கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 29 (Post No.12,482)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,482

Date uploaded in London – –  29 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 29

கர்நாடகம் என்று சொன்னவுடன் திக்கெட்டும் தோன்றும் நூற்றுக் கணக்கான ஹொய்சாளர் கோவில்களும் பேலூர், ஹளபீடு சிற்பங்களும் சிரவணபெலகொலா போன்ற சமண சிற்பங்களும் இன்னும் ஒரு புறத்தில் கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டீஸ்வரி, குக்கே சுப்ரமணியன் , உடுப்பி கிருஷ்ணனும். நம் கண் முன்னே தோன்றுவார்கள்.; இதற்கிணையாக இன்னும் ஒரு புறத்தில் ஹம்பி, பாதாமி, ஐஹோல், பட்ட டக்கல் இடிபாடுகளும் குகைகளும் , சிற்பங்களும் தோன்றும். எல்லா மொழிகளிலும்  மேற்குறித்த ஸ்தலங்களின் கட்டுரைகள் உள்ளன .

பாதாமி, ஐஹோல், பட்டக்கல் பற்றி தமிழிலும் கட்டுரைகளை பலரும் எழுதியிருப்பதால் புல்லட்Bullet Points  பாயிண்டுகளில் அவைகளைக் காண்போம் முதலில் பாதாமி :-

126.பாதாமி குகைகள்

ப= வ இடமாற்றம் பற்றிப்பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன் பங்களாதேஷ் = வங்க தேசம்  என்பது எல்லோருக்கும் தெரியும். இதுபோல வாதாபி என்பதே பாதாமி ஆகியது. 1500 ஆண்டுப்பழமையான கடவுள் சிற்பங்கள் உள்ள குகைகள். Badami Cave Temples

வாதாபி கணபதி பற்றியெல்லாம் முந்தைய கட்டுரைகளில் இதே பிளாக்கில் கண்டுவிட்டோம்.

இபோது குகைகளைக் காண்போம் :

இருப்பிடம்- கர்நாடக மாநிலத்தின் வட மத்தியப்புகுதியில் பாதாமி என்னும் நகரில் உள்ளன

பெலகாவியிலிருந்து 88 மைல்கள் ;

ஹம்பியிலிருந்து  87 மைல்கள் ;

பட்டக்கல்லிலிருந்து 14 மைல்கள்

ஐஹொலிலிருந்து 22 மைல்கள்.

பாதாமியில் 4 குகைகள் இருக்கின்றன.

ஆறாவது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை அகத்தியர் எரிக்கும் மலப்பிரபா ஆற்றுக்கும் அருகில் உள்ளன

சாளுக்கியரின் தலைநகராக விளங்கிய ஊர் இது

மங்களேசனால் கிபி 578/579 இல் மூன்றாவது கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது

நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும், இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக் கோவில் ஆகும்.

முதல் குகையில் உள்ள பெரிய அளவு சிவ தாண்டவ சிற்பமும், துவார பாலகர்கள் சிற்பங்களும் குறிப்பித்ததக்கவை .

நடராசர் சிலைக்கடுத்துள்ள சுவற்றில் மகிசாசூரனை வதைக்கும் துர்க்கையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது

கூரையில் ஆதி சேஷன்உருவம் தெரிகிறது

Xxxx

இரண்டாம் குகை விஷ்ணுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாற்கடல் கடைதல், கஜலட்சுமி, பிரம்மா, ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டுள்ள திருமால், கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சிகள், கிருஷ்ணரின் இள வயது லீலைகள் கோபியருடனும் பசுக்களுடனும் காணப்படும் கிருஷ்ணர் போன்ற சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூரையில் 16 மீன் ஆரைகள் கொண்ட சக்கரவடிவமைப்பு, சுவஸ்திகா, பறக்கும் இரட்டையர்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருடன் மேல் வீற்றிருக்கும் திருமால் சிற்பமும் பறக்கும் ஆண், பெண் இரட்டையர் சிற்பமும்  காணப்படுகின்றன. ஒருகாலத்தில் வண்ண ஓவியங்கள் இருந்த தடயங்களையும் காண முடிகிறது

xxx

மூன்றாவது குகையில் நல்ல சிற்பங்கள் காணப்படுகின்றன.

இது அளவில் பெரியது. விஷ்ணுவின்  திரிவிக்கிரம, அனந்தசயன, வாசுதேவ, வராஹ, ஹரிஹர மற்றும் நரசிம்மர் அவதாரங்களை இங்கே சிற்ப வடிவில் காணலாம்.

பல சிற்பங்களில் ஆணும் பெண்ணும் பல ‘போஸ்’களில் அருகருகே நிற்கின்றனர் .

விஷ்ணுவின் யோகாசன சிற்பம் வேறு எங்கும் காணப்படாதது.

பல்லாங்குழி விளையாட்டும் செதுக்கப்பட்டுள்ளதால் அது இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் சென்றதும் தெரிகிறது

கீர்த்திவர்மனின் பழைய கல்வெட்டுகள் 1500 ஆண்டுகளுக்கு முந்தியவை .

Xxxx

நாலாவது குகையில் சமண சிற்பங்கள் இருக்கின்றன கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலை அந்த குகையையே அலங்கரிக்கிறது . மற்ற தீர்த்தங்கரர்கள், பத்மாவதி உருவங்களும் இருக்கின்றன.

இதன் பிறகு பாதாமி கோட்டை அங்கு திப்பு சுல்தான் விட்டுச் சென்ற பீரங்கி ஆகியன உள்ளன.

Xxx

இந்து சமய ஓவியங்கள்

(ஓவியங்களைப் புதுக்கிய பின்னர் அவை பளிச்சென்று தெரிந்தன )

அஜந்தா போனற இடங்களில் புத்தமத ஓவியங்களையே காண்கிறோம். சித்தன்ன வாசலில் சமண ஓவியங்களையே காண்கிறோம் .பாதாமியின் சிறப்பு மிகப்பழைய இந்து சமய ஓவியங்கள் இருப்பதாகும் ; பெரும்பாலான ஓவியங்கள் அழிந்துபோய்விட்டன. ஆனால் கால வெள்ளத்தையும் பருவ தாக்குதல்களையும் தங்கி நிற ஓவியங்கள் அற்புதமாக உள்ளன புலிகேசியின் மகன் மங்களேஸ்வரன் இவைகளை வரைய வைத்துள்ளான்  King Mangalishwara, son of Puleksin I.

சிவன் பார்வதி ஓவியங்களும் புராணக் காட்சி ஓவியங்களும் அழியாமல் இருக்கின்றன .

To be continued……………………………………

Tags- பாதாமி குகைக் கோவில்கள், ஓவியங்கள், சிவ தாண்டவம் , விஷ்ணு அவதாரங்கள்

Leave a comment

Leave a comment