
Post No. 12,621
Date uploaded in London – – – 22 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxxx
தமிழ் மொழியை வளர்ப்போம் 22102023
This is Part 23
ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “தா” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்
தா +++ – கருடன்
தா ++++ – பார்வதி, துர்க்கை, ரோகிணி , தக்கன் மகள் , அதிதி
தா+++++++ – பாணினியின் பெயர்
தா+++ – கடுவன் குரங்கு , பெருமைக்காரன், போக்கிரி
தா+++ – கணவன், தலைவன்
தா++++ – – மறுத்தல், காலந்தாழ்த்தல் , கடத்தல்
தா+++ – கதைவடைக்கும் தாள்
தா+ – குதிரைக்கு கொடுக்கும் அவித்த கொள்ளு
தா+– தான்றி மரம், பூண்டுவகை , அழுத்து , உறுதிப்படுத்து
தா+++ – கோட்டைக்குள் இருக்கும் சேனை, பந்தயம், பாளையம், மந்தை
தா+++ – பிரபந்தம் ஒரு கவி , அப்பர் இதில் புகழ்பெற்றவர்
தா++ – மகளிர் தலையில் பின்னலில் அணியும் மாலை
தா++++ – — கண்டபடி திரிபவன் / திரிபவள்
தா++ – ஆத்தி மரம்,, , பேய்க்கொம்மட்டி
தா+++ – கரிக்குருவி
தா+++ – ஆடுதின்னாப்பாளை
தா++– அடிமைக்காரர், தொண்டர், வைணவர்களில் ஒரு வகை, கொடையாளர்
தா+ – ஈகையாளன், பிரம்மா, தந்தை, தாத்தா,
தா++ – செங்கல்
தா+++ – தவ முனிவர், , சட்டை முடியார், சமண முனிவர்
XXXXXX


ANSWERS
தாட்சன் – கருடன்
தாட்சாயணி – பார்வதி, துர்க்கை, ரோகிணி , தக்கன் மகள் , அதிதி
தாட்சீ புத்திரன் – பா ணினி யின் பெயர்
தாட்டன் – கடுவன் குரங்கு , பெருமைக்காரன், போக்கிரி
தாட்டான் – கணவன், தலைவன்
தாட்டுதல் – மறுத்தல், காலந்தாழ்த்தல் , கடத்தல்
தாட்பாள் , தாழ்ப்பாள் – கதைவடைக்கும் தாள்
தாணா – குதிரைக்கு கொடுக்கும் அவித்த கொள்ளு
தாணி – தான்றி மரம், பூண்டுவகை , அழுத்து , உறுதிப்படுத்து
தாணையம் – கோட்டைக்குள் இருக்கும் சேனை, பந்தயம், பாளையம், மந்தை
தாண்டகம் – பிரபந்தம் ஒரு கவி , அப்பர் இதில் புகழ்பெற்றவர்
தாண்டா – மகளிர் தலையில் பின்னலில் அணியும் மாலை
தாண்டு காலி — கண்டபடி திரிபவன் / திரிபவள்
தாதகி – ஆத்தி மரம்,, ஒரு நாடி=உ, பேய்க்கொம்மட்டி
தாதநம் – கரிக்குருவி
தாத்தாரி – ஆடுதின்னாப்பாளை
தாதர்- அடிமைக்காரர், தொண்டர், வைணவர்களில் ஒரு வகை, கொடையாளர்
தாதா – ஈகையாளன், பிரம்மா, தந்தை, தாத்தா,
தாதுகி – செங்கல்
தாபதர் – தவ முனிவர், , சட்டை முடியார், சமண முனிவர்
—-SUBHAM—