
Post No. 12,566
Date uploaded in London – 9 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கந்தர் அலங்காரம்
(அருணகிரிநாதர் அருளியது)
ச. நாகராஜன்
கவின் மிகு சொற்றொடர்கள்
(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)
மொத்தப் பாடல்கள் காப்பு 1 பாடல்கள் 107
1. அயில்வேலன் கவியை யன்பால் எழுத்துப் பிழையறக்
கற்கின்றிலீர் (பாடல் எண் 2)
2. கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே (6)
3. முகமாறுடைத் தேசிகனே (8)
4. வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று (9)
5. வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல் (18)
6. கையிற் பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே (18)
7. மரண ப்ரமாத நமக்கில்லை (21)
8. முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன் (22)
9. ஞானச் சுடர் வடிவாள் (25)
10. எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் (26)
11. காலத்தை வென்றிருப்பார் (26)
12. மனமே எங்ஙனம் முத்தி காண்பதுவே (30)
13. அடியார்க்கு நல்ல பெருமாள் (33)
14. அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள் (33)
15. நாளென் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள்
என் செயும் (38)
16. கொடுங்கூற்று என் செயும்? (38)
17. மயில் ஏறிய மாணிக்கமே (39)
18. அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன்
கையெழுத்தே (40)
19. நீயான ஞான விநோதந்தனையென்று நீ அருள்வாய் (46)
20. படிக்கும் திருப்புகழ் போற்றுவன் (50)
21. பாசத்தினாற் பிடிக்கும் பொழுத் வந்தஞ்சலென்பாய் (50)
22. இடிக்கும் கலாபத் தனி மயில் ஏறும் இராவுத்தனே (50)
23. தேவேந்த்ர லோக சிகாமணியே (58)
24. பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பாரறிய வெட்டிப்
புறங்கண்டலாது விடேன் (64)
25. வெங்கூற்றன் விடுங் கயிற்றார் கட்டும் பொழுது விடுவிக்க
வேண்டும் (65(
26. நீர்க்குமிஉக்கு நிகரென்பர் யாக்கை நில்லாது செல்வம் (66)
27. பெறுதற்கரிய பிறவையைப் பெற்று (67)
28. விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் (70)
29. மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனும்
நாமங்கள் (70)
30. முன்பு செய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் (70)
31. பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலுஞ்ச செங்கோடம்
மயூரமுமே (70)
32. மயில்வாகனனைச் சாந்துணைப் போது மறவாதவர்க்கொரு
தாழ்வில்லையே (72)
33. படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை (75)
34. முருகாவென்கிலை (75)
35. தொழாத கையும் பாடாத நாவும் (76)
36. ஐவரும் கைவிட்டு மெய் விடும் போதுன்னடைக்கலமே (84)
37. குமரா சரணம் சரணம் (87)
38. வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை (90)
39. நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே (90)
40. இராப்பகலற்ற இடம் காட்டி யான் இருந்தே துதிக்க (103)
41. ஆவிக்கு மோசம் வருமாறறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க என்று
நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருள்வாய் (105)
42. கொள்ளி தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளம் (106)
43. நமக்கொரு மெய்த்துணையே (107)
***
கந்தர் அலங்காரத்தை மூலம் மற்றும் விரிவுரையுடன் பல இணைய தளங்களில் பார்க்கலாம்.
அதில் ஒன்று
இந்த இணையதளத்தில் உள்ள தொடர் எண் 23இல் கந்தர் அலங்காரம் உள்ளது.