London Murugan Temple chief priest Sri Naganatha Sivnm started the event of Nagrathar Chettiyar Makara Nonbu by firing the first shot.in London on 28-10-2023. London Swaminathan was the Chief Guest.
Post No. 12,648
Date uploaded in London – – – 29 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்து மததத்திற்கு நகரத்தார் செய்த சேவை என்ற தலைப்பில் பேசுவதற்கு லண்டன் நகரத்தார் சங்கத்தினர் என்னை அழைத்திருந்தனர் .இந்த நிகழ்ச்சி 28-10-2023ல் லண்டன் முருகன் கோவிலில் நடந்ததது. நான் நான்கு விஷயங்களை எடுத்துக்கொண்டேன். அதில் இலங்கையில் நகரத்தார் சமூகத்தினர் செய்த கோவில் பணிகள் பற்றி நான் சொன்ன விஷயங்கள் பின் வருமாறு :—
(இதுவரை நன் சேகரித்த விஷ்யங்களையே அளித்துள்ளேன். இன்னும் ஏராளமான தகவல்கள் விடுபட்டிருக்கலாம். அவர்கள் நடத்தும் கோவில்களில் தேவார திருவாசக பள்ளிகள் நடத்தப்படுகின்றன; தமிழ்ப் பள்ளிகளையும் நடத்துகிறார்கள் ; பல நூல்களை வெளியிடுகிறார்கள். தமிழ் அறிஞர்களை அழைத்து சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கிறார்கள். கோவில்களில் அவர்கள் பெயர்களில் கட்டளைகளை உருவாக்கி பூஜைகள் நடக்கவும் உதவி செய்கிறார்கள் )
Chief Guest London Swamiathan addressed over 00 Chettiyar people
இலங்கையில் இந்திய வணிகர்கள் நிறைய கோவில்களுக்கு பொருளுதவி செய்து மாபெரும் கோபுரங்களை எழுப்பினர். மலேசியா முதலிய இடங்களில் அவற்றை எழுதிவைத்ததுபோல இலங்கை விஷயத்தில் நகரத்தார் சேவை பற்றி யாரும் தொகுத்து எழுதியதாகத் தெரியவில்லை. ஆகையால் முதலில் நான் ஏற்கனவே தொகுத்தும் எழுதியும் வைத்துள்ள தகவல்களைத் தருகிறேன்.
40.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில் , யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு செட்டியார் கோவில் என்ற பெயரும் உண்டு; காரணம், வைத்திலிங்க செட்டியார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் இலங்கையில் இந்துமதம் தழைக்க வித்தூன்றிய ஆறுமுக நாவலர், முதலில் சமயச் சொற்பொழிவு ஆற்றிய கோவில் இதுதான்
இந்தியாவிலிருந்து வந்த கோபால செட்டியார் வணிகம் மூலம் பெரும் பொருளை ஈட்டினார். இதனால் அப்போது ஆட்சி செய்துவந்த ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது அவருடைய மகன்தான் வைத்திலிங்க செட்டியார். அவரும் முத்துக்குளித்தல் முதலிய தொழில்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினார். மேலும் தனது செல்வத்தை தர்மப்பணியில் செலவிட்டார். கூழங்கைத் தம்பிரான் கூறியபடி சிவன் கோவிலை எடுப்பித்தார். அங்கே வைத்தியநாதனையும் தையல் நாயகியையும் பிரதிஷ்டை செய்தார்.
வண்ணார்பண்ணை கோவில் உருவான வரலாறு சுவையான வரலாறு. போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் இலங்கையிலுள்ள 4000 கோவில்களில் பெரும்பாலானவற்றை தரை மட்டமாக்கி அந்தக் கற்களைக் கொண்டு சர்ச்சுகளையும் கோட்டைகளையும் கட்டினார்கள். நெதர்லாந்து/ ஹாலந்து நாட்டிலுள்ள கிறிஸ்தவர்ளுக்கு மதவெறி கொஞ்சம் குறைவு . ஆகையால் இந்துக் கோவில்களைக் கட்டுவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அதற்கும் பணம் வசூலித்துவிடுவார்கள் ; வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் அல்லவா !
பனங்காமம் நல்ல மாப்பாண வன்னியனை தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்தனர் டச்சுக்காரர்கள் . வைத்திலிங்க செட்டியார் தனது செல்வாவாக்கைப் பயன்படுத்தி விடுதலை செய்தார். அதற்கு நன்றி பாராட்டும் முகத்தான், அவர் 20,000 பனை மரங்களை கோவில் கட்டுவதற்கான வேலைகளுக்கு அளித்தார் . அவரை விடுதலை செய்ய, செட்டியார் கொடுத்த தொகை 1200 டாலர். அது அக்காலத்தில் பெரும் தொகை . டச்சுக்காரர்கள் எவ்வளவு கில்லாடிகள் என்பதை அறிய இது உதவும் .
மாப்பாண வன்னியன் பனை மர நன்கொடையோடு நிற்கவில்லை. வைத்திய நாத சுவாமி- தையல் நாயகி அம்மனின் நித்திய பூஜைக்காக துணுக்கை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தையும் கோவிலுக்கு தானம் செய்தார் அதன் நெல்வயல்களும் குளமும் கோவிலுக்குச் சொந்தமாயின.
xxxxx
43.காரைநகர் சிவன் கோவில், ஈழத்து சிதம்பரம் , யாழ்ப்பாணம்
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் கோவில் யாழ்ப்பாண நகரிலிருந்து 10 மைல் தொலைவில் , காரை நகரில் திண்ணபுரம் பிரிவில் அமைந்துள்ளது. பழங்கால ஐயனார் கோவில் இருந்த இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது . வன்னி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 1518-ம் ஆண்டில், தமிழ் நாட்டிலிருந்து வந்த முத்து மாணிக்கம் செட்டியார் இப்போது கோவில் இருக்கும் இடத்திற்கு அருகில் ஐயனாரை வழிபட கோவில் கட்டினார். 1618-ம் ஆண்டில் இதை சூறையாட கிறிஸ்தவ மதவெறியர்கள் போர்ச்சுகல் நாட்டிலிருந்து வந்தனர். தெய்வீக ஆற்றலால் கோவில் தப்பித்ததாம். அவர்களைத் தொடர்ந்து வந்த ஹாலந்து நாட்டு கிறிஸ்தவ வெறியர்கள் 1658-ம் ஆண்டில் கோவிலைத் தரை மட்டம் ஆக்கினர்.
Banana Tree Cutting
One more shot by another priest, followed by Nagarathar Children and elders.
xxx
கேப்டன் கார்டன் கோவில்/ தீவுக்கோவில் The Captain’s Garden Kovil, is located on Kovil Street, Colombo
இது கொழும்பு நகரில் உள்ள கோவில்
டச்சுக் காரர்கள் ஆட்சிக்காலத்தில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் கட்டப்பட்டது . தென்னிந்தியாவிலிருந்து வியாபாரம் செய்ய வந்த வணிகர்கள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள். ஒரு டச்சுக்கார அதிகாரிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இங்குள்ள பிள்ளையாரை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்று கேள்விப்பட்டு வணங்கினார். அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன், அவர் ஏக்கர் கணக்கில் நிலத்தை தானம் செய்யவே, செட்டியார்கள் அங்கே கோவிலை எழுப்பினார்கள் .
Xxxxx
கேதீஸ்வரம் ஆலயம்
கேதீஸ்வரம் ஆலயம் இருந்த இடத்தையும் அந்த இடத்தை சுற்றியுள்ள 43 ஏக்கர் நிலப் பகுதியையும் திரு. இராம.அரு.பழனியப்ப செட்டியார், அன்றைய பிரித்தானிய அரசிடம் விலைக்கு வாங்கினார். கொழும்பு நகர நகரத்தார் சமூகத்தினர், மற்றும் மலேசியாவில் உள்ள பக்தர்கள் ஆகியோரும் ஈழத் தமிழர்களுடன் சேர்ந்து கோவிலை ஆகம முறைப்படி அமைத்தனர். அங்கு பூஜைகள் நடக்கவும் அவர்கள் உபயம் ஏற்படுத்தினார்கள். இன்று நேரம் தவறாது சீரும் சிறப்புடனும் வழிபாடுகள் நடக்கின்றன. கொழும்பு நகர நாட்டுகோட்டை நகரத்தார் சார்பாக விசேஷ காலங்களில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்புற நிகழ்ந்து வருகிறது
Xxxx
வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் , திருகோணமலை மாவட்டம்
மகாவலி கங்கை நதியின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் சித்திரவேலாயுத சுவாமி கோவில் உள்ளது. திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை செல்லுவோர் தங்கிச் செல்லும் இடம் இது.
இந்தக் கோவிலின் தோற்றம் சுவையான கதை ஆகும். நல்லை நாத செட்டியார் என்பவர். தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை செய்துவந்தார். அவர் திருகோண மலைக்கு வந்து அங்கிருந்து யாத்திரையைத் துவங்குவார். பாதி தூரத்தில் உள்ள வெருகலில் எல்லோரும் தங்கி விட்டு கதிர்காம யாத்திரையைத் துவக்குவது போல செட்டியாரும் தங்கினார்.
. அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் முருகப்பெருமான் தோன்றி அங்கு ஒரு ஆலயம் அமைக்க கட்டளையிட்டார். இதற்கான பொருளும் அவரிடம் வந்து சேரும் என்றும் கனவில் உரைத்தார். கோவில் கட்டுவதற்குத் தேவையான பணம் புதையலில் கிடைக்கும் என்றும் கூறி, முருகன் மறைந்தார் ; இறைவன் சொன்னபடியே அவருக்குப் பொக்கிஷமும் கிடைத்தது .செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், திரவியம் எடுத்த இடம் என்னும் பெயரால் அழைக்கப்படுறது..
xxxxx
செட்டிகுளம் சந்திர சேகரன் கோவில்
மதவாச்சி – மன்னார் சாலையில் மதவாச்சியிலிருந்து 15 மைல் தூரத்தில் விநாயகர் சிலை வழிபாட்டில் உள்ளது . சாலைக்கு அப்பால் குளமும், வவ்வாலை என்னும் இடமும் உள்ளன
மதுரை நகரைச் சேர்ந்த ஒரு செட்டியார் கப்பல் உடைந்துபோய், முத்துக்குளிக்கும் மீனவர்களுடன் இவ்வூரில் கரை சேர்ந்தனர். இது நடந்தது. கி .பி. 247ம் ஆண்டில்.வீர நாராயண செட்டியார் என்ற பெயர் உடைய அவர் வவ்வாலையில் சந்திரசேகரனுக்கு கோவில் கட்டினார். என்று VANNI MANUAL, J P LEWIS வன்னி மானுவல் எழுதிய ஜெ.பி. லூயிஸ் குறிப்பிடுகிறார்
Xxxxx
மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் கோபுரம் கட்டுவதற்கு தியாகராஜ செட்டியார் பொருளுதவி செய்தார்
XXXX
கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்—
கோவில்பட்டி தாலுகா இருக்கன்குடியிலிருந்து பூமியிலிருந்து மண் எடுத்து வந்து இந்தக் கோவிலைக் கட்டினர்
இலங்கையில் வாழ்ந்த திருவிளங்க நகரத்தார் எனப்படும் வணிக வைசிக செட்டியார் சமூகத்தவர்களின் பரிபாலனத்தின் கீழ் 1864 ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் இயங்கி வருகின்றது.
Xxxxx
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்
பிற்காலத்தில் வீராசாமி செட்டியார் என்பவர் ஏழு பிரகாரங்கள் சூழ அம்பாளை நிறுத்தி கோவில் கட்டினார் என்று தல வரலாறு செப்புகிறது; செட்டியார் கட்டிய கோவிலை 1620-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் உடைத்தபோதும் அம்பாள் விக்கிரகத்தை மறைத்து வைத்திருந்தனர் 1882-ம் ஆண்டில் அம்பாள் விக்ரகம் நாகபூஷணி என்ற பெயரில் பிரதிஷ்டை ஆனது. ஒவ்வொரு கட்டிடமும், சந்நிதிதியும் உருவாக பல பக்தர்கள் பொருளுதவி செய்தனர்
— subham—-
From another website:–
தமிழகத்தின் செட்டி நாட்டிலிருந்து 1760 ஆம் ஆண்டுளுக்கு முன்பே வர்த்தக நோக்குடன் இலங்கைக்கு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தமது சொந்தச் செலவில் நாட்டின் பல நகரங்களில் கோயில்களைக் கட்டி நிர்வகித்து வந்தார்கள். செட்டியார்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு, காலி, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மாத்தளை, யாழ்ப்பாணம், கம்பளை, இரத்தினபுரி, குருணாகல், புசல்லாவை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, மாதம்பை, புத்தளம் ஆகிய நகரங்களில் கோயில்களை அமைத்தார்கள்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கதிர்காமக் கந்தன் ஆலய உற்சவத்திற்காகக் கொழும்பிலிருந்து வருடா வருடம் யாத்திரை சென்று வந்தார்கள்.
கொழும்பு செட்டியார் தெருவில் 1939 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயம், முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துடன் இணைந்து ஆடிவேல் விழாவினை நடத்துகிறது.
—- subham—–
Tags – இலங்கை, நகரத்தார், செட்டியார், கோவில்கள், சுவாமிநாதன் உரை, மகரநோன்பு, லண்டன் முருகன் கோவில், மாநோன்பு. London Temple