அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்கள்! (Post.12,624)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,624

Date uploaded in London –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன்

ஜைன சமயச் சான்றோரால் இயற்றப்பட்டது.

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

பாடல்கள் 181.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. நற்காட்சிநன் ஞானம்நல் ஒழுக்கம் -இம்மூன்றும் தொக்க

  அறச்சொல் பொருள் (பாடல் 2)

2. மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – எப்பொருளும்

   கண்டுணர்ந்தார். (பாடல் 3)

3. தலைமகனும்நூலும்முனியும் – இம்மூன்று நிலைமையவாகும்  

  பொருள். (பாடல் 4)

4. பசிவேர்ப்புநீர் வேட்கைபற்றுஆர்வம்செற்றம்கசிவினோடு

   இல்லான் இறை (பாடல் 7)

5. கடை இல் அறிவுஇன்பம்வீரியம்காட்சி உடையான் – உலகுக்கு

   இறை (பாடல் 7)

6. மெய்ப்பொருள் காட்டிஉயிர்கட்கு அரண் ஆகிதுக்கம் கெடுப்பது

   நூல் (பாடல் 10)

7. இந்தியத்தை வென்றான்தொடர்ப்பாட்டோடு ஆரம்பம் முந்து

   துறந்தான் முனி (பாடல் 11)

8. பிறப்புகுலம்வலிசெல்வம்வனப்புசிறப்புதவம்உணர்வோடு

   எட்டு (பாடல் 34)

9. குறளைமறைவிரிஇல்லடை வௌவல்புறவுரைபொய் ஓலை,

   கேடு (பாடல் 70)

10. மயக்கம் கொலை அஞ்சிகள்ளும் மதுவும் துயக்கில் துய்க்கப்படும் 

   (பாடல் 100)

11. தீயவை எல்லாம் இனிச் செய்யேன் (பாடல் 114)

12. பிறர் கண் வருத்தமும் சாக்காடும் கேடும் மறந்தும் நினையாமை

    நன்று (பாடல் 117)

13. பிறப்புபிணிமூப்புசாக்காடு – நான்கும் அறுத்தல் அறத்தின் பயன்

   (பாடல் 155)

14. அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார் ஒருங்கு அடையும்

   மாண்பு திரு (பாடல் 175)

15. காமம்வெகுளிமயக்கம் – இவை மூன்றன் நாமம் கெடக் கெடும்

   நோய் (பாடல் 178)

16. தீரா வினை தீர்க்கும்சித்தி பதம் உண்டாக்கும்பாராய் –

   அருங்கலச் செப்பு (பாடல் 180)

17. நச்சரவுஅணிநிழல் பச்சை மாமலை தனை நிச்சலும்

   நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே! (பாடல் 181)

***

Leave a comment

Leave a comment