London Swaminathan in Famous Buddhist Temple in Colombo
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,496
Date uploaded in London – – 18 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 2
கொழும்பு நகரிலுள்ள பெளத்த விகாரங்கள்
11.கங்காராமய ஆலயம்
தமிழ்நாட்டில் முக்குக்கு முக்கு பிள்ளையார் கோவில்களும் , வட இந்தியாவில் பேட்டைக்குப் பேட்டை அனுமார் கோவிலும் இருப்பதைப் போல இலங்கை முழுதும் ஆங்காங்கே புத்தர் சிலைகளைக் கண்டேன். தலை நகரான கொழும்பில் குறிப்பிடத் தக்க இரண்டு பெளத்த விகாரங்களுக்கு வெளிநாட்டினரும் வருவதைக் கண்டேன். வெளியில் ஓரிரு பூக்கடைகள் இருக்கின்றன. அவை வெண் தாமரை மலர்களையும் அல்லி மலர்களையும் விலைக்கு விற்கின்றன . அவைகளை வாங்கும் பக்தர்கள், புத்தர் சிலையின் காலடிகளில் / பாதங்களில் அவைகளைப் பக்தியுடன் சமர்ப்பித்து ஓரிரு நிமிடங்களுக்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
முதலில் கங்காராமய ஆலயம் செல்வோம்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ்பெற்ற அறிஞர்-துறவி ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரோவால் ஆரம்பிக்கப்பட்ட கங்காராமய கொழும்பின் மிகவும் பிரபல பௌத்த ஆலயங்களில் ஒன்றாகும். அழகான எரிக் கரையில் அமைந்த இக்கோவிலில் தங்க நிறம் பூசப்பட்ட புத்தர்கள் வரிசையாக உள்ளன. அவைகளோடு நாமும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இந்துக் கோவில்களைப் போலவே எவரும் காலணிகளுடன் உள்ளே நுழைய முடியாது. பெளத்த உருவங்களுடன் பிள்ளையார், முருகன் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள், புத்தரையும் தசாவதாரங்களில் ஒன்றாகச் சேர்த்து பெளத்த மதத்தை ஜீரணம் செய்துவிட்டனர். ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்த அஷ் டபதிகளில் புத்தர் ஒன்பதாவது அவதாரம். இது போலவே பெளத்தர்களும் தற்கால விஹாரங்களில் இந்து தெய்வங்களை நிறுவியுள்ளனர்.
இலங்கைத் தீவுக்கு புத்தர். விஜயம் செய்ததாக மக்கள் நம்புகின்றனர் ராமாயண , மஹாபாரத கதாபாத்திரங்கள் நாடு முழுதும் விஜயம் செய்ததாகப் பல இடங்களை இந்துக்கள் காட்டுவது போல அவர்களும் புத்தர் விஜயம் செய்த இடங்களைக் காட்டுகின்றனர் .
பெய்ரா BEIRA ஏரிக்கரையில் அமைந்த இந்தக்கோவில் சீன, இந்திய, தாய்லாந்து கலை அம்ஸங்களைக் கொண்டது . வெசாக் (வைகாசி விசாகம்) விழாக் காலத்தில் ஏரியில் விளக்குகள் விடப்படுகின்றன . கோவிலுடன் இணைந்த நூலகம் புத்த பிட்சுக்களுக்குப் பயிற்சி தருகிறது . பல கல்வி, சமூக சேவைகளை செய்யும் இந்த ஆலயத்தின் புத்த குருமார்கள், பெரிய அறிஞர்களாக இருந்தவர்கள். அமைதியான சூழ்நிலையில் பல சந்நிதிகளில் புத்தரை தரிசிக்கலாம். சுமார் 200 ஆண்டு வரலாறு உடைய நவீன கால கோவில் இது.
XXXX
12. அசோகரமாய கோவில், கொழும்பு
Asokaramaya Buddhist Temple
இதே பெயரில் கொழும்புக்கு வெளியேயும் ஒரு கோவில் உண்டு. கொழும்பிலுள்ள கோவிலில் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. படிக்கட்டு வரிசையில் ஏராளமான புத்தர் சிலைகள் உள்ளன. நாங்கள் சென்றபோது கல்யாணத்துக்கு சிங்கள உடைகளுடன் வந்திருந்த பெண்களையும் கண்டோம். பழங்கால கடிகாரங்கள் , காமெராக்கள் முதலிய Antique ஆன்ட்டிக் – பழம் கலைப்பொருட்கள் ஒரு அறை முழுதும் நிரம்பி இருந்தது ; அதே போல பழைய நகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் , வெண்தாமரை, அல்லி மலர்களை சிலைகளுக்கு சமர்ப்பித்தனர் .
இலங்கைத் தீவில் 3000–க்கும் மேலான புத்தர் கோவில்கள் உள்ளன. கொழும்பிலுள்ள புத்தர் கோவிலில் அசோகராமயா புத்தர் கோவிலை எளிதில் அடையலாம். புத்தரை பல்வேறு போஸ் Pose களில் பார்ப்பதோடு வண்ண ஓவியங்களையும், அருங்காட்சியகத்தையும் ஒருங்கே காணலாம்.
சிங்கள மக்கள் வீட்டிலுள்ள விலையுயர்ந்த ஒருபொருளை அல்லது புத்தர் சிலையை காணிக்கையாகக் கொடுப்பதாகச் சொல்லி விரதம் ஏற்பர் . அந்தக் காரியம் நிறைவேறினால் அதை ஆலயத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுவார்கள் ; அப்படிச் சேர்ந்த ஏராளமான பொருட்களையும் காணலாம்.
பெரிய போதி மரம் (அரச மரம்) பாதுகாப்பு வளையத்துடன் காணப்படுகிறது புத்தர் தவம் செய்த முதல் அரச மரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட மரங்களை, அசோகர் இலங்கைக்கு மகன் மூலமும், மகள் மூலமும் அனுப்பிவைத்தார். ஆகையால் மக்கள் அதை பய பக்தியுடன் போற்றி வழிபடுகின்றனர்,
இறந்து போன கோவில் யானையின் தோலை அப்படியே போர்த்தி உயிருள்ள யானை நிற்பதை போலவே அமைத்துள்ளனர்
ஒரு மூத்த புத்த குருமாரை சக்கர நாற்காலியில் வைத்து கோவிலின் நுழை வாயிலில் அமர்த்தி இருந்தனர். அனைவரும் அவரிடம் ஆசி வாங்கிச் சென்றனர்
xxxx
வஜ்ஜிராமாய பெளத்த கோவில் Vajiraramaya Temple
1901ம் ஆண்டில் வஜ்ஜிராமாய மஹா தேரோ துவக்கிய இந்தக் கோவில் உலகம் முழுதுமுள்ள புத்த பிட்சுக்களுக்குப் பயிற்சி தருவதால் மிகவும் பிரபலம் அடைந்தது’.
இலங்கைத் தீவிலுள்ள கோவில்கள் பற்றி அறிய உதவும் புஸ்தகங்கள்:
Hundred Hindu Temples of Sri Lanka Ancient Medieval Modern by
Sanmugam Arumugam 1981, Colombo
To be continued………………………..
Tags- part 2, இலங்கை, 108 கோவில்கள், பெளத்த விகாரங்கள்