Post No. 12,642
Date uploaded in London – – – 27 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 1
பர்த்ருஹரி இயற்றிய நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம், வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. இவைகளை ஸதக த்ரயம் (100X3 ) என்பார்கள்
நீதி சதகத்தில் உள்ள நூறு பாடல்களை தமிழ், ஆங்கிலம், ஸம்ஸ்க்ருதம் , ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் காண்போம் . அத்தோடு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ம. மாணிக்கவாசகம் பிள்ளை (ஆண்டு 1925) என்பவர் இயற்றிய தமிழ்ச் செய்யுள் வடிவிலும் அர்த்தத்தைக் காண்போம் காலஞ் சென்ற Sri P R RAMAMURTHY பி.ஆர். ராமமூர்த்தி இதை தமிழ் ஸ்லோக வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கொடுத்துள்ளார். அதையும் அவருக்கு நன்றி சொல்லிப் பகிர்கிறேன் அவர் எல்லா ஸ்லோகங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை.
பர்த்ருஹரியின் கதையை முன்னரே கொடுத்துள்ளேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவரது மனையாள் அவரை ஏமாற்றி வேறு ஒருவன் மீது காதல் கொண்டதை அறிந்து துறவறம் பூண்டார் என்பதே கதை.
Slokam 1 பாடல் 1
Concerning Morality. (Translated by B Hale Wortham in 1886
नीतिशतकं भर्तृहरिकृत
दिक्कालाद्यनवच्छिन्नानन्तचिन्मात्रमूर्तये ।
स्वानुभूत्येकनामाय नमः शान्ताय तेजसे ॥ १॥
திக்காலாத்யனவச்சின் னாநந்த சின் மாத்ர மூர்த்தயே
ஸ் வானு பூத்யேக நாமாய நமஹ சாந்தாய தேஜஸே -1
1. SALUTATION to the deity who is not definable in time
or space: infinite pure intelligence in incarnate form:
who is peace and glory : whose sole essence is self-know-
ledge.
கால அளவுமங் கருதரிய தேசத்தின்
மூல அளவு முடிவுமின்றி –ஞாலமெங்கும்
ஞானுபவத்தால் நாடுசுயஞ் சோதிமயந்
தானாம் பொருளெமக்குச் சார்பு -1
உரை –
காலத்தினாலோ, வியாபகத் தன்மையாலோ வேரறுக்க முடியாதவனுக்கு வணக்கம் . ஞானமே உருவான எல்லையற்ற தூய அறிவானவன் சாந்தமும் பெருமையும் படைத்தவன் சோதியும் அறிவும் உருவானவன் . அவனுக்கு வந்தனம்
Hindi version is in attached photocopy frm year 1889 book by
Gopinath
Xxxx
Slokam 2
यां चिन्तयामि सततं मयि सा विरक्ता
साप्यन्यमिच्छति जनं स जनोऽन्यसक्तः ।
अस्मत्कृते च परिशुष्यति काचिदन्या
धिक् तां च तं च मदनं च इमां च मां च ॥ २॥
2. That woman is attracted by another man whom I
supposed to be always devoted to me : to her another man
is attached : while a certain other woman takes pleasure
in my doings. Fie on her and on him, on the god of love,
on that woman, and on myself.
நான் யாரை நினைக்கிறேனோ அவள் என்னை நாடவில்லை; அவளோ வேறு ஒருவனின் காதல் வய ப்பட்டாள் .அவனோ வேறு பெண்மணியை காதலிக்கிறான் இது போக, வேறு ஒருத்தி என்னைக் காதலிக்கிறாள் . இதை பார்க்கையில் அவளை , அவனை, மன்மதனை, என்னையே வெறுக்கிறேன் சீ போகட்டும் அவள் இது புலவரின் சுயசரிதம் என்பது உரைகாரகளின் கருத்து
Xxxxx
பர்த்ருஹரி ஸ்லோகம் 2??
இரண்டாவது ஸ்லோகம் வெவ்வேறு பதிப்பில் வேறு மாதிரியாகவுள்ளது
தெரிந்தார் அருவறுத்தார் செல்வஞ் சிறந்தார்
திரிந்தார் அகந்தை செறிந்து — பிரிந்தார் கீழ்
மக்களுக்குக் கேட்கு மதியில்லை ஆகலிநென்
சொற்களடங்கினவே சோர்ந்து -2
Xxxx
Slokam 3
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥ ३॥
அக்ஞஹ சுகமாராத்ய சுகதரமாராத்யதே விஷேஷக்ஞஹ
ஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி தம் நரம் ந ரஞ்சயதி- 1-3
தெரியாக்கெளிதில் தெரித்தலாம் நன்றாய்
ஒப்பத் தெரிந்தார்க்கும் தெரித்தல் – அரிதன்றால்
அற்பமதியால் அனைத்தும் உணர்ந்தோமென்னும்
அற்பருக்க்கார் சொல்லுவார் அறிவு 1-3
The ignorant one is easily convinced. It is easier to convince a really knowledgeable person. But even the Creator himself will not be able to convince a fool who, with his half-baked knowledge, thinks that he is the wisest person in the world.(P R TRANSLATION)
எனது உரை
அறியாதவனுக்குச் சொல்லிதருவது எளிது;
புத்திசாலிக்கும் விஷயம் தெரிந்தவனுக்கும் கற்பிப்பது மேலும் எளிது;
கொஞ்சம் படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல உலவுகிறானே அவனுக்கு பிரம்மாவும் கூட சொல்லித் தரமுடியாது; அவனை திருப்தி செய்யவும் முடியாது. (1-3)
An ancient saying from the Middle East says:
He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.
To be continued…………………………
–subham—
Tags- Niti sataka, Bhartruhari, Part 1, in four languages