
Indian Prime Minister Narendra Modi in Naguleswaram temple
Post No. 12,530
Date uploaded in London – – 27 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் –Part 10
21.நகுலேஸ்வரம் கோவில் Keerimalai Naguleswaram temple
நகுல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு கீரி என்று பொருள்; தமிழ் நாட்டில் நிறைய தலங்கள் ஈ முதல் எறும்பு வரை, எறும்பு முதல் யானை வரை சிவன் கோவில்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது போல கீரி மலை நகுலேஸ்வரமும் சிவ பெருமானுடன் தொடர்புடைய தலம் ஆகும்
இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் இதுவும் ஒன்று என்பதை முந்திய கட்டுரைகளில் கண்டோம். நகுலேஸ்வரம் கோவில் யாழ்ப்பாணத்தில் கீரி மலை அருகில் உள்ளது.. காங்கேசன் துறைக்கு அருகில் இது இருக்கிறது .
நகுலேஸ்வரமும் , போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்களிடமிருந்து தப்பவில்லை அவர்கள் அ.ழித்த 500–க்கும் மேலான இந்துக்கோவில்களில் இதுவும் ஒன்று. ஆனால் தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறியர்களிடமிருந்து விக்கிரகங்களைக் காப்பாற்ற அர்ச்சகர்களும் பக்தர்களும் என்ன செய்தார்களோ அதையே இங்கும் இந்துக்கள் செய்தனர் சீரும் சிறப்பும் பெற்று பெரிய கோபுரங்களுடன் விளங்கிய கோயிலை கிறிஸ்தவர்கள் தரைமட்டம் ஆக்கியபோதும் பரசுபாணி என்ற பிராமணர் , விக்கிரகங்களை ஒரு கிணற்றுக்குள் போட்டு மறைத்துவைத்தார். பிற்காலத்தில் இந்துக்கள் அதைக் கண்டுபிடித்து மாபெரும் கோவிலை எழுப்பினர் .
இந்து மதத்தின் ஒரிஜினல் Original பெயர் சநாதன தர்மம் ; இதன் பொருள் ஆதி, அந்தம்; முடிவே இல்லாதது இது.
கீரி (Mongoose Faced Saint) முக முனிவர்
கீரி மலையில் கீரி என்ற பிராணியின் முகத்தை உடைய ஒருவர் வசித்ததாகவும் அவர் சிவனை வழிபட்டு நேரான முகம் பெற்றதாகவும் கோவில் வரலாறு சொல்கிறது. இதனால் இறைவனுக்கு நகுலேஸ்வரன் என்றும் இறைவிக்கு நகுலாம்பிகை என்றும் நாம கரணம் செய்யப்பட்டது.
முனிவரின் முகம், கோர வடிவம் பெற்றதற்கு மற்றொரு முனிவரின் சாபமே காரணம்.

சங்க இலக்கியத்தில் சான்று
புறநானூற்றில் ஒரு புலவரின் பெயர்…………………………….
Please continue in swamiindology.blogspot.com