Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit  -2 (Post No.12,645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,645

Date uploaded in London – –  –  28 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 2

Part 2 ; Slokam 4

प्रसह्य मणिमुद्धरेन्मकरवक्त्रदंष्ट्राङ्कुरा-

        त्समुद्रमपि संतरेत्प्रचलदुर्मिमालाकुलम् ॥

भुजङ्गमपि कोपितं शिरसि पुष्पवद्धारये-

        न्न तु प्रतिनिविष्टमूर्खजनचित्तमाराधयेत् ॥ ४॥

4)A man may forcibly get back a jewel from the teeth

of a crocodile : he may cross over the raging waves of the

sea: he can wear an angry serpent on his head as if it

were a garland of flowers: but he cannot win over the

mind of one who is foolish and obstinate-4

ஸ்லோகம்  4

முதலைப் பன்மணியும் முயன்று பெறலாம்

சிதலையில் லிற் பாம்பைச் சிரத்தற்  – புதமலர்த்தார்

ஆக்கி அலைவீசும் ஆர்கலியைத்  தாண்டலாம்

மூர்க்கனைச் சீராக்கலாமோ – 4

ப்ரசஹ்ய மணிம் உத்தரேத் மகர வக்த்ர தம்ஷ்ட்ராந்தராத்

ஸமுத்ரமபி ஸந்தரேத் ப்ரசலதூர்மி மாலாகுலம்

புஜங்கம் அபி கோபிதம் சிரஸி புஷ்பவததாரயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்ருகஜனசித்தம் ஆராதயேத் –1-4

ஒரு முதலையின் வாயிலிருந்து ஒரு ரத்தினத்தை எடுத்துவிடலாம்,

ஒருவன் ஸமுத்திரத்தைக் கூட நீந்திக் கடந்துவிடலாம்,

ஒரு பூவை அணிவது போல ஒரு பாம்பைக்கூட தலையில் சூடலாம்,

ஆனால் பிடிவாதமான முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-4

Xxxxx

Slokam 5

लभेत सिकतासु तैलमपि यत्नतः पीडयन्

        पिबेच्च मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।

कदाचिदपि पर्यटन्शशविषाणमासादयेन्

        न तु प्रतिनिविष्टमूर्खजनचित्तमाराधयेत् ॥ ५॥

5. A man may get oil from sand by violent pressure :

he may drink water from a mirage when oppressed by

thirst : he may get possession of the horn of a rabbitj but

he cannot win over the mind of one who is foolish and

obstinate-5

ஸ்லோகம்  5

எண்ணெய் மணலில் எடுக்கலாம்  கானலைத்

தண்ணீர் குடிக்கச் சமைக்கலாம் எண்ணிலா

கான முயற்கோடு காணலாங் கற்பிலா

ஈனனைச்   சீராக்கலாமோ – 5

லபேத் ஸிகதாசு தைலம் அபி யத்னதஹ பீடயன்

பிபேஸ்ச ம்ருக த்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்திதஹ

க்வசிதபி பர்யதந் சசவிஷாணம் ஆஸாதயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்கசித்தம் ஆராதயேத் –1-5

மணலைக் கடைந்து எண்ணை எடுத்துவிடலாம்,

கானல் நீரிலிருந்து குடித்து தாகத்தைத் தீர்த்து விடலாம்

காட்டில் முயல் கொம்பைக் கூடக்கண்டு எடுத்து விடலாம்,

ஆனால் ஒரு முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-5

xxxxx

அறப்பளீசுர சதகம்

அறப்பளீசுர சதகத்தை இயற்றிய அம்பலவாண கவிராயரும் இதே கருத்தைச் சொல்கிறார்

15. செயற்கருஞ் செயல்; அறப்பளீசுர சதகம்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போற்செய் யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியா துகாண்!

ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) மேவுஆர் கொன்றைபுனை வேணியா – விரும்பிய

ஆத்தியையும் கொன்றையையும் புனைந்த சடைமுடியுடையவனே!, சுரர்பரவும் அமலனே – வானவர் வாழ்த்தும் தூயவனே!,

அருமை………தேவனே!, நீர் மேல் நடக்கலாம் – தண்ணீரின்மேல் நடந்து

செல்லலாம், எட்டியும் தின்னலாம் – (கசப்பையுடைய) எட்டிக்காயையும் தின்னலாம், நெருப்பை நீர்போல் செய்யலாம் – (வெப்பமுடைய) தீயை

(குளிர்ந்த) நீரைப்போல் ஆக்கலாம், நெடிய பெருவேங்கையைக் கட்டியே

தழுவலாம் – நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்

நீள்அரவினைப் பூணலாம் – (நஞ்சுடைய) நீண்ட பாம்பை (அது கடிக்காமல்) மேலே அணிந்துகொள்ளலாம், பார்மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம்

– உலகத்திலே மணலைச் சோறாகச் சமைக்கலாம் பட்சமுடனே

உண்ணலாம் – அன்புடன் (அந்த மணற்சோற்றை) உண்ணலாம், பாணமொடு

குண்டு விலகச் செய்யலாம் – அம்பையும் துப்பாக்கிபீரங்கி ஆகியவற்றின்

குண்டுகளையும் (நம்மீது படாமல்) விலகும்வண்ணம் புரியலாம், மரப்பாவை பேசப்பண்ணலாம் – மரப் பதுமையைப் பேசும்படி செய்யலாம், ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம் – அழகிய காடியையும் கடைந்து வெண்ணெயையும் எடுக்கலாம், புத்தி சற்றும் இல்லாத மூடர்தம்

மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது – சிறிதும்

அறிவற்றபேதையரின் உள்ளத்தைச் சீர்திருத்த யாவருக்கும் இயலாது, காண் :

Xxxx

Slokam 6

व्यालं बालमृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यति ।
माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षारामुधेरीहते
नेतुं वाञ्छन्ति यः खलान्पथि सतां सूक्तैः सुधास्यन्दिभिः ॥ 1.6 ॥

வ்யாலம் பால ம்ருணால தந்து பிரஸௌ ரோததும் ஸமுஜ்ரும்பதே

சேதும் வஜ்ரமணிம் சிரீஷ குஸுமப்ராந்தேன ஸன்னஹயதி

மாதுர்யம் மதுபிந்துனா ரசயிதும்  க்ஷாராமுதேரீஹதே

நேதும் வாஞ்சயந்தி யஹ கலான்பதி ஸதாம் ஸூக்தைஹி

ஸுதாஸ்யந்திபிஹி 1-6

வாகை மயிரால் வயிரம் குடையலாம்

மாகமல  நூலால் மதகரியை–யூ கமுடன்

கட்டலாம் தேனாற் கடலு ப்பைப் போக்கலாம்

மட்டியைச் சீராக்கலாமோ —6

முட்டாளுக்கு வலியப் போய் நல்ல வார்த்தை சொல்லி மாற்றிவிட முயலுவோர்

தாமரை மலர்த் தண்டுகளால் ஒரு யானையைக் கட்டிப்போட நினைப்பவரே,

சீரிஷ/அனிச்ச மலரின் காம்பை வைத்து வைரத்தைத் துளை போட நினைப்பவரே

ஒரு சொட்டுத் தேன் துளி விட்டு கடலின் உப்புத்தன்மையை நீக்க விரும்புபவரே (ஆவர்)- 1-6

Xxxx

பஞ்ச தந்திரக் கதைகள் எழுதிய விஷ்ணு சர்மாவும் இதே கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்

விஷ்ணு ஸர்மா சொல்கிறார்,

பெரியதொரு மரத்தை வாளால் வெட்டமுடியாது;

பெரியதொரு பாறையை வாளால் பிளக்கமுடியாது;

குருவியின் புத்திமதி, வாழ்க்கையை எளிதானது

என்ற கொள்கையுடைய குரங்குகளுக்குப் பயன் தராது;

மேலும் ஒரு ஸ்லாகத்தில் சொல்கிறார்,

தகுதியற்றவனுக்குச் சொல்லும் புத்திமதி

வீட்டில் ஏற்றிய ஒளிமிக்க விளக்கை

குடத்திலிட்டு மூடி வைப்பதை ஒக்கும்

—subham—

Tags- Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 2 அறப்பளீசுர சதகம், பர்த்ருஹரி, பஞ்ச தந்திரம்,  திருத்த முடியாது 

Leave a comment

Leave a comment