நடுங்கும் சீனா! வளரும் பாரதம்!! (Post No.12,534)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,534

Date uploaded in London –  29 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நடுங்கும் சீனா! வளரும் பாரதம்!!

ச.நாகராஜன் 

சமூக ஊடகங்களிலிருந்து வந்த ஒரு செய்தி: 

ஏன் ராகுல் காந்தி, சீனாவின் சார்பாக அதானியை எதிர்க்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதானி சீனாவின் ஆசைகளை வெகுவாகத் தகர்த்து விட்டார்.

அதானி சீனாவை இஸ்ரேலில் ஹைஃபா துறைமுகத்தில் (Haifa Port) தோற்க அடித்து விட்டார்.

சீனாவை கொழும்பு துறைமுகத்தில் தோற்க அடித்து விட்டார்.

சீனாவை எகிப்தில் தோற்க அடித்து விட்டார்,

ஆஸ்திரேலியாவில் நிலக்கரியை சீனா தோண்டி எடுப்பதைத் தோற்க அடித்தார்.

பெருவில் சீனா தாமிரத்தை எடுப்பதைத் தகர்த்தார்.

இந்தியா ஐரோப்பாவிற்கு நேரடியாகச் செல்லும் பாதை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

அதானி கிரிஸீல் உள்ள துறைமுகங்களான கவலா, வோலோஸ், அலக்ஸாண்ட்ரபுலி (Kavala, Volos, Alesandroupoli in GREECE) துறைமுகங்களைக் கையகப்படுத்துவதில் ஒப்பந்த விவாதத்தின் கடைசி கட்டத்தை எட்டியுள்ளார். கிரீஸில் உள்ள பிராஸ் துறைமுகத்தைப் (Greece’s Port of Piraeus) பயன்படுத்துவதைப் பற்றியும் இந்தியா பரிசீலித்து வருகிறது.

ஐரோப்பாவிற்கு இந்தியா நேரடியாகச் செல்வதில் கிரீஸ் ஒரு முக்கிய பங்கை வகிக்க இருக்கிறது – இந்த ஒப்பந்தம் முடிவடைந்தால்.

வணிகப் போக்குவரத்து மார்க்கம் 

மும்பையிலிருந்து யுஏஇக்குச் – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு – (Mumbai to UAE) செல்வது ஏற்கனவே பாதுகாப்பான நேர் வழியாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சவூதி, சவூதியிலிருந்து ஜோர்டான், ஜோர்டானிலிருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயில் பயணம் – இப்படி வழி தயாராகி விட்டது.

ஹைஃபாவிலிருந்து கிரீஸுக்கு கப்பல் பயணம். அங்கிருந்து ஐரோப்போ, யூரேஸியா – இதற்கான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இந்த வணிக வழியானது நமது பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது வருடத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டது. இது சீனாவின் OBOR எனப்படும் – ONE BELT, ONE ROAD – ஒரு வளையம் ஒரே சாலை என்ற சீனாவின் திட்டத்திற்கான பதிலடி. சீனா 20+ வருடங்களாக இதை அனுபவித்து வருகிறது.

இது நமது நாட்டின் வணிகப் போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதியை ஊக்குவிக்கும்.

அதானி சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்காக இதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார்.

இன்னுமா புரியவில்லை? ஒரு மேப்பையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த இடங்களை எல்லாம் அதில் குறித்துக் கொள்ளுங்கள். என்ன தெரிகிறது. சீனாவின் குரல்வளை நெறிக்கப்படுகிறது, இல்லையா?!

யாரெல்லாம் சீனாவில் அதிக முதலீடு செய்திருக்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம் – 90 சதவிகிதம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான்!

ஆக இந்தியா வளர்ந்தால் யாருக்கு பண நஷ்டம்?

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா – இந்த நாடுகளுக்குத் தான்!

நமது நாடு முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சேதம் ஏற்பட்ட பின் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று திணறாமல்!

புரிகிறதா சூக்ஷ்மம்?! 

***

நன்றி : ஆங்கில வார இதழ் TRUTH, KOLKATA Volume 91 Issue 22 dated 15-9-2023

Leave a comment

Leave a comment