
Post No. 12,625
Date uploaded in London – – – 23 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36
71.பொலிகண்டி கந்தவன கடவை கந்தசாமி கோவில்
இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறை நகருக்கு அருகில் பொலிகண்டி என்னும் இடத்தில் இந்த முருகன் கோவில் இருக்கிறது .
வல்வெட்டித்துறை கடற்கரையில் ஒரு முருகன் சிலை கரை ஒதுங்கியது அதை வழிபடத் துவங்கியவுடன் கோவில் எழும்பியது என்று கர்ண பரம்பரைக் கதை கூறும். ஆகையால் இந்த இடம் கந்த வனம் என்றும் இதைக் கடந்து செல்லவேண்டும் என்பதால் கடவை என்றும் பெயர்கள் தோன்றின. ஆயினும் இவை எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தது . கோவில் வரலாறு மிகப் பழையது அந்தக் கோவிலை போர்ச்சுகீசியர்கள் இடித்திருக்கக் கூடும்.
இப்போதுள்ளஆறுமுக சுவாமி பற்றிய கதை வேறு; யாழ்ப்பாண கடற்கரை வட்டாரத்திலிருந்து வியாபாரம் செய்ய ஒரு வணிகர் குழு உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்றது அப்போது வன்னி பகுதியில் ஒரு சண்முகர் சிலை கேட்பாரற்றுக் கிடந்தது . நாம் செய்யப்போகும் வியாபாரம் வெற்றி அடைந்தால் , லாபம் கிடைத்தால், இந்தச் சிலையை எடுத்துச் செல்லுவோம் என்று தீர்மானித்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வியாபாரம் நடந்தவுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கையில் முருகனையும் எடுத்துச் சென்று கோவில் கட்டினார்கள். பின்னர் உற்சவ மூர்த்தி, விநாயகர் விக்கிரகங்கள் செய்யப்பட்டன. வடக்குப் பிரகாரத்தில் ஆறுமுகசாமி வள்ளி, தெய்வானை சமேதராக, மயில் மீதமர்ந்து, காட்சி தருகிறார். எல்லாம் ஒரே கல்லில் ஆனது.
Xxxx
72.காட்டுமலை கந்தசாமி கோயில்
காலப்போக்கில் புதிய முருகன் கோவில்களும் தோன்றின .

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. 1928ம் ஆண்டில் கதிர்காம யாத்திரைக்குச் சென்றவர், அங்கிருந்து கொண்டுவந்த
வேலினை 1929ல் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார். கோவிலை உருவாக்கிய
அருளாளர் சீனியர் 1939 ஆம் வருடம் இறந்த பின், அவருடைய குமாரர்களாகிய சிவகுரு, குமரகுரு என்போர் கோவில் பராமரிப்பினை ஏற்றனர். தற்காலத்தில் 29 நாள் விழா நடத்தப்படுகிறது .
இந்தியாவிலுள்ள கோவில்களில் பொதுவாக 10 அல்லது 12 தினங்களுக்கு விழாக்கள் நடைபெறும் . இலங்கையில் 15 நாள் முதல் 30 நாட்கள் வரை விழாக்களை நடத்துகின்றனர்.
Xxxx
73. அழிந்து போன முருகன் கோவில்கள்
குன்றுதோராடும் குமரன், என்பதும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதும் ஆன்றோர் வாக்கு .கந்தசாமி மலை என்ற பெயரில் பல குன்றுகளில் முருகன் வழிபாடு நடந்து வருகிறது
1905ம் ஆண்டு தொல்பொருட் துறை அறிக்கையில் கந்தசாமி மலை, தென்ன மரவாடி, கொக்கிலை வாவி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன்கோவில் இடிபாடுகள் பற்றிய தகவல் உள்ளது. கந்தசாமி மலை என்ற பெயருள்ளதால் முருகன் கோவில் இருந்திருக்க வேண்டும்.
யாழ்ப்பாண நல்லூரில் ஆரிய சக்கரவர்த்திகள் ஆண்டபோது ஆறு கோவில்கள் இருந்தன அவற்றில் தையல் நாயகி அம்மன் கோவில் , சாலை விநாயகர் கோவில்களை கண்டுபிடிக்க முடியவில்லை போர்ச்சுகீசிய வெறியர்களின் குண்டுகளில் தரை மட்டம் ஆகியிருக்கலாம்.
நல்லூர் கந்தசாமி கோவிலில் ‘கட்டியம்’ கூறுகையில் ஸ்ரீ மத் சங்கபோதி புவனேக பாஹு போற்றப்படுகிறார். . அவர் மந்திரி பதவி வகித்தார். அவர் நல்லூருக்கு மதில் சுவர்களை எழுப்பி கந்தசாமி கோவிலையும் கட்டினார் என்று யாழ்ப்பாண வரலாறு கூறுகிறது . அந்த இடத்தில்தான் இப்போதைய கிறிஸ்தவ CHURCH சர்ச் இருக்கிறது . இதை பறங்கியர்களே எழுதிவைத்துள்ளனர் .
போர்ச்சுகீசிய மதவெறியர்கள் படை எடுத்து வந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அவர்களுடன் கிறிஸ்தவ பாதிரியார் குரோஸ் FATHER QUEROZ என்பவரும் வந்தார் . அவருக்கு வரலாற்றில் ஆர்வம் உண்டு. குமார கம்பண்ணன் மதுரை மீது படையெடுத்து முஸ்லீம் சுல்தான்களை கொன்று குவித்து, இந்து சமயத்தை மீண்டும் உயிர்ப்பித்தபோது அவனுடைய மனைவி கங்கா தேவியும் கூடவே வந்து தனது கணவனின் வீரதீரச் செயல்களை மதுரா விஜயம் என்ற அற்பு தமான சம்ஸ்க்ருத கவிதை நூலில் எழுதிவைத்தார். அவர்தான் உலகின் முதல் பெண் WORLD’S FIRST WAR FRONT CORRESPONDENT போர்முனை பத்திரிக்கையாளர். இது நடந்தது 700 ஆண்டுகளுக்கு முன்.
அதே போல .கிறிஸ்தவ பாதிரியார் குரோஸும் உள்ளதை உள்ளபடி எழுதிவைத்தார் நல்லூரில் இருந்த மிகப்பெரிய பகோடாவை / கோவிலை போர்ச்சுகீசிய வெறியர்கள் Catholics தரை மட்டமாக்கி அங்கே சர்ச் CHURCH கட்டியதைக் குறிப்பிடுகிறார் இது நடந்தது 1621ல் . அதற்குப்பின்னர் ஹாலந்து எனப்படும் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒல்லாந்த வெறியர்கள் Protestant வந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ மத்தில் வேறு ஜாதி (Protestant)
கிறிஸ்தவ மதத்தில் 200 ஜாதிகள் உண்டு . இதுபற்றி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதுரை ஆதீன கர்த்தர் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி இருக்கிறார். அவரை அடிக்கடி மதுரை ஆதீனத்தில் சந்தித்து அவர் வெளியிட்ட புஸ்தகங்களை நாங்கள் வாங்குவோம். மூக்குப்பொடி அளவுக்கு ஒரு சிட்டிகை விபூதி கொடுப்பார் அதன் வாசனை, மண்டபம் முழுதும் பரவும் .
அயர்லாந்தில் Catholic கத்தோலிக்க கிறித்தவர்கள் அதிகம் ; அதன் ஒரு பகுதியான வட அயர்லாந்தை இப்போதைய பிரிட்டிஷ் அரசு பிடித்துவைத்துள்ளது ; பிரிட்டிஷ் அரசர்கள் Protestant ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் . இரண்டு கிறிஸ்தவ ஜாதிகளும் எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல விரோதிகள். இரு கோஷ்டிகளும் சண்டை போட்டு குண்டு வைத்ததில் 5000 பேர் வரை கொல்லப்பட்டனர் லண்டனில் என் வீட்டுக்கு அருகில் Staples Corner Bob Explosion ஸ்டேபிள்ஸ் கார்னர் பகுதியில் குண்டு வெடித்தவுடன் நாங்கள் அந்தப் பக்கமே போகவில்லை. ஒரு முறை லனடன் பஜார் வீதியான ஆக்ஸ்போர்ட் வீதி Oxford Street in Londonக்குச் சென்ற பொழுது பாண்ட் ஸ்ட்ரீட்Bond Street ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு அறிவிப்பு ஸ்டேஷன் ஒலிபெருக்கிகளில் அலறியது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தேன் .
யாழ்ப்பாண கிறிஸ்தவ வெறியர்களின் செயல்களை இப்போது எழுத்தில் வடிக்கையில் அவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன.
நல்லூர் கந்தசாமி கோவில்
மீண்டும் நல்லூருக்குப் போவோம். அங்கு பெரிய கோவிலை இடித்து போர்ச்சுக்கீசியர் கட்டிய Catholic சர்ச்சினை ஹாலந்து Protestant கிறிஸ்தவ ஜாதி இடித்துத் தள்ளி தங்கள் ஜாதி சர்ச்சினைக் கட்டியது . அதுதான் பழைய கந்தசாமிக் கோவில் என்பது ஆராய்சசியாளரின் துணிபு . இது யமுனேரி தீர்த்தம் அருகில் இப்போதுள்ளது
தற்போது நல்லூரில் உள்ள புகழ்மிகு கந்தசாமிக் கோவில் 1749ம் ஆண்டில் ரகுநாத மாப்பாண முதலியார் ஆதரவில் எழுந்தது. டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) இடம் செல்வாக்கு பெற்றிருந்த அவர், ஓர் மடத்தில் கந்த புராணம் வாசிக்க அனுமதி பெற்றார். 1807-ம் ஆண்டில் அது கோவிலாக மலர்ந்தது . பின்னர் வந்த ஆறுமுக நாவலர் அதில் 1870 முதல் முறையான பூஜைகள் நடைபெற வழிவகுத்தார்.
–subham–
Tags- அழிந்து போன முருகன் கோவில்கள் அழிந்து போன முருகன் கோவில்கள் , காட்டுமலை, பொலிகண்டி, கந்தசாமி, ஆலயம்