இந்து மதத்தை அழிக்க வந்த கொசு பறந்தது ! (Post No.12,542)

Dr Ravindra Surenge speaking

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,542

Date uploaded in London – –  –  1 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பிரிட்டனில் உள்ள சங்கமம் (Sangamam UK)  என்ற தமிழ் அமைப்பின் ஆண்டுவிழா நேற்று ரெடிங் Reading நகரில் நடந்தது. 150 தமிழர்கள் பங்கு கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தமிழக ஆளுநர் ரவி அவர்கள் On line ஆன் லைன் மூலமாக சிறப்புரை ஆற்றினார்.

ரெடிங் READING  நகர் லண்டலிலிருந்து  ஒன்றரை மணி தூரத்தில் உள்ளது.

வந்தவர்கள் அனைவரும் மூன்று  குழுக்களாகப் பிரிந்து மூன்று  தலைப்புகளில் விவாதம் நடத்தினர்  பாரதம் ஒரே நாடு; அனைவரும் ஒரு தாய் மக்கள்; இந்து மதப் பண்பாடுகளைக் பாதுகாத்துப் பேணுவதில் தமிழர்களின் பங்கு தலையாய பங்கு என்பதை எல்லா குழுக்களில் பேசியோரும் வலியுறுத்தினர் .

நிறைய சிறுவர் சிறுமியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் , நடனம் இசைத்துறைகளில் தமிழர்கள  கொடுத்த பங்களிப்பையும்,  பாரதப் பண்பாட்டையும்  காட்டுவதாக அமைந்தன  அவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் முஸ்லீம், கிறிஸ்தவ சிறுவர், சிறுமியரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது . நானும் நிகழ்ச்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்

Chief Guest London Swaminathan distributing certificates

சமீப காலமாக தமிழ்ப் பண்பாட்டையும் , இந்து மதத்தையும் அழி க்கப் புறப்பட்ட  வாட்டிகன் VATICAN பக்தர்களுக்கும் தேச விரோத சக்திகளுக்கும் சாவு மணி அடிப்பது போல இருந்தது இறுதியில் கேட்ட சிறப்புரை. அதை நிகழ்த்தியவர் டாக்டர் ரவீந்திர சுரேங்கே . அவர் தமிழ் நாட்டில் பல்லாண்டுகள் வசித்த மராட்டியர். இப்பொழுது இங்கிலாந்தில் வசிப்பவர் . சங்கமம் அமைப்பில் முக்கியப்பொறுப்பு வகிப்பவர் .

அவர் சொற்பழிவில் சொன்னார்:

“முதலில் பஞ்சதந்திரக் கதை ஒன்றை சொல்கிறேன். அதன் நீதியைக்  கடைசியில் பார்ப்போம் . ஒரு காட்டில் வேட்டை ஆடுபவன் பறவைகளைப் பிடிக்க வலை விரித்து அதன் கீழே தானியங்களைத் தூவியிருந்தான் எல்லாப் பறவைகளும்  தானியத்ததைத்  தின்னும்போது கால்கள் சிக்கிக் கொண்டன. ஒவ்வொரு பறவையும் பலம் கொண்ட மட்டும் சிறகடித்தும் வலையிலிருந்து மீள முடியவில்லை .

அதிலுள்ள ஒரு புத்திசாலிப்பறவை நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சிப்போம் என்று சொல்லி 3….2…1.. என்று சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பறவைகளும் சிறகுகளை அடிக்கவே வலை பிய்த்துக் கொண்டது; அனைத்தும் பறந்து சென்று, எலி அரசனின் உதவியை நாடின . எலிகள் அந்தப் பறவைகளின்  வலைகளைக் கடித்துத் துண்டிக்கவே பறவைகள் விடுதலை பெற்றன .

இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு பெரிய காளை மாட்டின் மீது ஒரு கொசு வந்து உட்கார்ந்தது ; அது ஏதோ அந்தப் பெரிய மாட்டினுக்குத் தொல்லை கொடுப்பதாக நினைத்து பெருமைப்பட்டது; அந்த மாடு வாலை அசைத்தவுடன், அது மாட்டின் காதுக்கு அருகில் வந்து கிசு கிசுத்தது ; பார்த்தாயா உன்  வால் அருகில் உட்கார்ந்தேன் ; உன் வாலை  அசைத்தேன்.

மாடு சொன்னது; அப்படியா நீ உட்கார்ந்ததே எனக்குத் தெரியாதே; அந்த உணர்வு  கூட எனக்கு இல்லையே என்று; கொசுவும் ஒன்றும் செய்ய முடியாது என்று பறந்து போயிற்று; இப்போது சிலர் இந்து மதத்தை ஒழிப்பேன் என்று கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் பெரிய காளை மாட்டின் மீது உட்கார்ந்து பறந்தோடிப்போன கொசுக்கள் போன்றவர்கள். இந்து மதம் சனாதனம் ஆனது. அதாவது என்றும் இருப்பது இதை யாரும் அசைக்க முடியாது.

“நான் முதலில் தங்கிய வீட்டின் அருகில் தினமும் மலையில் சினிமா நடக்கும் கொட்டகை இருந்தது. அங்கு தினமும் ஒரு தமிழ்ப் பாடல் ஒலிக்கும் அதை ஆறு ஆண்டுகள் கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது. அது பிள்ளையார் துதி. திரைப்படங்களும் கூட கணேஷ் வந்தனத்துடன் துவங்கியது, நாடு முழுதும் வழிபடும் தெய்வங்களும் ஒன்று என்பதைக் காட்டியது. துவக்கத்தில் எல்லாம் வேறு போலவும்  நாம் புதிய இடத்திற்கு வந்து இருக்கிறோம் என்ற உணர்வும் இருந்ததது. அவர்கள் பேச்சில்  பயன்படுத்திய ஸம்ஸ்க்ருத சொற்களைக் கேட்டபோது இன்னும் நெருக்கம் ஏற்பட்டது . இதே போல வரலாற்றைப் படித்தாலும் தமிழ் வணிகர்கள் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டியுள்ளனர். சீனாவில் கூட கல்வெட்டும் தமிழர் அமைத்த கோவிலும் உள்ளது

ராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசியாவில் பல இடங்களை வென்று இந்துப் பண்பாட்டினை அங்கெல்லாம் நிறுவினான்  பல மொழிகளில் பாடும் பாடல்களும் பாரதத்தின் பல பகுதிகளின் சிறப்பை இணைத்துப் பாடுகின்றன.

சமீபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வருத்தமுள்ள நிகழ்சசி நடந்தது. இறந்து போனவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இறுதிச் சடங்கை செய்ய வந்தவரோ பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சாஸ்திரி  அவர் சொன்ன ஸ்லோகம் :

கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதி.

நர்மதே சிந்து காவேரீ ஜலே அஸ்மின் ஸன்னிதிம் குரு.

       गंगे च यमुने चैव गोदावरी सरस्वति |

नर्मदे सिन्धु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु ||

இதிலும் பாருங்கள் ; கங்கை முதல் காவேரி வரை வருகிறது; ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சொல்லும் ஸ்லோகங்களும்  ஒரே நாடு ஒரே பண்பாடு என்பதைக் காட்டுகிறது .

இப்போது நான் முதலில் சொன்ன கதையின் நீதியை, செய்தியைக் காண்போம் எல்லாப் பறவைகளும் சேர்ந்து முயற்சித்தபோது அவைகளைக் கட்டிப் பிணித்த வலை பிய்ந்தது . அது போல இந்துக்கள் அனைவரும் சேர்ந்து முயற்சித்தால் அவர்களுக்கு யாரும்  தீங்கிழைக்க முடியாது “

பல் மொழி வித்தகரான ரவீந்திர சுரேங்கே .   இடை இடையே பல மொழிகளில் இருந்து பாடல்களையும் எடுத்துக்  காட்டினார் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சுவை ஊட்டும், உணர்ச்சியூட்டும் உரையாக அமைந்தது அவர்தம் சொற்பொழிவு .

ரெட்டிங் READING நகரில் நடத்திய தமிழர் விழா வந்தே மாதரம்பாரத வந்தே மாதரம் என்ற சங்கப் பாடலுடன் இனிதே நிறைவு அடைந்தது. காலை பத்து மணி முதல் மாலை  5 வரை நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும் பெரியோர்களும் அலுக்காமல் சலிக்காமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது

சங்கமம் சார்பில் அகில உலக தமிழ் சங்கமம் கோவையில் நடைபெற உள்ளது உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் மாபெரும் விழாவாக அது அமையும் என்பதில் ஐயமில்லை; கவர்னர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.

—subham—

Tags-  ரெட்டிங் , சங்கமம், தமிழர் விழா, கவர்னர், ரவீந்திர சுரேங்கே

Leave a comment

Leave a comment