தமிழ் மொழியை வளர்ப்போம் 23102023 (Post.12,626)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,626

Date uploaded in London – –  –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 This is Part 4

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “குட” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்

குட + = பூக்கூடை, ஓலைக் கூடை

குட ++ = உடல், பறவைக்கூடு

குட+++ = கருஞ்சீரகம்

குட+++  = ஒரு வகைப் பூரான்

குட++++ =  உறையூரில் ஓடும் நதி

குட++  = ஒரு முழவு வாத்தியம்

குட+++    = கும்பகோணம்

குட +++++  = ஒருவகை உறை கிணறு

குட++   = மணத்தக்காளி

குட++++   = மதிற் பொறி வகை

குட ++ = மேற்கு

குட ++ = அகஸ்தியர்

குட ++++ = பசு, பசுப்பொது

குட++++++ = இடையர்

குட +++   = பாதச் சிலம்புவகை

குட ++ = மலை மல்லிகை , வெட் பாலை

குட ++ = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்

குட++ = சேரன்,

குட++++ = கறி ப்பாலை , கொடிப்பாலை

குட +++ = கும்பராசி, குடில், குடம் , குடிசை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

++++

விடைகள்

குடலை = பூக்கூடை, ஓலைக் கூடை

குடம்பை = உடல், பறவைக்கூடு

குடமணம் = கருஞ்சீரகம்

குடராஜம் = ஒரு வகைப் பூரான்

குடமுருட்டி =  உறையூரில் ஓடும் நதி

குடமுழா  = ஒரு முழவு வாத்தியம்

குடமூக்கு  = கும்பகோணம்

குடலைக் கிணறு = ஒருவகை உறை கிணறு

குடபலை  = மணத்தக்காளி

குடப்பாம்பு = மதிற் பொறி வகை

குட திசை = மேற்கு

குட முனி = அகஸ்தியர்

குட ஞ்சுட்டு = பசு, பசுப்பொது

குட ஞ்சுட்டவர்  = இடையர்

குட ச் சூழ்  = பாதச் சிலம்புவகை

குட சம் = மலை மல்லிகை , வெட் பாலை

குட த்தி = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்

குடக்கோ = சேரன்,

குடசப்பாலை = கறி ப்பாலை , கொடிப்பாலை

குட ங்கர் = கும்பராசி, குடில், குடம் , குடிசை

–SUBHAM—

TAGS- தமிழ் மொழி, வளர்ப்போம் , PART 4

Leave a comment

1 Comment

  1. Balasubramanian Ammunni's avatar

    Balasubramanian Ammunni

     /  October 23, 2023

    கும்பகோணத்தின் ஆதி பெயர் குடமூக்கு என்று குடந்தையில் வசிப்பவர்களிடம் கேட்டாலும் தெரியாது. நீங்கள் ஞாபகம் வைத்துக்கொண்டு புதிர் போட்டியில் எழுதியதற்கு நன்றி.

Leave a comment