

Post No. 12,533
Date uploaded in London – – 28 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கண்டி புத்தர் பல் கோவில் இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 11

22. கண்டி நகர புத்தர் பல் கோவில் TEMPLE OF BUDDHAR SACRED TOOTH RELIC, KANDY, SRI LANKA.
இந்து மதக் கோவில் பட்டியலில் புத்த மதக் கோவிலிச் சேர்க்கக் காரணம் , இந்துக்களும் இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்வதே. மேலும் அங்கு பல இந்துக் கோவில்களும் உள்ளன. அவற்றை பெளத்த மதத்தினரும் வழிபடுகின்றனர்
கண்டி நகரம் இலங்கையின் தலை நகராகவும் இருந்தது. இங்கிருந்து ஆண்ட ராஜ வம்சத்தினரின் பாதுகாப்பிலேயே புத்தரின் பல் (Sacred Tooth) இருக்கிறது.
கொழும்பு நகரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் KANDY/ கண்டி நகரம் இருக்கிறது , சுமார் 4 மணி நேரத்தில் காரில் செல்லலாம்.
பழைய அரண்மனையின் ஒரு பகுதி தலத மாளிகை; அதில் புத்தர் பல் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது அங்கு சித்திரம் தீட்டப்பட்ட சுவரும் இருக்கிறது. ஒரு தங்கத் தாமரை மலரிலிருந்து புறப்படும் கம்பியின் மீது பல் நிற்கிறது
சிங்களவர்கள் பல போலி பற்களைச் செய்து சீனா முதலிய நாடுகளுக்கு அனுப்பினார்கள். சீன சக்ரவர்த்தி குப்லாய்கான் , ஒரு பல்லை இலங்கையிருந்து பெற்றதாக மாக்கோ போலோ யாத்திரை நூலில் எழுதி வைத்துள்ள்ளான் . புத்தரின் பல், நிறைய சண்டைகளுக்கும் ஏமாற்று வித்தைகளுக்கும் காரணமாக அமைந்தது .
கண்டி நகர சின்னங்களை யுனெஸ்கோ UNESCO , உலக பாரம்பர்ய சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது மேலும் இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரமுள்ள மலைப் பகுதியில் இருப்பதால் இயற்கை எழில் கொஞ்சசம் இடமாகத் திகழ்கிறது விக்கிரமபாஹு என்ற மன்னன் இந்த நகரை உருவாக்கினான். இன்றுவரை, நகரம் அதன் பழமையான வடிவத்தில் பாதுகாக்கப்படுகிறது. இது கட்டிடக்கலை மற்றும் வரலாற்றின் பல நினைவுச்சின்னங்களையும், கொண்டுள்ளது.
கண்டி மன்னரின் சிம்மாசனம் கொழும்பு மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏனைய கலைப் பொருட்கள் இங்கேயுள்ள அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன . அரண்மனையும், மியூசியமும், பல்/ Tooth இருக்கும் கோவிலும் பார்க்கவேண்டிய இடங்கள் சிம்மாசனங்கள், செங்கோல் மற்றும் பல அரச பாத்திரங்கள் உட்பட அருங்காட்சியகத்தின் பெரும்பாலானவை பல்லே வஹாலாவில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருட்கள் அரண்மனையின் பிரதான கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நகரின் நடுவில் போகம்பரா ஏரி உள்ளது.; ஏரியின் நடுவில் கோடைகால அரண்மனையுடன் ஒரு சிறிய தீவு உள்ளது, . அங்கு ஒரு காலத்தில் ராஜாவின் அரண்மனை இருந்தது,
ஏரியில் புத்தரின் புனிதப் பல்லுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. கோயிலின் மற்றொரு பெயர் தலதா மாளிகை.
தலதா மாளிகைக்கு அருகில் 4 இந்து கோவில் கட்டிடங்கள் உள்ளன. அவை நாதன் , கதிர்காம தெய்வம், பத்தினி தெய்வம் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
xxxx



எசல பெரஹெரா
ஆண்டு தோறும் நடைபெறும் புத்தர் பல் ஊர்வலத் திருவிழா……………………
please continue in swmiindology.blogspot.com