
Post No. 12,518
Date uploaded in London – – 23 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – திருகோண மலை Part 7
18.அனுராதபுரம் ஜேத வனராமாய Anuradhapura
Display board in Colombo Museum
அனுராதபுரம் Anuradhapura, இலங்கையின் புனித நகரம் Sacred City என்று அழைக்கப்படுகிறது . பழங்கால இலங்கையின் தலைநகரமாக விளங்கியது ; அங்குள்ள பிரம்மாண்டமான புத்த தூபிகளையும் உலகின் மிகப்பழைய அரச மரங்களில் ஒன்றையும் காணும்போது இந்தப் பெயர் பொருத்தமே என்று தோன்றுகிறது ; பல தூபிகளும் பல தொல் பொருட் சின்னங்களும் இருந்தாலும் ஜெதவன ராமய தூபியும் (Jetavanaramaya) பழைய அரச மரமும்தான் (போதி மரம்) குறிப்பிடத்தக்கவை . மற்றும் ஒரு சிறப்பு, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தங்கத் தகடுகள் ஆகும். இவற்றில் சம்ஸ்க்ருத மொழியும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் முன்னால் நாம் நிற்கும்போது பூவுலகில் மனிதன் என்பவன் கொசுவுக்குச் சமானம்; இறைவனோ அளப்பதற்கரியவன் என்ற உணர்வு நம்முள்ளே எழுகிறது.
திருகோணமலையிலிருந்து ஒரே நாளில் அனுராதபுரத்தையும் பார்த்துவிட்டு கொழும்பு நகருக்குத் திரும்பி வருவது சற்று கடினமான வேலைதான். ஆயினும் அனுராதபுர பெரிய தூபியை எப்படியும் தரிசித்தே ஆக வேண்டும் என்ற அவா உந்தியதால் காரை (Taxi) அந்தப் பாதையில் திருப்பி விடும்படி கேட்டுக்கொண்டேன். இதனால் காலை 6-30 மணிக்கு கொழும்பு நகரைவிட்டுப் புறப்பட நாங்கள் இரவு பத்து மணிக்குத் தான் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம். முதலில் புதிய நகருக்குள் நுழைந்துவிட்டோம். நாங்கள் புத்த ஸ்தூபி என்று கேட்டால் ஊர்மக்களுக்குப் புரியவில்லை. கூகுள் Google செய்து படத்தைக் காட்டி கேட்டபோது ஓ,ஓ ஜேதவனாராமையா என்று முனகிக்கொண்டே வழியைச் சொன்னார்கள். வழியில் உள்ள மற்ற இடங்களைக் காரில் இருந்தவாறே பார்த்துக்கொண்டு ஒரு வழியாக முக்கிய இடத்துக்குச் சென்றோம்.. அதிக ஆள் நடமாட்டம் இல்லை; சூரியன் மட்டுமே முழுவேகத்தில் எங்கள் தேகத்தை வதைத்தான் . ஒரே ஆர்வத்தில் காரிலிருந்து குதித்து, தூபியைப் பார்த்து மலைத்து நின்றேன். 2300 ஆண்டுகளாக நிற்கும் பிரமாண்டமான செங்கல் கட்டிடம்.. மனித பொறியியல் திறமைக்கு பெரும் எடுத்துக்காட்டு ; இந்தியாவில் உள்ள சாஞ்சி ஸ்தூபி போலவே காட்சி தருகிறது.
ஆர்வத்தின் காரணமாக பாத அணிகளைக் கழற்ற மறந்து போய் அருகில் சென்று புகைப்படம் எடுத்தேன். படிக்கட்டுகளிலில் இறங்கி வருகையில் ஒரு பஸ்ஸில் வெள்ளை உடை தரித்த சிங்கள (பெளத்த) பெண்கள் வரிசையாக வந்து காலணிகளைக் கழற்றிவிட்டு சுடும் வெய்யிலில் மேலே சென்றபோதுதான் நான் செய்த பிழை புரிந்தது. ஒரு ஆண் மகன், அந்த பிரம்மாண்ட தூபியை வலம் வரச் சென்றார். ஆங்காங்கே நின்று கைகூப்பி வணங்கிச் சென்றார்.
இதன் முன்னர் நிற்கும்போது நம்மை அறியாமலேயே அதை வணங்கி நிற்போம்.
அசோக சக்ரவர்த்தியின் மகள் சங்க மித்திரை கொண்டுவந்த போதி……………………………………………………………..
Please continue in Facebook (Santanam Swaminathan)
or
swamiindology.blogspot.com