
Post No. 12,425
Date uploaded in London – – 16 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
QUIZ SERIES No.67
வில்லி பாரதம் பத்து
1.தமிழில் புகழ்பெற்ற மஹாபாரத நூல் எது ? அதை எழுதியவர் யார்?
xxx
2.தமிழில் வேறு பழைய மஹாபாரத நூல்கள் இருக்கிறதா?
Xxx
3.வில்லிப்புத்தூரார் எங்கே பிறந்தார்? யார் அவரை ஆதரித்தார்?
Xxx
4.வில்லி எழுதிய மஹாபாரதம் முழுமையானதா?
xxx
5.வில்லி. சொல்லும் புதுமையான விஷயங்கள் என்ன?
XXX
6. தமிழ் மொழி பற்றி வில்லி பாரதம் என்ன சொல்கிறது ?
xxx
7.வில்லி பாரதத்தில் குறிப்பிடத்த தக்க மேற்கோள்கள் உளவா ?
xxx
8 துஷ்ட சதுஷ்டயம் பற்றி வில்லி.யார் என்ன சொல்கிறார் ?
xxx
9.தூது போவதை வில்லி பாரதம் முக்கியமாகப் பாடுகிறது? என்னென்ன தூத்து விஷயங்கள் அங்கே உள்ளன?
Xxx
10. தமிழில் வில்லி பாரத நூல் பற்றி எழுதியவர் யார்?
xxx

விடைகள்
1.வில்லிபாரதம். அதை எழுதியவர் வில்லிபுத்தூரார். இவர் ஒரு அந்தணர்; தந்தை பெயர் வீரராகவன் ; ஆண்டாளும், பெரியாழ்வாரும் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெயரையோ பெரியாழ்வார் பெயரையோ இவருக்கு பெற்றோர்கள் சூட்டினர் போலும்!
xxx
2.வில்லிபுத்தூரார் எழுதிய மஹாபாரத நூலுக்கும் முன்னதாக பாரதம் பாடிய பெருந்தேவனார், அதாவது மஹாதேவன், எழுதிய நூல் ஒன்று இருந்தது. அது நமக்கு கிடைக்கவில்லை. ஆயினும் இதிலிருந்து மேற்கோள் காட்டப்படும் செய்யுட்கள் கிடைத்துள்ளன.
ஸம்ஸ்க்ருத்த்தில் மஹாதேவன் = தமிழில் பெருந்தேவனார்.
இதுதவிர இதே பெயர்கொண்ட இன்னும் ஒரு பெருந்தேவனார் ஒரு பாரதம் பாடினார். ஆயினும் இந்த பெருந்தேவனார் பாரத்திலிருந்து 800 செய்யுட்களே கிடைக்கின்றன.
புறத் திரட்டு என்ற நூலில் பழைய பாரதப் பாட்டுக்கள் கிடைக்கின்றன
அரங்கநாத கவிராயர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் , வில்லியார் பாடாத பருவங்களை செய்யட்களாகப் பாடியுள்ளார்.
நல்லாப்பிள்ளை பாரதம்
வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக் கூறும் 300, 400 பாடல்கள் தவிர, மற்றைய நாலாயிரஞ் செய்யுட்களை எடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை என்பவர், புதிதாகத் தாம் 11 ஆயிரம் பாடல்கள் பாடி, இடையிடையிற்கோத்தும் இறுதியில் சேர்த்தும் பாரதம் 18 பருவங்களையும் பூர்த்தி செய்தார்; அது நல்லாப்பிள்ளை பாரதம் என வழங்கப்படுகிறது.
இவை தவிர சென்னை கையெழுத்து புத்தக சாலையில் மாவிந்தம் என்னும் பாரதப் பாடல்கள் உள்ளன.
பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்பட பலரும் சிற்சில பகுதிகளை மட்டும் பாடல்களாகப் பாடியுள்ளனர்
xxx
3.திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்தார். அவரது காலம் 16ஆம் நூற்றாண்டு; அருணகிரிநாதருக்கு சம காலத்திய புலவர் . திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகையென்னும் பகுதியை ஆண்ட வரபதியாட் கொண்டான் என்ற சிற்றரசன் வில்லிப்புத்தூராரை ஆதரித்து மஹாபாரதத்ததைத் தமிழ் மொழியில் பாடுமாறு வேண்டிக்கொண்டான்
Xxx
4.வில்லிபாரதம், வியாசர் எழுதிய மகாபாரத நூலைத் தழுவியது. எனினும்,பாரதத்தின் முற்பகுதியை மட்டுமே வில்லிபுத்தூரார் பாடினார் . 18 பருவங்கள் கொண்ட மகாபாரதத்தைச் சுருக்கிப் பத்து பருவங்களில் 4351 பாடல்களில் தந்துள்ளார். குறிப்பாக பகவத்கீதை வில்லிபாரதத்தில் இல்லை.
xxx
5.சூரியனுடைய தேரை இழுக்கும் ஏழு குதிரைகளும் பச்சை வர்ணத்தில் இருப்பதாகச் சொல்கிறார். தமிழ் மன்னர்கள் மற்றும் வீரர்கள் சூடிக்கொள்ளும் வெட்சி, வஞ்சி, தும்பை முதலிய பூக்களை மஹாபாரத கதாபாத்திரங்கள் மீது ஏற்றியுள்ளார் . பகாசுரனுடன் மோதிய பீமன் விஸ்வரூபம் எடுத்ததாகச் சொல்கிறார்.
அனுமனுடைய காதிலுள்ள குண்டலங்கள் விஷ்ணுவுக்கு மட்டுமே தெரியும் என்கிறார். சிவன் காதில் ப்ளூடூத் BLUETOOTH என்னும் கருவி கள் இருந்தன . இதை ஹாஹா,ஹூஹூ என்ற இரு கந்தர்வர் பாடுவதாகவும், நாரதர், தும்புரு பாடுவதாகவும் சைவ நூல்கள் (கல்லாடம்) பேசும்; ஆனால் வில்லி.யார் நாரதர் பாடுவதாக சொல்கிறார் இவை தவிர நிறைய இலக்கண விநோதங்களையும் வில்லியார் புகுத்தியுள்ளார்.
சம்ஸ்க்ருத நூல்களில் மட்டுமே காணப்படும் வினா- விடை பாணியை இவர் அதிகம் பின்பற்றுகிறார்.
சில எடுத்துக்காட்டுகள்
நமர்களோ முடியுமோ, முடியாது
முனிவர் சொற் பொய்க்குமோ, பொய்யாது;
என் செய்தான் முடிவிலோ டினான்
கலக்குமோ கலங்காதே
xxx
6.தற் சிறப்புப் பாயிரத்தில் வண் தமிழ் ஓங்குக என்கிறார்.
தென் சொலாலுரை செய்தலின்
செழுஞ் சுவையில் லாப்
புன் சொலலாயினும் பொறுத்தருள்
புரிவரே புலவர்
(தமிழ் மொழியில் தவறாகச் சொன்னாலும் , புலவர்கள் பொறுத்தருள்வார்கள் )
தக்கோர் ஆய்ந்த தங்கள் தமிழ்க் குழலிசையைத் தன செவிக்கு விதமென்னும்
(தமிழ் இனிமை = குழல் ஓசை இனிமை)
தங்கள் மூவகைத் தமிழும் போல சீலிமுகம் மூன்றும் விட்டான்
அசுவத்தாமன் மார்பில் பாய்ந்த 3 அம்புகள் , முத்தமிழும் ஒருவர் நெஞ் சில் எப்படி எளிதாக ஆழப்பதியுமோ அப்படி 3 அம்புகள் பதிந்தன . இவை தவிர சங்கப் புலவர்களையும் அகத்தியனையும் குறைந்தது 5 இடங்களில் புகழ்கிறார்
xxx
7.அரங்கநாத கவிராயர் , வில்லியருக்குக் கொடுத்த பெயர் வில்லிப்பு த்தூராழ்வார் ; அதை மெய்ப்பிக்கும் வண்ணம் வில்லி பாரதத்தில் திருமாலைப் போற்றும் வரிகள் உள்ளன:
தொழுவார் கருவிலே திருவுடையார்
நாமங்களில் ஒன்றை ஒருகால் கூறில் நரகிற் புகார்
எழுபிறவித் துவக்கற் றாரே
பிறவாழி க் கரை கண்டாரே
போற் றுவார் ஏழுபிறப்பு மாற்றுவாரே
மறவாதார் பிறவாதார்
இறக்கும்பொழுதும் மறவேன்
நயனம் விட்டகலாவே
மனத்தை விட்டகலாவே
மலரடி மறவேன்
இரவும் நண் பகலும் பணிந்து பாடுவது மவன் புகழே
இவை அனைத்தும் திருமாலின் பெருமை பேசுவன ; சிவ பெருமானையும் புகழந்து பல இடங்களில் பாடியுள்ளார்.
குறைந்தது 15 பழமொழி களையும் பாடல்களுக்கிடையே வைத்துள்ளார்
xxx
8.துரியோதனன், அவன் தம்பி துச்சாதனன் ,சகுனி, தீயோருக்கு உதவிய கன்னன் (கர்ணன் ) ஆகிய நால்வரை துஷ்ட சதுஷ்டயம் என்பர் (தீயோர் நால்வர்); இவர்களைப் பல இடங்களில் வில்லிபாரதம் ஏசுகிறது. அவர்களை பாம்பு என்று வருணிக்கிறது .
xxx
9.வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருஷ்ணன் தூது, சஞ்சயன் தூது எனும் மூன்று தூதுச் சருக்கங்கள் உள்ளன
Xxx
10.ச.கு.கணபதி ஐயரவர்கள் , ஆண்டு 1940; நூலின் பெயர் வில்லி பாரதத் திறவுகோல் . அனைவரும் படிக்க வேண்டிய நூல். 112 பக்கங்கள்
Xxxx
TAGS- வில்லி பாரதம், நல்லாப்பிள்ளை பாரதம், அரங்கநாத கவிராயர், துஷ்ட சதுஷ்டயம், பெருந்தேவனார் , வில்லிப்புத்தூரார் , வில்லிப்புத்தூராழ்வார்