Post No. 12,500
Date uploaded in London – – 19 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
முன்னேஸ்வரம் சிவன் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – 3
இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரிலிருந்து சுமார் 82 கிலோமீட்டர் தொலைவில் முன்னேஸ்வரம் சிவன் கோவில் இருக்கிறது நாங்கள இரண்டு மணி நேரத்தில் கோவிலை அடைந்து விட்டோம் .
நல்ல பெரிய கோவில்.. கோவில்; பிரகாரத்தில் உள்ள விஸ்வ ரூப தரிசன சிலை மிகவும் பெரியது. பார்த்தவுடனேயே அனைவரையும் போட்டோ எடுக்கத் தூண்டுவதும் ஆகும் . சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் நான் எழுதிய 106 புஸ்தங்களில் சைவ சமயம் தொடர்பான 14 புஸ்தகக்ங்களை கோவில் அலுவலகத்தில் அன்பளிப்பாகக் கொடுத்தேன்.
இனி கோவில் பற்றிய விஷயங்களைக் காண்போம் .
இந்தத் தீவில் ஐந்து சிவாலயங்களை இணைத்து பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைப்பதுண்டு. அவை — திரு கோணேஸ்வரம் (திருகோணமலை), திருக் கேதீஸ்வரம் , முன்னேசுவரம் நகுலேஸ்வரம் , தொண்டீஸ்வரம் என்பன.
இவைகளில் முன்னேஸ்வரம், அங்கே நடைபெறும் விழாக்கள் காரணமாக தனிச் சிறப்பு உடையது.
இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் எப்படி முஸ்லீம் வெறியர்கள் நாசமாக்கினார்களோ அதே போல இலங்கை முழுதுமுள்ள இந்துக் கோவில்களை கிறிஸ்தவ வெறியர்கள் நாசமாக்கினார்கள். போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் கைவைக்காத இந்துக் கோவில் இலங்கையில் இல்லை .
கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் மிகவும் வெறி பிடித்தவர்கள் போர்ச்த்துகீசியர்களும் ஸ்பானியர்களும் ஆவர் . ஸ்பெயின் நாட்டு பாதிரிகள் தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்காவில் உள்ள இன்கா , மாயா , அஸ்டெக் (ஆஸ்தீக), ஒல்மெக் நாகரீக சின்னங்களை அழித்து தங்கக் கட்டிகளை TON டன் கணக்கில் ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர்
உலகிலுள்ள ஏனைய பண்பாடுகளுக்கும் இந்துப் பணப்பாட்டுக்கும் உள்ள வித்தியாசம் , எத்தனை முறை அழித்தாலும் இந்துமதம் புத்துயிர் பெறும் . இந்து என்ற பெயரை நம் மதத்துக்கு கிரேக்கர்களும் பாரசீகர்களும் சூட்டுவதற்கு முன்னர் நம்முடைய மதத்தின் உண்மையான பெயர் சநாதன தர்மம் . அதன் பொருள் ஆரம்பமோ, முடிவோ இல்லாதது ; இந்தத் தனிச் சிறப்பு காரணமாக முன்னேஸ்வரமும் புத்துயிர் பெற்றது.
முன்னேஸ்வரம் கோவில் அருகிலுள்ள ஊர் சிலாவம் (Chilaw ) எனப்படும். இந்தக் கோவிலில் முன்னை நாதர், வடிவாம்பிகை சமேதராகக் காட்சி தருகிறார்
சிவ பெருமானை வழிபட, பிரம்மாவே இந்தக் கோவிலை, அமைத்ததாக தட்சிண கைலாசபுராணம் (அத்தியாயம் 16) கூறுகிறது
இராம பிரானும் இங்கே வந்து கவலைகள் நீங்கியவராகச் சென்றாராம் ; தர்மத்தின் உருவமாகத் தோன்றிய இராம பிரானுக்கு, போரில் பல வீரர்களை அழித்துவிட்டோமே என்ற கவலை இருந்தது . இந்தக் கோவில் அந்த மனச்சுமையை நீக்கியது என்பது ஐதீகம் ( வாய்மொழி வரலாறு).
அல்லி அரசாணியின் மூன்று முத்துக் குவியல்கள்
உலகில், நாட்டை ஆண்ட பெண்ணரசிகளில் மதுரை மீனாட்சியையும் அல்லி ராணியையும் அனைவரும் அறிவர். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்ட மீனாட்சி பற்றி மெகஸ்தனிஸும் குறிப்பிடுகிறார் (பண்டேயா ராணி = பாண்டிய ராணி). அதே போல அல்லி அரசாணி பற்றி நாட்டுப் புறப்பாடல்களும் உண்டு . அர்ஜுனனும் வந்து விட்டார் அல்லி ராணி என்ற பாடல் பிரசித்தமானது . அந்த அல்லி ராணி, கடலில் எடுத்து வந்த முத்துக்களை மூன்று குவியல்களாக்கி ஒரு குவியலை மதுரை மீனாட்சிக்கும் இன்னும் ஒரு குவியலை முன்னேஸ்வரம் வடிவாம்பிகைக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது குவியல் முத்துக்களை தனக்கு எடுத்துக் கொள்ளுவாராம் .
மஹாவம்சம் கூறும் இலங்கையின் முதல் மன்னனான விஜயனும் , சோழ மன்னர்களும், குளக்கோட மஹாராஜனும் கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும் கூறுவர் .
வரலாற்றுச் சான்றுகளின்படி ஆறாம் பராக்கிரம பாஹு (1412-1467CE ) இந்தக்கோவிலுக்கு நில தானம் செய்தார் என்று தெரிகிறது . 1578-ம் ஆண்டில் போர்ச்சிகீசிய வெறியர்கள் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர் .
ஆயினும் 1753ம் ஆண்டில் கீர்த்தி ராஜ சிங்கம் இக்கோவிலுக்கு புத்துயிர் ஊட்டினார் ; பின்னர் பிரம்ம ஸ்ரீ குமார சுவாமி குருக்கள் 1919ம் ஆண்டில் கோவிலை மேம்படுத்தினார் . 1963-ம் ஆண்டில் இலங்கை வாழ் சைவ அன்பர்கள் நன்கொடை மூலம் கோவிலின் கோபுரம் எழுப்பப்பட்டது.
27 நாள் உற்சவம்
இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு 27 நாட்களுக்கு நடக்கும் நீண்ட விழா ஆகும். ஆவணி பெளர்ணமியில் மாயவன் ஆறு தீர்த்தவாரியுடன் அது நிறைவுபெறும்.
9 நாள் நவராத்ரி உற்சவம்
ஆதிகாலத்தில் இது ஒரு சக்தித் தலமாகவே விளங்கியது.. ஆகையால் தீவிலுள்ள ஏனைய கோவில்களை விட இங்கு நவராத்ரி உற்சவம் வெகு விமரிசையாக் கொண்டாடப்படுகிறது; ஒன்பது நாட்களும் 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெறும். விஜயதசமி அன்று வடிவாம்பிகை மானம்பு நிகழ்ச்சிக்காக ஊர்வலமாக எழுந்தருளுவார் .
இத்துடன் விக்கிபீடியா தரும் தகவலையும் காண்போம் :–
இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமாஸ்
கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும்.
மாலையில் சுவாமியின் திருவுலா நடைபெறும்போது சுவாமியை எதிர்நோக்கியவாறே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய தேர் பின்னோக்கிப் பவனிவரும். இதே விழாவன்று இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.
பிட்சாடணோற்சவத் திருவிழா நடைபெறுகையில் . இங்குள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட பிட்சாசாடண மூர்த்தி விக்கிரகம், கபாலம் ஏந்தி, அவிழ்த்துவிட்ட சடாமுடி அலங்காரங்களோடு திரு வீதிவுலா வருவார்.
அன்னை வடிவாம்பிகையின் உற்சவம் மாசி மாத மக நட்சத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.
சிவனுக்கும் சக்திக்கும் சமமாக உள்ள இத்தகைய விழாக்கள், மதுரை மீனாட்சி கோவிலை நமக்கு நினைவுக்குக் கொண்டுவரும்.
முன்னேஸ்வரம் கோவில் பற்றி இந்து இளைஞர் மன்றம் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திகள் இதோ:
To be continued…………………………………
Tags- வடிவாம்பிகை, அல்லி அரசாணி, முன்னேஸ்வரம் கோவில், விஸ்வ ரூப தரிசன , முன்னை நாதர்