முறிகண்டி பிள்ளையார்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 17 (Post No.12,552)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,552

Date uploaded in London – –  –  4 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 17

31.முறிகண்டி பிள்ளையார் கோவில் Murikandi Pillaiyar Temple,

எல்லோரும் வழிபட சாலையில் காத்திருக்கும் பிள்ளையார் கோவில்  முறிகண்டியில் உள்ளது . யாழ்ப்பாணம் – கண்டி சாலையில் உள்ள இந்தக் கோவிலை யாரும் பார்க்காமல், கும்பிடாமல் இருக்க முடியாது. கிளிநொச்சிக்கு அருகில் கோவில் இருக்கிறது . எல்லா வாகனங்களும்  இங்கே நிற்கும். பிள்ளையாருக்கு ஒரு கும்பிட்டு போட்டுவிட்டு நகரும்.

முறிகண்டி கிராமம் உள்ளே தள்ளி இருப்பதால், சாலையில் மரத்துக்கு அடியில் இருக்கும் இவரை  தெரு முறிகண்டி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள். வழித்துணை பிள்ளையார் என்றும் கொண்டாடுவர்.

பழைய முறிகண்டி சாமியார்கல்  வழிபாடு

பழைய முறிகண்டி ஆலயம்  பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது  யாழ்ப்பாணம்- கண்டி சாலை அமைக்கப்பட்ட காலத்தில் பருத்தித்துறை என்ஜினீயர் ஒருவரும் சாலை போடும் பணியில் இருந்தார். பொறியியல் வேலைகளுக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாக இருந்தது .சதுப்பு நிலம் ஆதலால் வண்டிகளில் தண்ணீர் கொண்டு வருவதும் சிரமம்தான். என்ஜினீயருக்கோ தூங்குவது கூட கஷ்டம் ஆகிவிட்டது. ஒரு நாள் கனவில், அருகில் இறந்து கிடக்கும் சந்நியாசிக்கு ஈமக் கிரியைகளை செய்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று கனவு சொல்லியது . அக்காலத்தில் நிறைய சாது சந்யாசிகள் மக்களுடன் மக்களாகக் கலந்து யாத்திரை போகும் வழி  இது . முறிகண்டிக்கு அடிக்கடி வரும் ஒரு சாது தனது கக்கத்தில் துணியால் சுற்றிய ஒரு கல்லையும் கொண்டுவருவது வழக்கம்.

அவர் அந்தக் கல்லை சுத்தமான இடத்தில் வைத்து அபிஷேக ஆராதனைகள் செய்வதுண்டு. அதை அவர் கணபதியாகவே உருவகித்து பூஜித்து வந்தார். முறிகண்டிக்கு வரும்போதெல்லாம், மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இரவில் தங்கி வந்தார்.  அவர் அங்கயே இறந்துவிட்டார். சாலைப் பணிக்கு வந்த என்ஜினீயரும் தொழிலாள ர்களும் சடலத்தை அடக்கம் செய்துவிட்டு அவர் ஆராதித்து வந்த கல்லுக்கு — கடவுளுக்கு — ஒரு கொட்டகையும் எழுப்பினர்.  பின்னர் சிறிது தொலை வில்  மீண்டும் கிணறு வெட்டும் பணியில் இறங்கினர். அப்போது அதிசயம் நிகழ்ந்தது. தண்ணீரே இல்லாத பிரதேசத்தில் தண்ணீர் பீறிட்டு, பொங்கி வெளியே வந்தது.  இன்றுவரை அது வற்றாத  கிணறாக, போகும் வரும் யாத்ரீகர்களுக்குத்  தண்ணீர் வழங்குகிறது .அந்தக் கல்லும் பழைய முறிகண்டியில் தொடர்ந்து வழிபட்டு வருகிறது . பின்னர்  அவர் நினைவாக, தண்ணீர் கிணறு கண்டு பிடிக்கப்பட்டதன் நினைவாக , தெருப்பிள்ளையார் நிறுவப்பட்டார்.

இதற்கிடையில் இன்னும் ஒரு சம்பவமும் நடந்தது  பிள்ளையார் கோவிலுக்கு அருகில் டீக்கடை  வைத்திருந்த ஆறுமுகம் என்பவருக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே  மனத்தாங்கல் ஏற்பட்ட து. ஆறுமுகம் கனவில் இன்னும் ஒரு பிள்ளையார் வருவார் என்று தோன்றவே  சுமார் 500 அடி தொலைவில் ஒரு மரத்தின் பட்டைகளே  யானை முகம்போலக் காட்சி தந்தது.  அவர் அங்கு பூஜைகளைத் துவங்கியவுடன் பக்தர் கூட்டம் இரண்டு பிள்ளையர்களையும் வழிபட்டு வந்தனர்  காலப்போக்கில் சாலை ஒர வழிபாட்டுத் தலங்களை  அகற்றும் திட்டத்தின் கீழ்  யானை முக மரமும் அகற்றப்பட்டது . ஆயினும் பிள்ளையார் வழிபாடு நீடிக்கவும், வற்றாத நீர்வளம் கண்டுபிடிக்கவும் பிள்ளையார் உதவியதை பக்தர்கள் நன்றிப் பெருக்கோடு நினைவு கூறுகின்ற்னர் .

XXX

இவ்வாலயத்தில் வழிபாடு செய்பவர்கள் வெறும் வாயோடு செல்ல மாட்டார்கள் பயணத்தில் சுவையாக சாப்பிட இங்க கச்சான் வாங்கி செல்வார்கள்; அது என்ன கச்சான் என்று கேட்கிறீர்களா ?

இந்த வட்டாரத்திலேயே மிகவும் சுவையான நிலக்கடலை  இங்குதான் கிடைக்கும். கச்சான் (நிலக்கடலை) க்கு பிரசித்தி பெற்ற இடம்  முறிகண்டி ஆகும்,

xxxx

பம்பாயிலும் மகாலெட்சுமி, தனக்கு கோவில் கட்ட  இதே தந்திரத்தைக் கையாண்டார்

இதோ நான் முன்னர் இதே பிளாக்கில் எழுதிய விஷயம்

மும்பை மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர் சித்தி விநாயகர் கோவிலையும் மஹா லக்ஷ்மி கோவிலையும் தரிசிக்காமல் வர மாட்டார்கள். உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று. இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும் மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை ; இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார் இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர். மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்; மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் . மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்  வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும் ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும் (தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி) மிகப்பெரிய பண்டிகைகள் . கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின்விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார். ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன. ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,  தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள். முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் . பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது . ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,  இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

XXXX

32.. கிளிநொச்சி அக்கராயன்குளம் விக்ன  விநாயகர் கோவில்

வன்னி  பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் பல்லவராயன், கனகராயன் அக்கராயன்  ஆவர்.

அக்கராயன் என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியாக……………… PLEASE CONTINUE IN……………. swamiindology.blogspot.com

Leave a comment

Leave a comment