
Translated BY LONDON SWAMINATHAN
Post No. 12,528
Date uploaded in London – – 26 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பண்டிகை நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி; 14- மஹாளய அமாவாசை; 15- நவராத்ரி ஆரம்பம்; 23- சரஸ்வதி பூஜை; 24- விஜயதசமி; 28- சந்திர கிரஹணம்
அமாவாசை – 14; பெளர்ணமி – 28/ சந்திர கிரஹணம்
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 10, 24
சுப முகூர்த்த நாட்கள்– 18, 20, 27
பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து எடுக்கப்பட்ட 31 பொன்மொழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை
கல்வி என்பது திருடர்களால் காணமுடியாதது;
எப்போதும் பேரின்பம் நல்குவது;
கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும் 1-16
xxx
அக்டோபர் 2 திங்கட் கிழமை
யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்? 1-17
xxx
அக்டோபர் 3 செவ்வாய்க் கிழமை
எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை
அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்
முகம் கருத்த யானைகளை தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?
xxx
அக்டோபர் 4 புதன் கிழமை
பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.1-18
xxx
அக்டோபர் 5 வியாழக் கிழமை
மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;
நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.
நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ
ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.
xxx
அக்டோபர் 6 வெள்ளிக் கிழமை
ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.
நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.1-19
xxxx
அக்டோபர் 7 சனிக் கிழமை
கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;
அவனுடைய ரஹஸிய செல்வம் அது;
வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது 1-20
xxx
அக்டோபர் 8 ஞாயிற்றுக் கிழமை .
‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;
வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்; 1-20
xxx
அக்டோபர் 9 திங்கட் கிழமை
கல்வியே உயர்ந்த கடவுள்.
மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு. 1-20
xxx
அக்டோபர் 10 செவ்வாய்க் கிழமை……………………………………….
Pleease continue in
swamiindology.blogspot.com