
Post No. 12,646
Date uploaded in London – – – 28 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
This is Part 7
ஆனந்த விகடன் 1935-ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ்
அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “ அங் ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
அங் + + + + + – அங்க தேசத்து அரசன், கர்ணன்
அங்+ + – கற்றாழை
அங் + + + + + – குறிஞ்சா , சிறுதேக்கு
அங் + + + + – நங்கூரம் , தூக்கி எடுக்கும் கப்பிக் கயிறு
அங்+ + + – குதிரை, குதிரை ஏறும்படி
அங் + + + + ++ – மேலாடை
அங் + + + – பழத்தின் வற்றல்
அங் + + + + + – உலகவின்பம்
அங் + + + + + + – மீனாட்சி
அங் + + + கனம் – கடுக்காய் மரம்
அங்+ + – கடைத்தெரு
அங்+ – வாய்திறத்தல்
அங்+ + + + – அழகுள்ள பெண்கள்
அங்+ + – மிச்சம், அநித்தியம்,
அங் + + + + – செவ்வாய் கிரகம் , நெருப்பு
அங் + + + + – கரி, நெருப்பு
அங் + + + + – கருப்பந்தண்டு
அங் + + – சிறுநெருப்புச் சட்டி,, வெங்காரம்
அங் + – தீ, சூரியன், நீண்ட சட்டை , கார்த்திகை நட்சத்திரம்
அங் + + + — சீதனம்
XXXX

Kurinja
விடைகள்
அங்கர் கோமான் – அங்க தேசத்து அரசன், கர்ணன்
அங்கனி – கற்றாழை
அங்கர வல்லி – குறிஞ்சா , சிறுதேக்கு
அங்கர் யாரி – நங்கூரம் , தூக்கி எடுக்கும் கப்பிக் கயிறு
அங்கவடி – குதிரை, குதிரை ஏறும்படி
அ ங்கவஸ்திரம் – மேலாடை
அங்கவம் – பழத்தின் வற்றல்
அங்க ரங்கம் – உலகவின்பம்
அங்கய ற் கண்ணி – மீனாட்சி
அங்கனம் – கடுக்காய் மரம்
அங்காடி – கடைத்தெரு
அங்கா – வாய்திறத்தல்
அங்கனையர் – அழகுள்ள பெண்கள்
அங்காமி – மிச்சம், அநித்தியம்,
அங்காரகன் – செவ்வாய் கிரகம் , நெருப்பு
அங்காரகம்- கரி, நெருப்பு
அங்காகை – கருப்பந்தண்டு
அங்காரி – சிறுநெருப்புச் சட்டி,, வெங்காரம்
அங்கி – தீ, சூரியன், நீண்ட சட்டை , கார்த்திகை நட்சத்திரம்
அங்கமணி — சீதனம்
—SUBHAM—–
Tags- தமிழ் மொழி வளர்ப்போம், part 7