மாரதான் நம்பிக்கை! நடந்தவை தான் நம்புங்கள் (Post No.12,647)

picture- Terry Fox in Marathon of Hope

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,647

Date uploaded in London –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 8

ச.நாகராஜன்

நதியைக் கடக்க அடம் பிடித்த யானை!

நேபாளத்தில் ஒரு சம்பிரதாயம் உண்டு.

ஒரு அரசன் இறந்து போகும் போது அவனது ஆவியை பத்திரமாகக் கடைத்தேறச் செய்ய ஒரு சடங்கு உண்டு.

அதன் படி புனித நதியான பாக்மதி ஆற்றை ஒரு யானை கடக்க வேண்டும். அப்படி அது கடந்தால் அந்த அரசனது ஆவி அதன் முதுகின் மீது உட்கார்ந்து பத்திரமாகச் சென்று கடைத்தேறும்.

ஆனால் இளவரசர் தீபேந்திராவின் ஆவி கடைத்தேறும் சம்பவத்தில் நடந்ததோ வேறு. தீபேந்திரா – பிறப்பு : 27-6-1971; மரணம் : 4-6-2001.

1971ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி திடீரென்று தீபேந்திரா தனது அரண்மனையில் தந்தை மன்னர் பீரேந்திரா, தாயார் ராணி ஐஸ்வர்யா, தம்பி, தங்கை மற்றும் அரண்மனை குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றார். பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் மூன்று நாட்கள் கோமாவில் இருந்து அவர் பின்னர் இறந்தார். அந்த மூன்று நாட்களும் அவரே அரசராக இருந்தார்,

சம்பிரதாய வழக்கப்படி யானை பாக்மதி ஆற்றில் இறங்கியது. ஆனால் அது முன்னேறிப் போக மறுத்தது.

கோபமடைந்த மக்கள் அழுகிய பழங்களை அதன் மீது வீசி எறிந்தனர். செருப்புகளயும் வீசினர். அது அடியும் வாங்கியது.

உடனே கோபத்தால் சீறி பிளிறி திரும்பி கூட்டத்தை நோக்க மக்கள் அலறி அடித்து ஓடினர்.

பிறகு ஒருவாறாக சகதி நிறைந்த பாக்மதி ஆற்றை அது கடக்க வைக்கப்பட்டது.

நேபாளத்தில் நடந்த அதிசய நிகழ்ச்சி இது.

மாரதான் நம்பிக்கை!

உலக பிரசித்தி பெற்ற மாரத்தான் ஓட்டம் உலகின் தலையான வீரர்களை அடையாளம் காட்டும் ஒன்று.

இந்தப் பெயரில் அதிசயமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

கனடாவைச் சேர்ந்த டெர்ரி பாக்ஸ் (Terry Fox) 1977ஆம் ஆண்டு அவரது 18ஆம் வயதில் அவரது வலது கால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டார்.

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலைத் துண்டித்தனர் நிபுணர்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அதற்கான ஆராய்ச்சிக்காக அவர் ஒரு நிதி திரட்ட எண்ணினார்.

செயற்கைக் கால் ஒன்று பொருத்தப்பட்டவுடன் ஓட்டத்தின் மூலமாக இந்த நிதியைத் திரட்ட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தனது திட்டத்தை அவர் செயல்படுத்த ஆரம்பித்தார்.

தனது திட்டத்திற்கு அவர் மாரதான் ஆஃப் ஹோப் (Marathon of Hope) என்று பெயர் கொடுத்தார். கனடாவில் நியூபவுண்ட்லேண்டிலிருந்து (Newfoundland) அவர் தனது ஓட்டத்தை ஆரம்பித்தார்.

தினமும் சுமார் 42 கிலோமீட்டர் தூரம் ஓடி 143 நாட்களில் 5373 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தார். அப்போது அவரது புற்றுநோய் அவரை மீண்டும் பாதித்தது. அதனால் அவர் தனது ஓட்டத்தை நிறுத்த வேண்டி வந்தது.

ஆனால் அவரது இந்த சாகஸ செயலைப் பார்த்து வியந்த கனடிய மக்கள் அவரது திட்டத்திற்கு ஏராளமாக நிதி உதவி அளித்தனர்.

ஆனால் அனைவரும் துக்கப்படும்படி புற்று நோயால் அவர் 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 22 தான்!

அவரது நம்பிக்கையை நிஜமாக்கும் வண்ணம் கனடிய மக்கள் ஆண்டுதோறும் ‘டெர்ரி பாக்ஸ் ரன்ஸ்’ என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி விரிவாக்கப்பட்டு கனடா மற்றும் 58 நாடுகளில் ஆண்டு தோறும் நடக்க ஆரம்பித்தது.

லக்ஷக்கணக்கான டாலர்கள் சேர ஆரம்பித்தது. இந்த நிதி கான்ஸரை தீர்க்க உதவும் ஆராய்ச்சிக்கு அளிக்கப்பட்டது.

இந்த டெர்ரி பாக்ஸ் ரன்ஸ் நிகழ்ச்சியை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

***

Leave a comment

Leave a comment