
Post No. 12,487
Date uploaded in London – – 31 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பண்டிகை நாட்கள் : 5-ஆசிரியர் தினம், 6-கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பிறப்பு /ஜயந்தி; 8- சுவாமி சிவானந்தா பிறந்த தினம்; 11- பாரதி நினைவு தினம்; 18- விநாயகர் சதுர்த்தி; 28- கன்பூசியஸ் பிறந்த நாள்; தேசீய சீனாவில் (Taiwan) ஆசிரியர் தினம் ; 30- மகாளய பட்சம் ஆரம்பம்
xxx
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -10, 25;அமாவாசை -14;பெளர்ணமி -29
சுபமுகூர்த்த நாட்கள் –3, 11, 13, 17.xxx
நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.
xxx
செப்டம்பர் 2 சனிக் கிழமை
ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சமே வராது.
xxxx
செப்டம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை
பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது.
xxx
செப்டம்பர் 4 திங்கட் கிழமை
பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன்.
xxx
செப்டம்பர் 5 செவ்வாய்க் கிழமை
மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்புவதை வைத்திருப்பதில் இல்லை, ஆனால் நீங்கள் வைத்திருப்பதை விரும்புவதில் உள்ளது.
Xxx
செப்டம்பர் 6 புதன் கிழமை
மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் கவலைப்படாதீர்கள். மாறாக உங்களால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கவலைப்படுங்கள்.
xxx
செப்டம்பர் 7 வியாழக் கிழமை
கேள்வி கேட்கும் மனிதன் ஒரு நிமிடம் முட்டாள், கேள்வி கேட்காத மனிதன் வாழ்க்கை முழுமைக்கும் முட்டாள்.
xxx
செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை
உண்மையான அறிவு என்பது நமக்குத் தெரிந்தததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே!
xxx
செப்டம்பர் 9 சனிக் கிழமை
ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
xxx
செப்டம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை
கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தியுங்கள். கோபம் குறையும்!
xxx
செப்டம்பர் 11 திங்கட் கிழமை
புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.
xxx
செப்டம்பர் 12 செவ்வாய்க் கிழமை
நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்!
xxx
செப்டம்பர் 13 புதன் கிழமை
மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.
xxx
செப்டம்பர் 14 வியாழக் கிழமை
நல்லொழுக்கமுள்ள மனிதன் பொறுப்பால் இயக்கப்படுகிறான், நல்லொழுக்கமற்றவன் இலாபத்தால் இயக்கப்படுகிறான்.
Xxx
செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை
பிரச்சினையை விவரிக்க முடியாதவர், ஒருபோதும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாட்டார்.
Xxx
செப்டம்பர் 16 சனிக் கிழமை
யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்தவன் வெற்றியாளன் ஆகிறான்.
xxx
செப்டம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை
லட்சியங்களை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையைத்தான் சரி செய்ய வேண்டுமே தவிர லட்சியங்களை சரி செய்யக்கூடாது.
Xxx
செப்டம்பர் 18 திங்கட் கிழமை
அறிவால் உழைப்பவர்கள் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகின்றனர்.
Xxx
செப்டம்பர் 19 செவ்வாய்க் கிழமை
வாழ்க்கை மிகவும் எளிதானது, நாம் தான் சிக்கலாக சிந்தித்து அதை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
xxx
செப்டம்பர் 20 புதன் கிழமை
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.
Xxx
செப்டம்பர் 21 வியாழக் கிழமை
ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!
xxx
செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை
எதிர்காலத்தை வரையறுக்க கடந்த காலத்தைப் படிக்கவும்!
Xxx
செப்டம்பர் 23 சனிக் கிழமை
எங்கு சென்றாலும், உங்கள் முழு இருதயத்தோடு போங்கள்!
Xxx
செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை
நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்!
xxxxx
செப்டம்பர் 25 திங்கட் கிழமை
மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்.
xxx
செப்டம்பர் 26 செவ்வாய்க் கிழமை
உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.
xxxx
செப்டம்பர் 27 புதன் கிழமை
நீங்கள் இரண்டு முயல்களைத் துரத்தினால், நீங்கள் எதையும் பிடிக்கமாட்டீர்கள்.
xxx
செப்டம்பர் 28 வியாழக் கிழமை
ஒரு புத்திசாலி இசையால் தன் ஆத்மாவை வலுப்படுத்த முயல்கிறான், சிந்தனையற்றவன் தன் அச்சத்தைத் தணிக்க அதைப் பயன்படுத்துகிறான்.
xxx
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை
தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான்.
xxx
செப்டம்பர் 30 சனிக் கிழமை
உங்களிடமிருந்து அதிகம் எதிர்பாருங்கள், மற்றவர்களிடமிருந்து குறைவாக எதிர்பாருங்கள், நீங்கள் மனக்கசப்புகளைத் தவிர்ப்பீர்கள்.
—subham—
Tags- செப்டம்பர் 2023, காலண்டர், கன்பூசியஸ் பொன்மொழிகள்