட்டாயம் நரகத்தில் விழுவாய் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன (புறம்.34)

xxxx

8.வால்மீகி ராமாயண ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பினைத்தான்

வள்ளுவரும் ஆலத்தூர் கிழாரும் சொன்னார்கள் :

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு ( திருக்குறள் 110)

இது வால்மீகி சொன்ன விஷயம் (4-34-12);

Kishkinda Kanda of Valmiki Ramayana

go ghne ca eva suraape ca caure bhagna vrate tathaa |
niShkR^itir vihitaa sadbhiH kR^itaghne na asti niShkR^itiH || 4-34-12

12. go ghne = in respect of – cow, slayers; suraape ca eva = liquor-drinkers, also, thus; caure = for thieves; tathaa = likewise; bhagna vrate = infringers, of solemnity; sadbhiH niSkR^itiH vihitaa = by savants, atonement, ordained; kR^ita ghne niSkR^itiH na asti = for treacherous one, atonement, not, available.

” ‘The savants have ordained atonement for slayers of cows, for drinkers of liquors, thus for thieves and infringers of solemnity, but no atonement is available to a treacherous person. [4-34-12]

xxxx

9.ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்

செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்

பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்

–சிலப்பதிகாரம், வரந்தரு காதை

xxxx

10.செய்ந்நன்றி அறிதல் என்பது அதிகாரம் 11-ன் தலைப்பு; இது அறத்துப் பாலில் இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ளது .

—– subham—

Tags- செய் நன்றி ,அறிதல், வள்ளுவர், இளங்கோ, ஆலத்தூர் கிழார், புறநானூறு, வால்மீகி , வள்ளல்கள், புலவரை, ஆதரித்த,

Leave a comment

Leave a comment