
Sarasvati in Japan
Post No. 12,635
Date uploaded in London – – – 25 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

QUIZ சரஸ்வதி பத்து QUIZ (Post No.12.635)
Quiz Serial No.79
1.ஜப்பானில் சரஸ்வதி தேவிக்கு 40-க்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. அவளை ஜப்பானியர் என்ன பெயரில் அழைக்கின்றனர் ?
Xxxx
2.ஸரஸ்வதி தேவி பற்றி 5000 ஆண்டுகள் பழமையான ரிக்வேதம் என்ன சொல்கிறது ?
xxxx
3.சரஸ்வதிக்கான தனிக்கோவில் தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது?
xxxx
4.சரஸ்வதி மீது குமரகுருபரர் பாடிய துதியின் பெயர் என்ன?
Xxxx
5.சரஸ்வதி அந்தாதி பாடிய புலவர் பெயர் என்ன ?
xxxx
6.சரஸ்வதி தேவிக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றன ?
xxxx
7.சரஸ்வதியை வணங்க மாணவர்கள் சொல்லும் ஸ்லோகம் என்ன ?
xxxx
8. சரஸ்வதிக்கு எத்தனை கைகள்? அவைகளில் என்ன இருக்கின்றன ?
xxx
9.சரஸ்வதியின் நிறம் என்ன? வாகனம் என்ன ?
xxx
10. சரஸ்வதியை வணங்குவோருக்கு என்ன கிடைக்கும் ?
xxx
ANSWERS விடைகள்

1.பென்சைதன் Benzaiten (shinjitai: 弁才天 or 弁財天; kyūjitai: 辯才天, 辨才天, or 辨財天, lit. “goddess of eloquence”), என்றும் பெ ன்தன் Benten என்றும் அழைக்கின்றனர். இது வந்தனம் , வந்தனா என்ற சமக்கிருதப் பெயரின் திரிபு
xxxx
2.अम्बितमे नदीतमे देवितमे सरस्वति
— Rigveda 2.41.16
அம்பிதமே நதீ தமே தேவிதமே ஸரஸ்வதி என்று ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டல மந்திரம் புகழ்கிறது
Best of mothers, the best of rivers, best of goddesses, Sarasvatī.
இதன் பொருள்: தாயே சரஸ்வதி! நீயே தாய்களில் சிறந்தவள் (உலகில், உன்னை விட அன்பு செலுத்தும் தாயைக் காண்பது அரிது ); நதிகளில் சிறந்தவள் (ஹரப்பா நாகரீகம் துவங்கிய முதல் இடம்); கடவுளரில் நீயே சிறந்தவள்.
xxxx
3.திருவாரூருக்கு அருகிலுள்ள கூத்தனூரில் இருக்கிறது. ஒட்டக்கூத்தர் பூஜித்த சரஸ்வதி. கோவில் இது.
இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில்.
ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது. (Facebook )
xxx
4.சகல கலா வல்லிமாலை
xxxx
5. சரசுவதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர்.
xxx
தமிழ் மொழியில் கலைமகள் என்போம்.; ஸம்ஸ்க்ருத அஷ்டோத்திரத்தில் 108 பெயர்கள் காணப்படுகின்றன. ஆயினும் இந்தியா முழுதும் பெண்கள் வைத்துக்கொள்ளும் சரஸ்வதி பெயர்கள்- வித்யா, பாரதி , சரஸ்வதி , சாரதா, வாணி, சியாமளா, சாவித்ரி, பார்கவி ஆகும் .
xxx
7.தினமும் காலையில் படிப்பைத் துவங்கும் முன்னால் சொல்ல வேண்டியது :-
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारंभं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥
பொருள் :- ஸரஸ்வதி தாயே , உன்னை வணங்குகிறேன்; எண்ணியதை எல்லாம் நல்கும் , வரம் அருளும் தாயே, இதோ படிப்பைத் துவங்குகிறேன் ; இதில் வெற்றி பெற எனக்கு எப்போதும் அருள் புரிவாயாகுக.
சம்ஸ்க்ருதம் தெரியாதோர், சகல கலா வல்லி மாலை செய்யுட்களில் சில செய்யுட்களையோ அல்லது சரஸ்வதி அந்தாதியின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டையுமோ (Given at the end) சொல்லலாம்
Xxxx
8.சரஸ்வதி தேவிக்கு 4 கைகள் ; அவைகளில் புஸ்தகம், ஜபமாலை , வீணை, தரமரை மலர் அல்லது அபய ஹஸ்தம் இருக்கும்
xxx
9.அவள் வெள்ளைப்புடவை அணிந்து கையில் வீணையுடன் பளிங்கு நிறத்தில் காட்சி தருவாள் ; அன்ன வாகனத்தில் அமர்ந்து இருப்பாள். வடக்கிலுள்ள சில இந்திய மாநிலங்களில் மயில் வாகனமும் உண்டு
xxx
10. இந்து சமய நூல்களில் பட்டியலிடப்பட்டுள்ள 64 கலைகளும் கைகூடி உலகப் புகழ் அடை வார்கள் .
(64 கலைகளின் பட்டியல் இந்த பிளாக்- கில் உள்ளது )
கம்பர் அருளிய சரசுவதி அந்தாதியில் சொல்கிறார் :–
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி. (சரஸ்வதி அந்தாதியின் கடவுள் வாழ்த்து)
xxxxxxxxxx
–சுபம் —
Tags – சரஸ்வதி, க்விஸ் , கேள்வி பதில், நிறம், வாகனம்